பாடம் 4. கல்யாணமாம் கல்யாணம்!
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 4 – கல்யாணமாம் கல்யாணம்! to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
1. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
- கல்யாணமாம் – கொண்டாட்டமாம்
- ஊர்கோலமாம் – நாட்டியமாம்
- பின்பாட்டாம் – சாப்பாடாம்
2. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
- பூலோக + மெல்லாம்
- பூலோகம் + மெல்லாம்
- பூலோகம் + எல்லாம்
- பூலோக + எல்லாம்
விடை : பூலோகம் + எல்லாம்
2. கல்யாணத்தில் நாட்டியமாடுபவர் …………………..
- பூனை
- ஒட்டகச்சிவிங்கி
- யானை
- குரங்கு
விடை : ஒட்டகச்சிவிங்கி
3. பாலை + எல்லாம் இதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………..
- பாலையெல்லாம்
- பாலைஎல்லாம்
- பாலைல்லாம்
- பாலெல்லாம்
விடை : பாலையெல்லாம்
இணைந்து செய்வோம்
3. கோப்பைகளை அவற்றின் சரியான தட்டுகளோடு பொருத்துக:
1. காணோமாம் | வேளையில |
2. வாங்கி வச்ச | பூனையை |
3. வேளையில | வாங்கிவைத்த |
4. பூனைய | காணவில்லையாம் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
கையும் கைவண்ணமும்
வண்ணமிட்டு மகிழ்க
செயல் திட்டம்
உமது பகுதியில் வழங்கும் நாட்டுப்புறக் கதைகள் இரண்டினை அறிந்து வருக.
1. இடிக்கும் அர்சுனனுக்கு என்ன தொடர்பு?
வனவாசத்தின் போது அர்சுனன் காளபைரவ காட்டில் தவம் செய்யத் தொடங்கினானன். எழுபதடிக்கம்பம் ஒன்றை நட்டு அதன் மேல் இளநீர் ஏழு வைத்து அவற்றின் மேல் ஏழு விளம்பழங்களை வைத்தான். விளாம் பழங்களுக்கு மேல் ஏழு எலுமிச்சைகளை வைத்து அவற்றின் மேல் ஏழு கொட்டைப்பாக்குகளையும் அதற்கு மேல் ஏழு குன்றிமணிகளையும் வைத்தான். குன்றிமணிகளுக்கு மேல் ஏழு கடுகுகளையும் கடுகளுக்கு மேல் ஏழு செப்பூசிகளையும் வைத்தான். செப்பூசிகளின் மீது ஏறி நின்று செய்த தவத்தின் கோரத்தால் வெப்பம் தகித்தது. தேவர்கள் அர்ச்சுனனின் தவத்தை கலைக்க நினைத்தனர். ஆனால் மேகராசன் மின்னலை அர்ச்சுனனுக்கு மணமுடித்து கொடுத்து இடி அஸ்திரமும் கொடுத்தான்.
2. சோம்பேறி மனிதன்
ஒரு ஊரில் சோம்பேறி மனிதன் இருந்தனாம். எந்த வேலையும் செய்யாமல் தின்பதும், தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள் வைத்தியர் வீட்டுக்குக் கூட போக முடியாமல் வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம்.
வைத்தியர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்பொதெல்லாம் சாப்பிடு. சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்திடும்னு சொன்னாராம். சோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம். எதற்கு? எப்போது வேர்குமென்று.
அப்போது அவன் மனைவி சொன்னாளாம் நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும் என்று சோம்பேறியும் தன் துணியை துவைப்பது, தோட்ட வேலை செய்வது. கடைக்கு போவது, நிலத்தில் வேலை செய்வது என்று உழைக்க ஆரம்பித்தான்.
ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும் மறக்கவில்லை. கொஞ்ச நாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான். ஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது. மீதியை வைத்தியரிடம் கொடுத்து கேட்டானாம். “எப்படி பாதி மருந்திலேயே எனக்குக் குணமானது?” என்று
அதற்கு அவர் உன் வியாதி மருந்தால் தீரவில்லை. சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குணமடைந்து விட்டாய். நான் கொடுத்தது மருந்தே இல்லை. வெறும் துளசி, வெல்லம் மட்டுமே கலந்தது என்றார்.
கூடுதல் வினாக்கள்
. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. வெட்கக்கேடு பிரித்து எழுதக் கிடைப்பது
- வெட்கக் + கேடு
- வெட்க + க்கேடு
- வெட்கம் + கேடு
- வெட்கம் + ஏடு
விடை : வெட்கம் + கேடு
2. தாலிகட்டும் வேளையில் காணாமல் போனவர்
- பூனை
- ஒட்டகச்சிவிங்கி
- யானை
- குரங்கு
விடை : பூனை
2. பூனை நுழைந்த இடம்
- வீடு
- சமையல் கட்டு
- எலிவளை
- காடு
விடை : சமையல் கட்டு