Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.11 – எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்

பாடம் 11. எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 11 – எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 4 Tamil Chapter 11 "எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்" solution for CBSE / NCERT Students

Class 4 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

“பணத்தையா சாப்பிடமுடியும்?“ என்ற இளமாறனுக்கு நீங்களாக இருந்தால் என்ன விடை சொல்வீர்கள்?

பணத்தை சாப்பிட முடியாது. ஆனால் விவசாயத்தை மேம்படுத்த முடியும். உழவுத்தொழில் சிறப்பதற்கான பணியைச் செய்வேன். வீட்டில் கால்நடைகளை வளர்த்து இயற்கை உரத்தைப் பயன்படுத்துவேன். செயற்கை உரம், பூச்சிகொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்பேன்.

சிந்திக்கலாமா!

நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத்தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில், உலகம் என்னவாகும்?.

“சுழன்றும் ஏர்பின்னது உலகம்” என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும், உழவுத்தொழிலே சிறந்தது. அத்தகைய உழவுத்தொழில் நடைெபறவில்லையெனில் நம் அனைவருக்கும் உண்ண உணவு இருக்காது. உணவுக்கு பதிலாக காலை, மாலை இரவு என மூன்று வேளைகளுக்கும் மாத்திரையை விழுங்கி வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ”பாய்ந்தோடும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

 1. பாய் + தோடும்
 2. பாய்ந்து + ஓடும்
 3. பயந்து + ஓடும்
 4. பாய் + ஓடும்

விடை : பாய்ந்து + ஓடும்

2. “காலை + பொழுது” – இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது _________

 1. காலைப்பொழுது
 2. காலைபொழுது
 3. காலபொழுது
 4. காலப் பொழுது

விடை : காலைப்பொழுது

3. பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்ல?

 1. மலை
 2. காடு
 3. நெகிழி
 4. நிலம்

விடை : நெகிழி

4. “குனிந்து” – இச்சொல் குறிக்கும் பொருள் _________________

 1. வியந்து
 2. விரைந்து
 3. துணிந்து
 4. வளைந்து

விடை : வளைந்து

5. “தன்+ உடைய” – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________

 1. தன்னுடைய
 2. தன்உடைய
 3. தன்னூடைய
 4. தன்உடையை

விடை : தன்னுடைய

2. வினாக்களுக்கு விடையளிக்க

1. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

 • நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன
 • உணவுகள் உயிர்ச்சத்துகள் இல்லாத சக்கைகளாகவும் மாறிப்போகின்றன.
 • மண்வளம் அழிக்கப்படுகிறது.
 • நிலத்தடி நீர் மாசுபடுகிறது

2. நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறக் காரணம் என்ன?

நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் நிலத்தில் விளைவிக்கப்படுவதால் நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறினார்

3. ‘எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்‘ என இளமாறன் ஏன் கூறினான்?

இளமாறன் தன் தாத்தா கூறியவற்றைச் சிந்ததித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அவனுடைய அப்பா, “இளமாறா, என்னாச்சு?  வயலுக்குப் போயிட்டு வந்தியா? உங்க தாத்தாகூட வயலுக்கு போக வேண்டம் என்று நான் சொல்றதை எங்க கேட்கிறாரு? என்று அவன் அப்பா கூறினார்.

அதற்கு இளமாறன், “அதுசரிப்பா, நீங்க நினைக்கிற மாதிரி யாருமே வயல்வேலைக்குப் போகலன்னா என்னாகும்? எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்…! விவசாயம் யார் செய்வது? என்று கேட்டுத் தன் தந்தையின் தவற்றை சுட்டிக் காட்டினான்.

3. சொந்த நடையில் கூறுக

உமக்குப் பிடித்த காய்கள், பழங்கள் எவை? ஏன்?

கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பீட்ருட், கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்ற காய்கறி வகைகளும், அனைத்த விதமான கீரை வகைகளும், ஆப்பிள், திராட்சை உள்பட பல்வேறு பழவகைககுளும் எனக்கு பிடித்தவை ஆகும்.

காய்கறிகளிலும், பழங்களிலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. நாமும் நோயற்ற வாழ்வு வாழ இயலும்.

4. அகரமுதலி பார்த்துப் பொருளறிக.

 • மாசு = தூய்மையற்ற, குற்றம்
 • வேளாண்மை = உழவு

சொற்களை இணைத்துத் தொடரை நீட்டித்து எழுதுக.

எடுத்துக்காட்டு: படித்தேன்

 • நான் படித்தேன்
 • நான் நேற்று படித்தேன்
 • நான் நேற்று பாடம் படித்தேன்
 • நான் நேற்று தமிழ்ப்பாடம் படித்தேன்

வரைந்தாள்

 • அவள் வரைந்தாள்
 • அவள் நேற்று வரைந்தாள்
 • அவள் நேற்று படம் வரைந்தாள்
 • அவள் நேற்று ஆப்பிள் படம் வரைந்தாள்

5. நிறுத்தக் குறியிடுக

1. நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்

விடை : நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள்.

2. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது

விடை : “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது”.

3. ஆகா பயிர் அழகாக உள்ளதே

விடை : ஆகா! பயிர் அழகாக உள்ளதே!

4. அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது

விடை : அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?

6. புதிய சொற்களை உருவாக்கலாமா?

Class 4 Tamil Solution - Lesson 11 புதிய சொற்களை உருவாக்கலாமா?

பல்பால்கல்தலை
கலைவாய்நாய்பாய்
ஒலைகாலைகாகம்நாகம்
ஊறுஊதல்கண்காண்

7. படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.

Class 4 Tamil Solution - Lesson 11 படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.1. ஒரு வீடு இரு வாசல்

விடை : மூக்கு

Class 4 Tamil Solution - Lesson 11 படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.2. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்

விடை : வெண்டைக்காய்

8. அகர வரிசைப்படுத்துக

தேன், தாளம், தௌவை, துடுப்பு, தென்னை, தையல், தோழமை, தீ, தூய்மை, தொகை, திட்பம், தளிர்

Class 4 Tamil Solution - Lesson 11 அகர வரிசைப்படுத்துக

தளிர், தாளம், திட்பம், தீ, துடுப்பு, தூய்மை, தென்னை, தேன், தையல், தொகை, தோழமை, தெளவை

சொல்லக்கேட்டு எழுதுக

1. இயற்கை வேளாண்மை 2. உயிர்ச்சத்துகள்
3. செயற்கை உரங்கள்4. நெல் மணிகள்
5. நண்டுகள்

அறிந்து கொள்வோம்

திருக்குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

– உழவு, குறள் 1033

கூடுதல் வினாக்கள்

1. இளமாறன் தன் வீட்டின் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்த்த காட்சிகள் யாவை?

மாமரத்திலிருந்த கிளிகள் கீச் கீச் எனக் குரலெழுப்பி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன.

வைக்கோல்போரின் மீது சேவலொன்று மெதுவாக நடை பயின்று கொண்டிருந்தது.

தோட்டத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த கன்றைக் கண்டு, பசு ம்மா. . . எனக் குரலெழுப்பியது.

2. இளமாறன் வயலுக்கு ஏன் சென்றான்?

இளமாறன் தன் தாத்தாவிற்கு சாப்பாடு கொடுக்க வயலுக்கு சென்றான்.

3. நெல்மணிகள் எவ்வாறு இருந்தன?

நெல்மணிகள் கற்றறிந்த சான்றோர் போலக் குனிந்து நின்றன.

4. இளமாறன் எதைப் பாரத்து வியப்படைந்தான்?

வளையிலிருந்து நண்டுகள் எட்டிப் பார்த்து அவை தம் கொடுக்குகளை மேலும் கீழுமாக அசைத்து நகர்ந்ததைப் பார்த்து வியப்படைந்தான்.

5. நிலத்தில் வேலை செய்வது பற்றி இளமாறன் கேட்ட கேள்விக்குத் தாத்தா என்ன பதில் கூறினார்?

வயலில் வேலை செய்தால்தான் தன் உடல் வலிமையாக இருக்கு. வலிமையாக இருப்பதால் நோய்நொடியின்றி இருப்பதாகவும் கூறினார்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment