பாடம் 1. அன்னைத் தமிழே!
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 1 – அன்னைத் தமிழே! to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சிந்திக்கலாமா!
நாம் வளரும்போதே நம்முடன் சேர்ந்து வளர்வது தமிழ்மொழி எவ்வாறு கலந்துரையாடுக.
கவிதா | அமுதா! நாம் பேசுவது என்ன மொழி? |
அமுதா | நாம் பேசுவது தமிழ்மொழி. |
கவிதா | நாம் ஏன் தமிழ்மொழி பேசுகிறோம்? |
அமுதா | தமிழ் நம் தாய்மொழி அதனாலேயே பேசுகிறோம். |
கவிதா | நாம் எப்போதிலிருந்து தமிழ்மொழி பேசுகிறோம்? |
அமுதா | நாம் எப்போது பேசி பழகுகிறோமோ அப்போதிலிருந்து தமிழ் மொழியை பேசுகிறோம். |
கவிதா | ஏன் தமிழ் மொழியை பேச வேண்டும்? |
அமுதா | நாம் தமிழ் நாட்டில் பிறந்ததனால் தமிழ்மொழி தாய்மொழியாக விளங்குகிறது. ஒவ்வொருவருக்கும் தாய்மொழி உயிர் போன்றது. உயிரை யாராவது வெறுப்பார்களா? அதனாலேயே தாய் மொழியாகிய தமிழ்மொழியைப் பேச வேண்டும். |
கவிதா | அப்படியானால் நாம் வளரும் போதே நம்முடன் சேர்ந்து வளருமா நம்முடைய தாய்மொழி? |
அமுதா | ஆம்! கட்டாயமாக வளரும். எப்படியென்றால், நாம் முதலில் சொல்லிப்பழகிய எழுத்து அ. ஆ” சொல்லியப் பழகிய வார்த்த்தை “அம்மா, அப்பா”. ஆனால் இன்று தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் அறிந்துள்ளோம் வாசிக்கின்றோம். அதைப்போல அதிகமான சொற்களைப் பேசுகின்றோம், எழுதுகின்றோம், வாசிக்கின்றோம். அப்படியென்றால் நம்முடன் சேர்ந்து தமிழ்மொழியும் வளர்ந்துள்ளது என்றுதானே அர்த்தம். அதுதான் உண்மையும் கூட என்பது புரியவில்லையா? |
கவிதா | புரிந்து கொண்டேன். உண்மைதான் அமுதா புரிய வைத்ததற்கு உனக்கு நன்றி! |
அமுதா | நன்றி கவிதா! |
1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “அன்னை + தமிழே” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________
- அன்னந்தமிழே
- அன்னைத்தமிழே
- அன்னத்தமிழே
- அன்னைதமிழே
விடை : ஆ) அன்னைத்தமிழே
2. “பிறப்பெடுத்தேன்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- பிறப் + பெடுத்தேன்
- பிறப்பு + எடுத்தேன்
- பிறப் + எடுத்தேன்
- பிறப்ப + எடுத்தேன்
விடை : பிறப்பு + எடுத்தேன்
3. “மறந்துன்னை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
- மறந்து + துன்னை
- மறந் + துன்னை
- மறந்து + உன்னை
- மறந் + உன்னை
விடை : மறந்து + உன்னை
4. “சிறப்படைந்தேன்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- சிறப்பு + அடைந்தேன்
- சிறப் + அடைந்தேன்
- சிற + படைந்தேன்
- சிறப்ப + அடைந்தேன்
விடை : சிறப்பு + அடைந்தேன்
5. “என்னில்” என்ற சொல்லின் பொருள் ____________________
- உனக்குள்
- நமக்குள்
- உலகுக்குள்
- எனக்குள்
விடை : எனக்குள்
2. வினாக்களுக்கு விடையளி
1. சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் தமிழன்னை ஆவாள்
2. எதைச் சொல்ல முடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
தமிழ்ச் சொல்லினால் தமிழன்னையின் புகழைச் சொல்ல முடியவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
3. இப்பாடலின் ஆசிரியர் அன்னைத் தமிழை எவ்விதம் புகழ்கிறார்?
என் அன்னையாகிய தமிழே! என் உயிரில் கலந்தவளே! என்னை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், என் உடன் சேர்ந்து வளர்பவளே! உன்னைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளேன். சொல்லைக் கொண்டு விளையாடுவதற்குச் சொல்லிக் கொடுத்தவளே! அதே சொல்லினால் உனது புகழை என்னால் கூற முடியவில்லையே! என்று ஆசிரியர் அன்னைத் தமிழை எவ்விதம் புகழ்கிறார்
3. இப்பாடலில் இடம் பெற்றுள்ள ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்களை எடுத்து எழுதுக.
என்னை – என்னில் |
உன்னை – உலகில் |
சொல்லில் – சொல்லித் – சொல்ல |
வளர்ப்பவளே – வளர்பவளே |
4. இப்பாடலில் இடம் பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
வளர்ப்பவளே – வளர்பவளே |
கலந்தவளே – தந்தவளே |
அன்னை – என்னை – உன்னை |
சிந்திக்கலாமா!
மொழியின் சிறப்பைக் கூறும் இரண்டு பாடல்களை எழுதி வந்து படித்து / பாடிக் காட்டுக
1.
தமிழே உன்னை! தேன் என்பேன் பால் என்பேன்தெவிட்டாத சுவை என்பேன் மலர் என்பேன் மணமம் என்பேன்மயக்கும் நல் மது என்பேன் கனி என்பேன் அமுது என்பேன்கவலை நீக்கும் மருந்து என்பேன் கலை என்பேன் சிலை என்பேன்கற்பனை என்பேன் உடல் என்பேன் உயிர் என்பேன்உள்ளத்தின் உணர்வென்பேன் |
2.
தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத் |
5. பாடலை நிறை செய்வோம்
பட்டாம் பூச்சி பறந்து வா பறக்கும் பூவாய் விரைந்து வா பட்டுமேனி ஓவியம் பார்க்க பார்க்கப் பரவசம் தொட்டு உன்னைப் பார்க்கவா தோழனாக ஏற்றுக் கொள்ள வா |
6. சொல் உருவாக்கலாமா?
குழந்தை | அன்னை | அரசர் |
கவியரசர் | தமிழ் மொழி | தந்தை |
சிந்திக்கலாமா!
தமிழ்ச்செல்வி, தமிழரசன்… என்பன போலத் தமிழ்மொழியை மட்டுமே பெயராகப் பயன்படுத்த முடியும |
கூடுதல் வினாக்கள்
1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. அன்னைத் தமிழே பாடலின் ஆசரியர் __________ ஆவார்.
- பாரதியார்
- பாரதிதாசன்
- நா. காமராசன்
- கவிமணி
விடை : நா. காமராசன்
2. “ஆவி” என்ற சொல்லின் பொருள் ………..
- உயிர்
- மரம்
- குதிரை
- உடல்
விடை : உயிர்
3. “கலந்து + அவளே” என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் ______________
- கலந்துஅவளே
- கலந்துவளே
- கலந்தாளே
- கலந்தவளே
விடை : கலந்தவளே
4. “வளர்ப்பு + அவளே” என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________
- வளர்ப்பவளே
- வளர்ப்புஅவேளா
- வளர்த்தவளே
- வளர்அவளே
விடை : வளர்ப்பவளே
5. “மட்டும் + அல்லாமல்” என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________
- மட்டுமல்ல
- மட்டுமல்லாமல்
- மட்டும்அல்லாமல்
- மட்டில்லாமல்
விடை : மட்டுமல்லாமல்
6. “பிறந்து + உள்ளேன்” என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________
- பிறந்துஉள்ளேன்
- பிறந்தள்ளேன்
- பிறத்துள்ளேன்
- பிறந்துள்ளேன்
விடை : பிறந்துள்ளேன்
7. “அன்னையாகி” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- அன்னை + யாகிய
- அன்னை + ஏகிய
- அன்னை + ஆகிய
- அன் + ஆகிய
விடை : அன்னை + ஆகிய
8. “இ + உலகில்” என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________
- இத்துலகில்
- இத்தலகில்
- இவ்வுலகில்
- இஉலகில்
விடை : இவ்வுலகில்
2. வினாக்களுக்கு விடையளி
1. நா.காமராசனின் உயிரல் கலந்தவள் யார்?
அன்னையாகிய தமிழே! நா. காமராசனின் உயிரில் கந்தவள் ஆவாள்.
2. நா.காமராசனை வளர்ப்பது யார்?
நா.காமராசனை வளர்ப்பவள் தமிழ் அன்னை ஆவாள்.
3. நா. காமரசானுடன் சேர்ந்து வளர்பவள் யார்?
நா. காமரசானுடன் சேர்ந்து வளர்பவள் தமிழன்னை ஆவாள்.
4. நா. காமரசானுடன் எதற்காக இவ்வுலகில் பிறந்துள்ளார்?
நா. காமரசான் தமிழ் அன்னையைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளார்.