பாடம் 13. நன்னெறி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 13 – நன்னெறி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல் பொருள்
- இன்சொல் – இனிமையான சொல்
- இருநீர் வியனுலகம் – கடலால் சூழப்பட்ட பரந்த உலகம்
- வன்சொல் – கடுமையான சொல்
- அதிர்வளை – ஒலிக்கின்ற வளையல்
- அழல் கதிர் – கதிரவனின் வெப்பக் கதிர்கள்
- தண்ணென் கதிர் – குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி
வாங்க பேசலாம்
உன்னிடம் பிறர் எப்படிப் பேச வேண்டும் என எண்ணுகிறாய்? ஏன்?
உன்னிடம் பிறர் இன்சொல் பேச வேண்டும் என எண்ணுகிறேன்
காரணம்
நான் எல்லோரிடம் இன்சொல் பேசுவதினால் பிறரும் என்னிடம் இன்சொல் பேச விரும்புகிறேன். நாம் இன்சொல் பேசுவதினால் அனைவரும் மகிழ்வர்.
சிந்திக்கலாமா!
இன்சொற்களைப் பேசுவதால் நன்மையே விளையும் என்பதைப் பிறருக்கு எப்படி உணர்த்தலாம்?
கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும்.
அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வோர்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்று நன்னெறி கூறுகிறது.
1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘இன் சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
- இன்+ சொல்
- இனிமை + சொல்
- இன்மை + சொல்
- இனிய+ சொல்
விடை : இனிமை + சொல்
2. “அதிர்கின்ற வளை” – இச்சொற்களில் அதிர்கின்ற என்னும் சொல்லின் பொருள் ___________
- உடைகின்ற
- ஒலிக்கின்ற
- ஒளிர்கின்ற
- வளைகின்ற
விடை : ஒலிக்கின்ற
3. “வியனுலகம்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
- வியன் + உலகம்
- வியல் + உலகம்
- விய + உலகம்
- வியன் + னுலகம்
விடை : வியன் + உலகம்
2. வினாக்களுக்கு விடையளிக்க
1. உலகம் எப்போது மகிழும்? – நன்னெறிப் பாடல் மூலம் உணர்த்துக.
உலகம் மக்கள் பேசும் இன்சொற்களைக் கேட்டு மகிழும்
2. கடலின் அலைகள் எப்போது பொங்கி எழும்?
குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளியைக் கண்டு கடலின் அலைகள் எப்போது பொங்கி எழும்
3. பொருத்துக
1. இன்சொல் | கதிரவனின் ஒளி |
2. வன்சொல் | நிலவின் ஒளி |
3. அழல்கதிர் | கடுஞ்சொல் |
4. தண்ணென் கதிர் | இனிய சொல் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
4. குறிப்புகளைக் கொண்டு கட்டத்தை நிரப்புக
1. நமது தாய்நாட்டின் திருப்பெயர்
இ | ந் | தி | யா |
2. அரசனின் வேறு பெயர்
ம | ன் | ன | ன் |
3. உடைமையை இப்படியும் சொல்லலாம்.
சொ | த் | து |
4. மணத்திற்குப் பெயர் பெற்ற பூ இது
ம | ல் | லி | கை |
வட்டத்தில் எழுதிய எழுத்துகளைக் கீழே உள்ள கட்டத்தில் எழுதுக. இப்படிப் பேசினால் எல்லாருக்கும் பிடிக்கும்
இ | ன் | சொ | ல் |
5. சிறு வட்டத்தில் உள்ள எழுத்தை முதலாகக் கொண்டு சொல் உருவாக்குக
குடை | குளி | குறைவு |
குதி | குறி | குட்டம் |
குடம் | குறை | குளிர் |
குட்டை | குவியல் | கும்பம் |
அறிந்து கொள்வோம்
திருக்குறள் இனிய உளவாக இன்னாத கூறல் -இனியவை கூறல், குறள் 100 |
செயல்திட்டம்
இனியவை கூறல் என்னும் திருக்குறள் அதிகாரத்திலுள்ள குறட்பாக்களை எழுதி வருக.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய் சொல்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
முகத்தான் அமரந்து இனிதுநோக்கி அகத்தானம்
இன்சொ லினதே அறம்.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஓருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பரியாச் சொல்.
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று