பாடம் 12. யானைக்கும் பானைக்கும் சரி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 12 – யானைக்கும் பானைக்கும் சரி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வாங்க பேசலாம்
“யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதையை உம் சொந்தநடையில் கூறுக.
மரியாதை இராமனிடம் வந்த விசித்திரமான வழக்கு இது.
உழவரின் மீது அரபு வணிகர் தொடுத்து வழக்கு.
அரபு வணிகர், மரியாதை இராமனிடம் “ஐயா, இந்த உழவர் தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக என் யானையை இரவல் கேட்டார். ஊர்வலத்தின்போது, யானை இறந்துவிட்டது. அந்த யானையைத் திருப்பித் தரும்படி கேட்கிறார்.
உழவரோ, யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்து போய்விட்டதாகவும் மாற்றாக வேறு யானை வாங்கித் தருகிறேன் அல்லது யானைக்குரிய விலையைத் தருவதாகவும் நான் கூறினேன். ஆனால் இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடிக்கிறார் என்று கூறினார்.
உண்மையை உணர்ந்துகொண்ட மரியாதை இராமன், இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்துக்கு வாருங்கள்“ என்று கூறி அனுப்பினார். பின்னர், உழவரை மட்டும் தனியே அழைத்து தான் ஆள் அனுப்பும்போது வந்தால் போதும் என்றார். பிறகு அவரிடம் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்.
உழவரும் மரியாதை இராமன் கூறியபடி போலவே வீட்டின் கதவுக்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தார். அவரை அழைத்து வருவதற்காக வந்த வணிகர், ஆத்திரத்துடன் அவர் வீட்டுக் கதவைத் தட்ட, கதவு வேகமாகத் திறந்தார். கதவின் பின்னால் அடுக்கி வைத்திருந்த பானைகள் உடைந்தன. உழவர் வணிகரிடம் எங்கள் வீட்டில் காலங்காலமாக வைத்திருந்த பழம்பானைகளை உடைத்துவிட்டீரே. எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்“ என்று கூக்குரலிட்டார். செய்வதறியாது திகைத்தார்
உழவரின் வீட்டில் நடந்ததைக் கூறினார் வணிகர். மரியாதை இராமன், வணிகரிடம் நீரோ இறந்துபோன உம்முடைய யானையை உயிருடன் திருப்பி கேட்கிறீர். உழவரோ, உடைந்துபோன தம் பழைய பானைகளைத் திருப்பித் தரவேண்டும் என்கிறார். ஆதலால், நீங்கள் உடைத்த பானைகளைத் திருப்பித் தந்துவிட்டால், உழவரும் இறந்துபோன உம்முடைய யானையைத் திருப்பித் தந்துவிடுவார்“ என மரியாதை இராமன் கூறினார். வணிகர் என்னால் பழைய பானைகளைத் தரமுடியாது” என்றார். மரியாதைராமன் உங்களால் திருப்பித் தரமுடியாது என்றால் உழவரால் மட்டும் எப்படித் திருப்பித் தரமுடியும்? என்றார் .ஆதலால், யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது” என்று தீர்ப்பளித்தார்.
சிந்திக்கலாமா!
உன் நண்பன் உன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு உன்மீது சினம் கொண்டால் நீ என்ன செய்வாய்?
நான் அவனை சமாதனாப்படுத்த முயற்சிபேன். என் நடந்திருந்தாலும் அவனிடம் உண்மையைக் கூறிப் புரிய வைப்பேன். சினம் கொள்வதற்கான அவசியமில்லை என்று கூறுவேன். சினத்தை விடுத்து சிந்திக்க முயற்சி செய்யும்படி கூறுவேன்.
1. வினாக்களுக்கு விடையளிக்க.
1. உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்?
உழவர் யானையை தம் மகன் திருமண விழா ஊர்வலத்திற்காக இரவல் கேட்டார்.
2. ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது?
ஊர்வலம் சென்ற யானை இறந்து விட்டது.
3. மரியாதை இராமன் உழவரைத் தனியே அழைத்து என்ன கூறினார்?
மரியாதை இராமன் உழவரைத் தனியே அழைத்து, உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள் என்று கூறினார்
4. யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதை உணர்த்தும் நீதி என்ன?
யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதை உணர்த்தும் நீதி: ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
2. பூக்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக?
1. வணிகர் _____________ சேர்ந்தவர்
விடை : அரபு நாட்டைச்
2. உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டவர் _____________
விடை : மரியாதை இராமன்
3. திருமண ஊர்வலத்தில் _______________ இறந்து விட்டது.
விடை : யானை
4. பழைய _______________ கீழே விழுந்து நொறுங்கின.
விடை : பானைகள்
3. சொல்லிப் பழகுவோம்
- பட்டம் விட்ட பட்டாபி, பெட்டிக் கடையில் பொட்டலம் போட்டான்.
- கன்று மென்று தின்றது.
- வாழைப்பழத் தோலால் வழுக்கி விழுந்தான்
4. சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரமைத்து எழுதுக.
- யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துவிட்டது
- பானைகள் கீழே விழுந்து உடைந்து விட்டன
- விசித்திரமான வழக்கை மரியாதை இராமன் எதிர்கொண்டார்
- பானைகள் கதவின் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டன
5. குறிப்புகளைக் கொண்டு கட்டத்திலிருந்து விடை காண்போமா?
இடமிருந்து வலம்
1. பழைமை என்பது இதன் பொருள்
விடை : தொன்மை
2. வீட்டின் முகப்பில் உள்ளது
விடை : வாசல்
3. தும்பிக்கை உள்ள விலங்கு
விடை : யானை
மேலிருந்து கீழ்
2. உடலின் ஓர் உறுப்பு
விடை : வாய்
4. வேளாண் தொழில் செய்பவர்
விடை : விவசாயி
6. குறிப்புகளைப் பயன்படுத்திக் கதை உருவாக்குக. பொருத்தமான தலைப்பிடுக.
நான்கு எருதுகள் – ஒற்றுமையாக வாழ்தல் – சிங்கம் – பிரிக்க நினைத்தல் – எருதுகள் எதிர்த்தல் – சிங்கத்தின் சூழ்ச்சி – எருதுகள் பிரிதல் – சிங்கம் வேட்டையாடுதல்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
அடந்த காடு ஒன்றில் நான்கு எருதுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. அதே காட்டில் வாழ்ந்த சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. சிங்கம் நான்கு எருதுகளையும் வேட்டையாடி உணவாக்க நினைத்தது. ஒற்றுமையாய் வாழ்ந்த அவற்றை வேட்டையாட முடியவில்லை. சிங்கம் அவற்றை பிரிக்க நினைத்தது. ஆனால் எருதுகள் சிங்கத்தை எதித்தனர். மேலும் சிங்கமானது எருதுகளை பிரிக்க சூழ்ச்சி ஒன்றை மேற்கொண்டது.
நான்கு எருதுகளில் ஒரு எருதுவிடம் சென்று இந்தக் காட்டில் தளிர்புற்கள் அதிகமாக உள்ள ஒரு இடம் உள்ளது. அதை நீ மட்டும் உண்ண வேண்டுமெனில் மற்ற எருதுகளிடம் கூறாமல் தனியே வந்துவிடு இதனை நம்பி அந்த எருதுவும் தனியே உண்ண வந்தது. சிங்கம் தனியாக வந்த எருதுவினை சிங்கம் வேட்டையாடியது.
இவ்வாறாக சிங்கம் தன் சூழ்ச்சியினால் மற்ற எருதுகளையும் தனித்தனியே பிரித்து வேட்டையாடியது.