பாடம் 26. அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 26 – அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. விமானம் பறப்பது பற்றிய செய்தியை ________ வாயிலாக இளவரசி அறிந்து கொண்டாள்
- கணினி
- தொலைக்காட்சி
- வானொலி
- அலைபேசி
விடை : தொலைக்காட்சி
2. ஆர்வம் இச்சொல்லின் பொருள் ______
- வெறுப்பு
- மறுப்பு
- மகிழ்ச்சி
- விருப்பம்
விடை : விருப்பம்
3. உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________
- குட்டை
- நீளம்
- நெட்டை
- நீண்ட
விடை : குட்டை
4. தொலைக்காட்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- தொலை + காட்சி
- தொல்லை + காட்சி
- தொலைக் + காட்சி
- தொல் + காட்சி
விடை : தொலை + காட்சி
5. புயலி, மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் எதன் பயணம் பாதிக்கப்படுவதில்லை என்பதை குறும்படம் விளக்குகிறது?
- பேருந்து
- வானூர்தி
- மகிழுந்து
- மதிவண்டி
விடை : வானூர்தி
6. குறுமை + படம் இதனைச் சேர்த்து சேர்த்தெழுதக் கிடைப்பது ________
- குறுபடம்
- குறுமைபடம்
- குறும்படம்
- குறுகியபடம்
விடை : குறும்படம்
னாக்களுக்கு விடையளிப்பேன்
1. பூங்குழலியும், இளவரசியும் வானத்தில் எதைக் கண்டனர்?
பூங்குழலியும், இளவரசியும் வானத்தில் விமானத்தைக் கண்டனர்.
2. இடி மழை வந்தால் மரத்தடியில் ஒதுங்கி நிற்க கூடாது ஏன்?
மரத்தடியில் நின்றறால், இடிதாக்கி உயிர்களுக்கு ஆபத்து
ஏற்படும் எனவே இடி மழை வந்தால் மரத்தடியில் ஒதுங்கி நிற்க கூடாது.
3. இளவரசி தொலைக்காட்சியில் என்னவெல்லாம் பார்த்ததாக கூறினாள்?
தொலைக்காட்சியில் பொம்மைப் படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் செய்து பார்ப்போம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை இளவரசி பார்த்ததாக கூறினாள்
4. வானில் பறக்கும் விமானம் எதனால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்?
வானில் பறக்கும் விமானம் புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்.
கதையைப் படித்து வினாக்களுக்கு விடையளிப்பேன்
தவளை ஒன்று மிகவும் உடல்நலம் குன்றியிருந்தது. அதன் குட்டி, தன் தாயைக் காப்பாற்ற நினைத்தது. மாலைநேரம் முடிவதற்குள் மலைமேல் ஏறி, மூலிகை கொண்டுவர நினைத்தது. அந்த மலையில் ஏராளமான பாம்புகள் வாழ்ந்து வந்தன. பாம்புகளால் தனக்குத் தீங்கு நேரிடும் என்று நினைத்தது குட்டித் தவளை. தன் அறிவைப் பயன்படுத்திச் சென்றால்தான் மாலைக்குள் திரும்ப முடியும் என்று நினைத்தது. மலையில் ஏறத் தொடங்கியதும், அந்தக் குட்டித் தவளை பேசத் தொடங்கியது. “முன்னே செல்லும் பருந்தாரே! பின்னே பெரிய கீரியார் மெல்ல வருகிறார். சற்று பொறுத்தே செல்லுங்கள்” என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே சென்றது. பாம்புகள், குட்டித் தவளை கூறுவதைக் கேட்டு ஓடி ஒளிந்துகொண்டன. குட்டித் தவளை, தன் கூர்சிந்தனைத் திறனால் காலம் கடத்தாமல் விரைந்து சென்று, மூலிகையைப் பறித்துக் கொண்டுவந்து தன் தாயைக் காப்பாற்றியது.
1. உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தது எது?
- தாய்த் தவளை
- பருந்து
- குட்டித் தவளை
விடை: தாய்த் தவளை
2. குட்டித் தவளை, தனக்கு யாரால் தீங்கு ஏற்படும் என நினைத்தது?
- பாம்பு
- கீரி
- தவளை
விடை: பாம்பு
3. குட்டித் தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எந்தெந்தப் பெயர்களைக் கூறியது?
- பருந்து, பாம்பு
- கீரி, மலை
- பருந்து, கீரி
விடை: பருந்து, கீரி
4. குறித்த நேரத்திற்குள் ஒரு செயலைச் செய்து முடிப்பது எதைக் குறிக்கும்?
- பணிவு
- காலந்தவறாமை
- நேர்மை
விடை: காலந்தவறாமை
கூடுதல் வினாக்கள்
பறவைகளின் ஒலிகளை அறிந்து கோடிட்ட இடங்களை நிரப்புவேன்
- காகம் – கரையும்
- மயில் – அகவும்
- கிளி – பேசும்
- ஆந்தை – அலறும்
- சேவல் – கூவும்
அறிந்து கொள்வோம்
தொலைக்காட்சியைக் கண்டறிந்தவர் – ஜான் லெகி |
பெயர்டுவிமானத்தை கண்டறிந்தவர்கள் – ஆல்பர்ட் ரைட், வில்பர்ட் |
ரைட்வானொலியைக் கண்டறிந்தவர் – மார்க்கோனி |
சிந்திக்கலாமா
உன் பொருளை நீ எவ்வாறு பாதுகாப்பாய்?
நான் என் பொருட்களை பெட்டியில் வைத்து புத்தகப் பைக்குள் வைத்திருப்பேன்; தேவையான நேரத்தில் எடுத்தி பயன்படுத்தி விட்டு மீண்டும் பத்திரமாக பைக்குள் வைத்து விடுவேன்.
சொந்த நடையில் கூறுக
தொலைக்காட்சியின் நன்மைகளைப் பற்றி உம் சொந்த நடையில் கூறுக
சொற்பொழிவு, இசை, நாடகம் போன்றவற்றை நேரில் கண்டுகளிக்கலாம்.
வீட்டில் இருந்து கொண்டே பல வேலைகளின் நுணுக்கங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
பல நாடுகளின் இயற்கைக் காட்சிகள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை நேரில் பார்ப்பது போன்று கண்டு மகிழலாம்.
வெகு தொலைவில் நடக்கும் விளையாட்டுகளை வீட்டிலிருந்தே கண்டு மகிழலாம்.
குடும்ப நலத்திட்டம், குழந்தை வளர்ப்பு, நோய் தடுப்பு முறைகள் ஆகியவற்றை நேரில் காட்டுவதால் மக்களுக்கு நன்றாக விளங்குகிறது.