Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.25 – தமிழ் மொழியின் பெருமை

பாடம் 25. தமிழ் மொழியின் பெருமை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 25 – தமிழ் மொழியின் பெருமை to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3rd Book Back Answer - Tamil Moliyin Perumai

Class 3 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

தமிழின் இனிமையைப் பாரதியார் எப்படியெல்லாம் புகழ்கிறார்? கலந்துரையாடுக

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”

என்றும், மேலும்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”

என்று தமிழைப் போற்றிப் புகழ்கிறார் பாரதியார்.

சரியான விடையைத் தெரிவு செய்வேன்

1. தமிழுக்கு அழுது என்ற பேர் என்று பாடியவர் ________

  1. பாரதியார்
  2. கண்ணதாசன்
  3. கவிமணி
  4. பாரதிதாசன்

விடை : பாரதிதாசன்

2. செம்மை + மொழி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. செம்மொழி
  2. செம்மொலி
  3. செம்மொளி
  4. செமொழி

விடை : செம்மொழி

3. கீழடி அகழாய்வு நடந்த மாவட்டம் ________

  1. புதுக்கோட்டை
  2. தருமபுரி
  3. சிவகங்கை
  4. திருச்சி

விடை : சிவகங்கை

4. ஆதித்தமிழர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. ஆதி + தமிழர்
  2. ஆதி + தமிளர்
  3. அதி + தமிழர்
  4. ஆதீ + தமிழர்

விடை : ஆதி + தமிழர்

5. பொலிவு இச்சொல்லுக்குரிய பொருள் ________

  1. மெலிவு
  2. அழகு
  3. துணிவு
  4. சிறப்பு

விடை : அழகு

சரி தவறு X எனக்குறியிடுவேன்

1. இயல், இசை, நாடகம் ஆகியன தமிழின் பெருமையை வெளிப்படுத்தின
2. தமிழ் மொழி ஆதித்தமிழர் மொழி இல்லைX
3. வீரம் தமிழரின் பண்புகளுள் ஒன்று
4. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் தொடர் ஆத்திசூடியில் உள்ளது.X
5. சிவகங்கையிலுள்ள கீழடியில் அகழாய்வு நடைபெறவில்லைX

வினாக்களுக்கு விடையளிப்பேன்

1. தமிழ்மொழியின் பெருமைகளுள் இரண்டு எழுதுக.

உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாய் விளங்கி மனித வாழ்விற்க இலக்கணம் கண்ட மொழி.

2. கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் யாவை?

பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், அணிகலன்கள், நமது பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகள் ஆகியவை “கீழடி” அகழாய்வில் கண்பிடிக்கப்பட்ட பொருள்கள் ஆகும்.

3. தமிழரின் பெருமையைக் கணியன் பூங்குன்றனார் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் புறநானூற்றுப் பாடல் தொடர் இன்றளவிலும் ஐக்கிய நாடுகள் அவையில் தமிழ்மொழியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

4. தமிழ்மொழி தொன்மையான இலக்கண நூல் எது?

தொல்காப்பியம்

5. தமிழ்மொழி பற்றி நீவிர் அறிந்த கருத்தை எழுதுக

நம் தாய்மொழியான தமிழ், ஈராயிரம் ஆண்டுகளுக்குமேல் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நாளும் பொலிவுடன் வளர்தமிழாய் தன் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தி வருகிறது.

6. தமிழ்மொழி செம்மொழி என்று ஏன் அழைக்கப்படுகிறது?

தமிழ்மொழியானது பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் திறனுள்ளதால் செம்மொழி அழைக்கப்படுகிறது.

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுவேன்

  1. தொன்மை – பழைமை
  2. அகழாய்வு – நிலத்தை தோண்டி ஆராய்தல்
  3. கேளிர் – உறவினர்
  4. பொலிவு – அழகு
  5. ஆபரணம் – அணிகலன்

சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்து நிரப்புவேன்

Class 3rd Book Back Answer - Tamil Moliyin Perumai - Sariyana eluthai therntheduthu nirappuvenClass 3rd Book Back Answer - Tamil Moliyin Perumai - Sariyana eluthai therntheduthu nirappuven b
சைநாகம்
பாறைகீழடி

அறிந்து கொள்வோம்

லிங்குவா என்பது இலத்தீன் மொழிச்சொல். இச்சொல் மூலம் லாங்வேஜ் என்ற சொல் தோன்றியது. இதனைத் தமிழில் நாம் ‘மொழி’ என அழைக்கிறோம்.

சரியான சொல்லைத் தெரிவு செய்து, சொற்றொடர் உருவாக்குவோம்

1. இயல் என்பது _________ நடை (ஓவியம் / எழுத்து / பேச்சு)

விடை: இயல் என்பது, எழுத்து நடை

2. பாறை ஓவியங்களில் தமிழர்களின் _______ பற்றிய செய்திகள் உள்ளன. (பொழுது போக்கு / நடிப்பு / வீரவிளையாட்டு)

விடை: பாறை ஓவியங்களில் தமிழர்களின் வீரவிளையாட்டு பற்றிய செய்திகள் உள்ளன.

3. பிறமொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால், தமிழ்மொழி _______ ஆகும். (தென்மொழி / செல்வமொழி  / செம்மொழி)

விடை: பிறமொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால், தமிழ்மொழி செம்மொழி ஆகும்.

4. நடுவண் அரசு தமிழைச் ‘செம்மொழி’ என ______ ஆம் ஆண்டு அறிவித்தது. (2006 / 2001 / 2004)

விடை: நடுவண் அரசு தமிழைச் ‘செம்மொழி’ என 2004 ஆம் ஆண்டு அறிவித்தது.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தெரிவு செய்வேன்

1. தம்மைத் தமிழ் மாணவன் என்றே உலகோருக்கு அறியச் செய்தவர் _______

  1. வீரமாமுனிவர்
  2. ஜி.யு.போப்
  3. கால்டுவெல்
  4. ஈராஸ் பாதிரியார்

விடை : ஜி.யு.போப்

2. உலகப்பொதுமறை என அழைக்கப்படும் நூல் _______

  1. திருக்குறள்
  2. தொல்காப்பியம்
  3. சிலப்பதிகாரம்
  4. கம்பராமாயணம்

விடை : திருக்குறள்

வினாக்களுக்கு விடையளிப்பேன்

1. தமிழ்மொழியின் பெருமையை பாரதிதாசன் எவ்வாறு பாடுகிறார்?

“தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

எனப் பாரதிதாசன் தமிழின் பெருமையைக் கூறுகிறார்.

2. தொல்காப்பியம் எவற்றையெல்லாம் எடுத்துரைக்கிறது?

தமிழர்களின் எழுத்து, சொல், உணர்வு, ஒழுக்கம், வாழ்வு, பண்பாடு ஆகியவற்றை தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது.

3. பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் மூலம் நாம் அறிவது யாது?

தமிழர்களின் வீரம், கொடை, பண்பாடு, விருந்தோம்பல் முதலான பண்புககளை பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் தெளிவாக விளக்குகின்றன.

பழத்திற்குள் உள்ள சரியான சொல்லைச் தெரிவு செய்து சொற்றொடர் உருவாக்குவேன்

Class 3 Tamil Solution - Lesson 24 பழத்திற்குள் உள்ள சரியான சொல்லைச் தெரிவு செய்து சொற்றொடர் உருவாக்குக
விடை : இயல் என்பது எழுத்து நடை
Class 3 Tamil Solution - Lesson 24 பழத்திற்குள் உள்ள சரியான சொல்லைச் தெரிவு செய்து சொற்றொடர் உருவாக்குக
விடை : பிற மொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால் தமிழ் மொழி செம்மொழி ஆகும்
Class 3 Tamil Solution - Lesson 24 பழத்திற்குள் உள்ள சரியான சொல்லைச் தெரிவு செய்து சொற்றொடர் உருவாக்குக
விடை : பாறை ஓவியங்களில் தமிழர்களின் வீரம் சாரந்த விளையாட்டு பற்றிய செய்திகள் உள்ளன.
Class 3 Tamil Solution - Lesson 24 பழத்திற்குள் உள்ள சரியான சொல்லைச் தெரிவு செய்து சொற்றொடர் உருவாக்குக
விடை : நடுவண் அரசு 2004 ஆம் ஆண்டு தமிழைச் “செம்மொழி” என அறிவித்தது.

சிந்திக்கலாமா

இனியன் தன் நண்பர்களிடம் பிற மொழிகள் கற்பதிலேயே, ஆர்வம் காட்டுவேன் என்று கூறுகிறான்.வீனா தன் தோழிகளிடம் பிற மொழிகளையும் கற்பேன் தமிழ் மொழிக்கு முதலிடம் தருவேன். ஏனெனில் தாய்மொழியே சிந்திக்கும் திறனை வளர்க்கும் என்கிறாள்.

இனியன், வீணா இவர்களின் பேச்சிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வது என்ன?

இனியன் பிற மொழிகளில் காட்டும் ஆர்வத்தை தமிழ் மொழில் காட்டுவதாக தெரியவில்லை.

வீணா பிற மொழிகளையும் கற்கிறாள். அதே சமயம் தமிழுக்கு முதலிடம் தருகிறான். ஏனெனில் தாய்மொழிதான் சிந்திக்கும் திறைன் வளர்க்கும் என்பதை வீணா அறிந்திருந்தாள்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment