பாடம் 27. நல்வழி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 27 – நல்வழி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. உலகூட்டும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- உல + கூட்டும்
- உலகு + கூட்டும்
- உலகு + ஊட்டும்
- உலகூட்டு + உம்
விடை : உலகு + ஊட்டும்
2. அந்நாளும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- அந் + நாளும்
- அ + நாளும்
- அந்நா + ளும்
- அந்த + நாளும்
விடை : அ + நாளும்
3. இசைந்து இச்சொல்லின் பொருள் _______
- மறுத்து
- பாடி
- ஒப்புக்கொண்டு
- உதவி
விடை : ஒப்புக்கொண்டு
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?
நல்வழி என்னும் நூலை எழுதியவர் ஒளவையார்
2. உலக மக்களுக்கு உணவாய் அமைவது எது?
உலக மக்களுக்கு உணவாய் அமைவது நீரூற்று ஆகும்
3. நல்ல குடிப்பிறந்தாரின் இயல்பு எத்தகையது?
நல்ல குடிப்பிறப்பில் தோன்றியவர்கள், வறுமை நிலையில் வாடினாலும், தம்மிடம் வந்து பொருள் தருக எனக் கேட்போருக்கு இல்லை எனக் கூறாது தம்மால் முடிந்தவரை கொடுத்து உதவுவார்கள்.
4. ஊற்று நீரைக் கொடுப்பது எது?
ஆற்று மணலைத் தோண்டுகிறபோது சுரக்கின்றது ஊற்று
இரண்டாம் எழுத்தை மாற்றிப் புதிய சொல் உருவாக்குவேன்
1. படம் | பழம். பணம், பதம் |
2. நலம் | நகம், நயம், நடம் |
3. உதவு | உணவு, உயவு, உறவு |
4. பத்து | பந்து, பழுது |
5. குயில் | குரல், குணால், குழல் |
கூடுதல் வினாக்கள்
இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைப் பாடலிருந்து எழுதுவேன்
ஆற்று – ஊற்று – ஏற்றவர்க்கு |
பெருக்கற்று – பெருக்கால் |
நல்ல – இல்லை – நல்கூர்ந்தார் |
பாடலை நிறைவு செய்வேன்
ஆற்று | நீரில் | துள்ளியே |
அழகாய் | நீந்தும் | மீன்களே! |
வாழும் | வரை | நீங்களே |
வண்ண | வண்ண | மீன்களே! |
அன்னை | கடலில் | வாழும் |
சின்ன | சின்ன | நண்பர்களே! |
சிரித்து | மகிழ்ந்து | வாழுங்கள் |
சிற்றினம் | நிதம் | காணுங்கள் |
பொருத்துவேன்
1. நல்ல | மனம் |
2. ஆற்று | குணம் |
3. மணல் | நீர் |
4. உதவும் | வீடு |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – இ, 4 – ஆ |
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. ஆற்று மணல் என் சுடுகிறது?
ஆற்றில் நீர் வற்றியதால் அதன் வறண்ட மணல் பகுதி, வெப்பதால் சூடேறி பாதங்களை சுடுகிறது.
2. நல்வழி – குறிப்பு வரைக
நாம் வாழ்வின் கடைபிடிக்க வேண்டிய நல்லநெறிகளைக் கூறுவது நல்வழி.
இதனை இயற்றியவர் ஒளவையார்.
இந்நூல் கடவுள் வாழ்த்தோடு மொத்தம் 41 வெண்பாக்கள் உள்ளன.
அறிந்துகொள்வோம்
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு |
– திருக்குறள்
ஐயம் இட்டு உண் – ஆத்திச்சூடி
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுப்பேன்
- ஆற்றின் ஓரம் கரை. ஆடையின் இருப்பது கறை (கரை / கறை)
- காட்டில் வாழ்வது புலி. கடையில் விற்பது புளி (புலி / புளி)
- மனிதர் செய்வது அறம். மரத்தை அறுப்பது அரம் (அறம் / அரம்)
- மீனைப் பிடிப்பது வலை. கையில் அணிவது வளை (வளை / வலை)
- பொழுதை குறிப்பது வேளை. பொறுப்பாய்ச் செய்வது வேலை (வேலை / வேளை)
- ஒழுக்கத்தை குறிப்பது திணை. உணவு பயிரைக் குறிப்பது தினை (திணை / தினை)
- உயர்ந்து நிற்பது மலை. உனக்குப் பிடிக்கும் மழை (மலை / மழை)
- வீரத்தைக் குறிப்பது மறம். விறகைத் தருவது மரம் (மரம் / மறம்)
- விடிந்த பின் வருவது காலை. வீரத்தால் அடங்குவது காளை (காளை / காலை)
- சான்றோர் வெறுப்பது கள். சாலையில் கிடப்பது கல் (கல் / கள்)
வேறுபட்ட வண்ணத்தில் உள்ள எழுத்துக்களைச் சேர்த்தால் கிடைக்கும் ஆடை வகைகளை எழுதுவேன்
பள்ளம் | அரும்பு | பார்த்திபன் | ஆர்த்தி |
விடை : பருத்தி |
பருந்து | வட்டம் | கசடு | |
விடை : பட்டு |
கம்பு | பம்பரம் | அப்பம் | தக்காளி |
விடை : கம்பளி |