பாடம் 3. தனித்திறமை
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 3 – தனித்திறமை to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வாங்க பேசலாம்
காட்டின் அரசனாக சிங்கமே இருக்க வேண்டுமா? புலி காட்டுக்கு அரசனாக இருப்பது குறித்து உனது கருத்து என்ன? வகுப்பறையில் விவாதிக்க…
ஈஸ்வரன் : புலி தான் சிங்கத்தைக் காட்டிலும் வீரம் மிகுந்தது. வேட்டையாடுவதிலும் புலி தான் சிறந்தது.
அருண் : சிங்கம் தான் ராசா! சிங்கத்தின் கர்ஜனை கேட்டிருக்கிறாயா?
அய்யனார் : வண்டலூர் பூங்காவில் கேட்டிருக்கினேறன்.
கோமளா : நான் நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன். புலி ஒன்று மானை வேட்டையாடியது. ஒர பாய்ச்சல் தான் ஆனால் சிங்கமோ பாவம் பாய்ந்தோடி விட்டது.
யூசப் : ஆண் சிங்கம் நடந்து வரும் கம்பீரத்துக்கு புலி இணையாகுமா!
லட்சுமணன் : காட்டுக்கு ராஜா என்றால் சிங்கம் தான்!
இசக்கிமுத்து : நம்ம ஊர் காட்டுப் பகுதிகளில் தான் சிங்கம் கிடையாதே.
மாயாண்டி : அப்ப நம்ம ஊர் காடுகளில் அரசன் புலி தான்.
1. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “தகுதி” இச்சொல் உணர்த்தும் பொருள் …………………………………..
- தரம்
- மரம்
- கரம்
- வரம்
விடை : தரம்
2. “பகைவர்கள்” இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………………
- நண்பர்கள்
- எதிரிகள்
- அயலவர்கள்
- சகோதரர்கள்
விடை : நண்பர்கள்
3. “பணி” இச்சொல் உணர்த்தும் பொருள் ………………………..
- வாழை
- வேளை
- வேலை
- வாளை
விடை : வேலை
4. “படைத்தளபதி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
- படைத் + தளபதி
- படை + தளபதி
- படையின் + தளபதி
- படைத்த + தளபதி
விடை : படை + தளபதி
5. “எதை + பார்த்தாலும்” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………..
- எதைபார்த்தாலும்
- எதபார்த்தாலும்
- எதைப்பார்த்தாலும்
- எதைபார்தாலும்
விடை : எதைப்பார்த்தாலும்
2. வினாக்களுக்கு விடையளி
1. காட்டில் விலங்குகளின் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
காட்டில் விலங்குகளின் கூட்டம் புலியின் தலைமையில் நடைபெற்றது
2. புலிராஜா, படைத்தளபதி பொறுப்பை யாருக்குக் கொடுத்தார்?
புலிராஜா, படைத்தளபதி பொறுப்பைக் சிங்கக்குட்டிக்கு கொடுத்தார்
3. ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?
ஆந்தைக்கு இரவுக்காவல் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது
4. கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது?
ஆமை, முயல், கழுதை போன்ற விலங்குகள் தகுதியற்றவை எனக் கரடி கூறியது
5. இந்தக் கதையின் மூலம் நீ அறிந்து கொள்வது யாது?
யாரையும் குறைவாக எடை போடக் கூடாது
3. புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக
1. பதுங்கிச் செல்வேன். பாய்ந்து இரையைப் பிடிப்பேன், நான் யார்? | ![]() |
2. இரவில் விழித்தும் பகலில் தூங்கியும் வாழ்வேன், என் கண்களை எல்லாத் திசையிலும் திருப்புவேன், நான் யார்? | ![]() |
3. என் காதுகள் நீண்டிருக்கும் வேகமாக ஓடுவேன், கேரட் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் யார்? | ![]() |
விடை : 1 – இ, 2 – அ, 3 – அ |
4. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக
![]() |
விடை ; விலங்குகள் கூட்டம் காட்டில் நடந்தது |
![]() |
விடை ; ஆந்தையாரே நீங்கள்தாம் இரவுக்காவல் அமைச்சர் |
![]() |
விடை ; முயல் அதி வேகமாக ஓடும் |
![]() |
விடை ; யாரையும் குறைவாக எடை போடக் கூடாது |
5. எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?
விலங்குகள் | பணிகள் |
![]() |
பொருள்களைச் சேகரிக்கும் வேலை |
![]() |
எச்சரிக்கைப் பணி |
![]() |
படைத்தளபதி |
![]() |
இரவுக்காவல் |
![]() |
சமையல் வேலை |
விடை : 1 – இ, 2 – அ, 3 – அ |
6. பெயர் எது? செயல் எது?
பெயர் | செயல் | |
குழலி பாடம் படித்தாள் | குழலி, பாடம் | படித்தாள் |
அமுதன் பந்து விளையாடினான் | அமுதன், பந்து | விளையாடினான் |
மரம் செழித்து வளர்ந்தது | மரம் | செழித்து, வளர்ந்தது |
எழுத்துக்களின் வகைகளை அறிவோமா?
7. உங்கள் பெயரிலும் உங்கள் நண்பர்களின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள மெய்யெழுத்துகளை வட்டமிட்டுக் காட்டுக
நளன் | செல்வன் | சங்கரன் |
குமார் | கதிர் | சத்யா |
கூடுதல் வினாக்கள்
1. குறில் அல்லது குற்றெழுத்துகள் என்றால் என்ன?
அ, இ, உ, எ, ஒ இந்த ஐந்து எழுத்துகளும் ஓசையில் குறுகி ஒலிக்கின்றன. எனவே இவற்றிற்குக் குறில் அல்லது குற்றெழுத்துகள் எனப்படும்.
2. நெடில் அல்லது நெட்டெழுத்துகள் என்றால் என்ன?
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ இந்த ஏழு எழுத்துகளும் ஓசையில் நீண்டு ஒலிக்கின்றன. இவற்றிற்கு நெடில் அல்லது நெட்டெழுத்துகள் எனப்படும்
3. வல்லின எழுத்துக்கள் யாவை?
க், ச், ட், த், ப், ற
4. மெல்லின எழுத்துக்கள் யாவை?
ங் ஞ், ண், ந், ம், ன
5. இடையின எழுத்துக்கள் யாவை?
ய், ர், ல், வ், ழ், ள
6. தனிநிலை எனப்படுவது யாது?.
ஃ என்பது ஆய்த எழுத்து அல்லது தனிநிலை எனப்படும்.