Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.14 – பனிமலைப் பயணம்

பாடம் 14. பனிமலைப் பயணம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 14 – பனிமலைப் பயணம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 4 Tamil Chapter 14 "பனிமலைப் பயணம்" solution for CBSE / NCERT Students

Class 4 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

உமது நண்பரிடம் உமக்குப் பிடித்த, பிடிக்காத பண்புகளைப் பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.

ராமுஎனது நண்பன் கிருஷ்ணன். அவனிடம் எனக்குப் பிடித்தவை நிறை குணங்கள் உள்ளன.
சோமுபிடிக்காதவையென்று ஏதேனும் உள்ளதா?
ராமுஏன் இல்லை? பிடிக்காத அக்குணத்தை மாற்றிக் கொள்ளும்படி நான் கூறுகிறேன். அவர் சரி என்று கூறுவான். ஆனாலும் சில நேரங்களில் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சோமுபிடிக்காத குணம் என்ன? பிடித்த குணங்கள் எவை?
ராமுபிடித்த குணங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அவை பிறர் மனம் புண்படாதபடிப் பேசுவான். யாரிடமும் சண்டை போட மாட்டான். தன்னை விடச் சிறியவருக்கும் மரியாதை கொடுப்பான். பெற்றோர், ஆசிரியர் கூறும் வார்த்தைகளை மீற மாட்டான்.
சோமுஇவ்வாறு இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது?
ராமுசரியாகச் சொன்னாய்! அவனைப் பிடிக்காதவர் எவருமில்லை. ஆனால் தன்னை யாரவது ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் பேசவே மாட்டான். கோபம் வந்தால் உச்சக்கட்டத்திற்கு சென்று விடுவான். அவனை அடக்குவது எல்லோருக்கும் மிகவும் கடினமாக இருக்கும். அவனை அப்படி கோபம் கொள்வது எனக்கு பிடிக்காத ஒன்று.
சோமுபரவாயில்லையே, உன் நண்பனைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டுள்ளாயே?

சிந்திக்கலாமா!

பக்கத்து ஊருக்குச் செல்ல படகிலும் செல்லலாம்., பேருந்திலும் செல்லலாம்….எதில் பயணம் செய்ய நீ விரும்புவாய், காரணம் என்ன?

நான் படகில் தான் பயணம் செய்ய விரும்புவேன்.

பேருந்தில் அடிக்கடி பஸ் பயணம் செய்துள்ளேன். படகில் பயணத்தின் போது குளிர்ச்சியாக இருக்கும். பயணம் செய்த களைப்பும் தெரியாது. மேலும் பேருந்தில் பயணம் செய்தால் மாசு காற்றை மட்டுமே சுவாசிக்க முடியும். படகு பயணத்தில் சுத்தமான காற்று கிடைக்கும்.

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது?

 1. மெதுவாக
 2. எளிதாக
 3. கடினமாக
 4. வேகமாக

விடை : மெதுவாக

2. “என்ன + என்று” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

 1. என்னஎன்று
 2. என்னென்று
 3. என்னவென்று
 4. என்னவ்வென்று

விடை : என்னவென்று

3. “அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

 1. அந்த + காட்டில்
 2. அ + காட்டில்
 3. அக் + காட்டில்
 4. அந்தக் + காட்டில்

விடை : அ + காட்டில்

4. ”என்னவாயிற்று“ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

 1. என்ன + ஆயிற்று
 2. என்னவா + ஆயிற்று
 3. என்ன + வாயிற்று
 4. என்னவோ + ஆயிற்று

விடை : என்ன + ஆயிற்று

2. வினாக்களுக்கு விடையளிக்க.

1. படகில் செல்லும்போது, விலங்குகள் ஏன் திடீரென அலறின?

திடீரென்று ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது படகு ஒரு பக்கமாய்ச் சாய்ந்தது. எனவே படகில் செல்லும்போது, விலங்குகள் திடீரென அலறின

2. நரி, முதலையிடம் என்ன கூறியது?

முன்பு ஒரு முதலை எங்களைப் போன்ற விலங்குகளை சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்தே போய்விட்டது.

நாங்கள் விஷ முறிவுச் செடிகளைத் தின்று வந்துள்ளதால் எங்களை யார் கடித்தாலும் அல்லது நாங்கள் யாரைக் கடித்தாலும் அவர்கள் இறப்பது உறுதி என முதலையிடம் நரி கூறியது.

3. இக்கதையில் உனக்குப் பிடித்த விலங்கு எது? ஏன்?

தன் தந்திரத்தான் அனைவரையும் காப்பாற்றிய நரிதான் இக்கதையில் பிடித்த விலங்கு ஆகும்.

3. உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?

Class 4 Tamil Solution - Lesson 14 உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?

 1. திடீரென்று – சற்றும் எதிர்பாராமல்
 2. தந்திரம் – ஏமாற்றுதல்
 3. பேணுதல் – பாதுகாத்தல்
 4. அலறுதல் – கூச்சலிடுதல்

4. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக

Class 4 Tamil Solution - Lesson 14 விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக

 1. _____________ நண்பன் = நல்ல நண்பன்
 2. _____________ தூரம் = அதிக தூரம்
 3. _____________ மான் = அழகிய மான்
 4. _____________ பயணம் = தரைவழி பயணம்
 5. _____________ காடு = அடர்ந்த காடு
 6. _____________ குதிரை = கருப்பு குதிரை

5. கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.

Class 4 Tamil Solution - Lesson 14 கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

வரிக்குதிரைபாம்பு வாய்
குதிரைமுதலைபாய்
அத்தைவலைநாள்
படகுதலைஇலை
நான் பெற்ற மொத்த விண்மீன்கள் : பன்னிரண்டு

6. சொல்லக் கேட்டு எழுதுக

1. அடர்ந்த காடு

2. பயணம்

3. பனிமலைக்காடு

4. விலங்குகள்

5. திருவிழா

7. அகரவரிசைப்படுத்துக.

மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மெளவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய்

மைதானம், முறுக்கு, மோப்பம், மகிழ்ச்சி, மௌவல், மாதம், மொழி, மீன், மேகம், மெத்தை, மிளகு, மூட்டை

Class 4 Tamil Solution - Lesson 14 அகரவரிசைப்படுத்துக.

மகிழ்ச்சி, மாதம், மிளகுமீன், முறுக்கு, மூட்டை, மெத்தை, மேகம், மைதானம், மொழி, மோப்பம், மௌவல்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment