பாடம் 25.1 பட விளக்க அகரமுதலி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 25.1 – பட விளக்க அகரமுதலி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
1. பனிக்கரடி – குறிப்பு வரைக
இது உறைபனி சூழந்த் ஆர்டிக் பகுதியில் காணப்படுகிறது.
இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாட வல்லது.
இதனைத் துருவக்கரடி என்றும் கூறுவர்.
2. பாலில் அடங்கியுள்ள சத்துகள் யாவை?
கால்சியம், பொட்டாசியம்,புரம்
3. உலக அளவில் மிகுதியாக பால் உற்பத்தி செய்யும் நாடு எது?
உலக அளவில் மிகுதியாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.
4. பிண்ணாக்கு என்பது என்ன?
தேங்காய், எள், கடலை போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுத்த பின் மிஞ்சும் சக்கையே பிண்ணாக்கு ஆகும். இது விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
5. பீர்க்கங்காய் எந்த நோயை குணப்படுத்துகிறது?
நார்ச்சத்து மிக்க காய்களுள் ஒன்றான பீர்க்கங்காய் தோல் நோயை குணப்படுத்தும்.
6. பூண்டின் பயன் யாது?
மருத்துவப் பயன்மிக்க ஓர் உணவுப் பொருளான பூண்டு இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது.
7. மனிதரைப் போல் நடக்கும் பறவை எது?
மனிதரைப் போல் நடக்கும் பறவை பெங்குயின்
8. பெங்குயின் பற்றிய குறிப்பெழுதுக
குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும்.
பறவையினத்தை சார்ந்தது ஆனாலும் இதனால் பறக்க முடியாது.
மனிதரின் நடையை போல் அமைந்திருக்கும்.
நீரில் நன்றாக நீந்திச்செல்லும்
9. பேரீச்சம்பழம் பற்றி எழுது?
பேரீச்சம்பழம் பனைவகையைச் சார்ந்தது.
மருத்துவ குணம் உடைய இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகையை நீக்கும்.
10. பொங்கல் விழா எப்போது கொண்டாடுகின்றன? எதற்காக கொண்டாடுகின்றன?
பொங்கல் விழா தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
உணவுப் பொருள்கணை விளைவிக்க உதவும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
11. பெளவம் (கடல்) சிறு குறிப்பு வரைக
கடலை குறிக்கும் சொல் பெளவம் ஆகும்.
பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது.
மீன், நண்டு, முத்து, பவளம் முதலான வளங்களை கடல் நமக்குத் தருகிறது.