Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.10 – காவல்காரர்

பாடம் 10. காவல்காரர்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 10 – காவல்காரர் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 4 Tamil Chapter 10 "காவல்காரர்" solution for CBSE / NCERT Students

Class 4 Tamil Text Books – Download

சிந்திக்கலாமா!

சூழல் 1

மீனாவின் அம்மா மீனாவுக்கு மட்டுமின்றி மீனாவின் நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கிறார்.

சூழல் 2

வளவனின் அப்பா யார் எந்த உதவி கேட்டாலும் நீ செய்யக் கூடாது என்று கூறுகிறார்.

இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

சூழல் ஒன்றுதான் சிறந்தது. மீனாவின் அம்மா எல்லோரிடமும் அன்புடனும், நட்புடன் பழகுகிறார். இதனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் பண்பை பெறுகிறார்.

இதேபோல் நாமும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ”பெயரில்லாத” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

  1. பெயர் + இலாத
  2. பெயர் + இல்லாத
  3. பெயரில் + இல்லாத
  4. பெயரே + இல்லாத

விடை : பெயர் + இல்லாத

2. வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் ______________

  1. கீழே
  2. அருகில்
  3. தொலைவில்
  4. வளைவில்

விடை : கீழே

3. ‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது ______________

  1. உயிருள்ள பொருள்
  2. உயிரற்ற பொருள்
  3. இயற்கையானது
  4. மனிதன் செய்ய இயலாதது

விடை : உயிரற்ற பொருள்

4. “அசைய + இல்லை” இச்சொற்களைச் சேர்த்து எழுதக்கிடைப்பது ___________

  1. அசையஇல்லை
  2. அசைவில்லை
  3. அசையவில்லை
  4. அசையில்லை

விடை : அசையவில்லை

5. “நித்தம்” – இச்சொல்லுக்குரிய பொருள் _______________

  1. நாளும்
  2. இப்பொழுதும்
  3. நேற்றும்
  4. எப்பொழுதும்

விடை : நாளும்

2. வினாக்களுக்கு விடையளிக்க.

1. தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றது எது? 

தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றது சோளக்கொல்லைப் பொம்மை

2. காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?

வயலில் நின்று இரவும் பகலும் காவல் காப்பதே காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி ஆகும்.

3. பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது எது?

பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம் ஆகும்.

4. காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை?

காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியாதற்கு காரணம் அது ஒரு உயிரற்ற பொருள் ஆகும்

3. முதலெழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எழுதுக?

ட்டை – ரிகைகாக்கை – காவல்
வைக்கோல் – வைத்துகூவி – கூட்ட

4. மேகங்களுக்குப் பொருத்தமான மழைத்துளிகளை இணைக்க.

Class 4 Tamil Solution - Lesson 10 மேகங்களுக்குப் பொருத்தமான மழைத்துளிகளை இணைக்க.

இணைத்த சொற்களை கீழே எழுதுக.

  1. சரிகை வேட்டி
  2. கருப்பு கோட்டு
  3. வெள்ளை சட்டை
  4. சோளக்கொல்லை பொம்மை
  5. கனத்த மழை

5. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.

வினாக்கள்

1. வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன?

வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவ ணவாகப் பயன்படுகின்றன

2. வாழைநார் எதற்குப் பயன்படுகிறது?

வாழைநார் பூக்களைத் தொடுக்க பயன்படுகிறது.

3. வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.

  • செவ்வாழை
  • பூவன் வாழை
  • மலை வாழை

4. “வாழையிலை” – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

வாழையிலை = வாழை + இலை

5. “பலவகை” – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக.

பலவகை x சிலவகை

செயல் திட்டம்

உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலிருந்து கீழ்க்காணும் செய்திகளைத்திரட்டுக.

1. தோட்டத்தின் பெயர்

இயற்கைத்தோட்டம்

2. உரிமையாளர் பெயர்

சங்கரலிங்கம்

3. தோட்டம் அமைந்திருக்கும் ஊர்

வெங்கேடஸ்வரபுரம் (தென்காசி மாவட்டம்)

4. நீர்வசதி : கிணறு / அடிகுழாய் / ஆறு / குளம்

கிணறு

5. தோட்டத்தில் விளையும் காய்கறி / பழம் பெயரைக் குறிப்பிடுக.

புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய், கத்திக்காய், வெண்டடைக்காய்

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்

6. தோட்டம் பற்றிய உனது கருத்து நன்றாக உள்ளது / ஓரளவு / வளர்ச்சி தேவை

நன்றாக உள்ளது

அறிந்து கொள்வோம்

1. தோட்டத்தில் பூச்சித் தாக்குதலைத் தடுக்க முட்டை ஓட்டுத் தூளுடன், சிறிது உப்பைக் கலந்து செடியைச் சுற்றிலும் வளையம் போட வேண்டும்.

2. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் தாவரங்களின் கனிம வளங்களைக் குறைக்கின்றன.

3. மண் அரிப்பைத் தடுக்க மரங்கள் நட்டு வளர்த்தல் இன்றியமையாதது.

கூடுதல் வினாக்கள்

1. மலரும் உள்ளம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

மலரும் உள்ளம்’ என்னும் நூலின் ஆசிரியர் அழ. வள்ளியப்பா.

2. அழ. வள்ளியப்பா குழந்தைக்கவிஞர் என அழைக்கப்பட காரணம் என்ன?

குழந்தைகளுக்கான கதைகளையும் பாடல்களையும் மிகுதியாகப் பாடியுள்ளமையால், குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுகிறார

3. சோளக்கொல்லைப் பொம்மையைக் என்னவென்று காகம் நினைக்கிறது?

நின்றிருந்த சோளக்கொல்லைப் பொம்மையைக் காவல்காக்கும் உயிருள்ள மனிதர் என்று காகம் நினைக்கிறது.

4. காகம் எவ்வாறு பொம்மையை உயிரற்ற பொருள் என்பதை உணர்ந்தது?

கனத்த மழையால் ஆடைகள் கிழிந்து நிற்கும் அந்தப் பொம்மையிடம், புதிய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டுகிறது. ஆனால், அஃது அணிந்து கொள்ளாததால், உயிரற்ற பொருள் என்பதை உணர்ந்தது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment