Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.19 – உலா வரும் செயற்கைக்கோள்

பாடம் 19. உலா வரும் செயற்கைக்கோள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 19 – உலா வரும் செயற்கைக்கோள் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 4 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

செயற்கைக்கோள்களின் வகைகளை அறிந்துகொண்டு வந்து பேசுக. 

1. விண்கல ஓட்டம்

2. தகவல் தொடர்பு விண்கருவிகள்

உலகின் முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக்

இந்தியா செலுத்திய செயற்கைக்கோள்கள்

ரோகினி – 1ரோகினி – 2ஆப்பிள்
இன்சாட் – 1ஏ1 பி1டி
ஸ்தாஸ் – 1பாஸ்கரா 1.2ஆர்ஸ் 1
ஓ.ஐ.எஸ்.ஆர் 1ஆர்யபட்டா
ஜி.சாட் – 1ரோகினி

சிந்திக்கலாமா!

செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்?

  • செயற்கைக்க்கோள் கண்டுபிக்கப்படாமல் இருந்தால் அறிவியல் தொழில் நுட்பம் வளரச்சியில் முன்னேற்றம் கண்டிருக்காது.
  • நாட்டில் குறிப்பாக பூமிக்கடியில் உள்ள கனிம வளங்களைக் கண்டறிந்திட முடியும்.
  • கடலுக்கடியில் அதிலுள்ள இயற்கை வளங்களையும் கண்டறிந்திட முடியும்.
  • தகவல் பரிமாற்றத்தில் புதிய பரிணாம வளர்ச்சியை நாம் அடைந்திருக்க முடியாது.

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “மண்ணிலுள்ள” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. மண்ணி + லுள்ள
  2. மண்ணில் + உள்ள
  3. மண் + உள்ள
  4. மண்ணில் + உள்ளே

விடை : மண்ணில் + உள்ள

2. “நிழற்படம்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நிழள் + படம்
  2. நிழை + படம்
  3. நிழல் + படம்
  4. நிலை + படம்

விடை : நிழல் + படம்

3. “உண்மை” என்ற சொல்லின் பொருள்?

  1. பொய்
  2. தவறு
  3. சரி
  4. மெய்

விடை : மெய்

4. “நற்பயன்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. நல்ல + பயன்
  2. நன்மை + பயன்
  3. நல் + பயன்
  4. நற் + பயன்

விடை : நன்மை + பயன்

5. “அருகில்” என்ற சொல்லின் எதிர்ச்சொல்?

  1. பக்கத்தில்
  2. எதிரில்
  3. அண்மையில்
  4. தொலைவில்

விடை : தொலைவில்

2. வினாக்களுக்கு விடையளிக்க

1. ‘பறவைக் கப்பல்‘ எனக் குறிப்பிடப்படுவது எது?

‘பறவைக் கப்பல்‘ எனக் குறிப்பிடப்படுவது செயற்கைக்கோள் ஆகும்.

2. செயற்கைக்கோளினால் விளையும் பயன்களுள் இரண்டைக் குறிப்பிடுக

  • மன்ணிலுள்ள வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது.
  • தகவல் தொடர்புக்கு உதவுகிறது.

3. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் அமைந்துள்ள சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

ட்டு- விட்டுண்ணில் – விண்ணில்
ருகில் – உருவில்ல்லை – இல்லா
வாருங்கள் – பாருங்கள்ட்டு- கட்டு

4. ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

வந்திடுமே – பறந்திடுமே
எடுத்திடுமே – காட்டிடுமே
சொல்லிடுமே – இயங்கிடுமே
வாருங்கள் – பாருங்கள்
உணர்த்திடுமே – பாய்ந்திடுமே

5. பாடலை நிறைவு செய்வோம்

Class 4 Tamil Solution - Lesson 19  பாடலை நிறைவு செய்வோம்பஞ்சு போன்ற மேகமே
பார்க்க நெஞ்சு மகிழுமே
காற்று வீசும் போதிலே
கலைந்தே தவழ்ந்து வந்து
மக்கள் உள்ளம் மகிழ
மழையாய் பொழிவாய் மேகமே!

6. கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால், செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்.

Class 4 Tamil Solution - Lesson 19 கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால், செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்

கவல்கவல்
தாள்கள்கோள்கள்
ழைழை
ப்பம்வெப்பம்
னிமம்னிமம்

சிந்திக்கலாமா!

இந்தியா, வானில் செலுத்திய செயற்கைக்கோள்களுக்கு ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் வானவியலிலும் கணிதவியலிலும் சிறந்து விளங்கியவர்கள்.

செயல்திட்டம்

நம் நாட்டில் இதுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் பெயர்களை எழுதி வருக

ஜி.சாட் – 3இன்சாட் – 1இ
சத்தியபாமாகல்பனா – 1
சாரல்ஓ.ஐ.எஸ்.ஆர் 1சி
எஸ்.ஆர்.எம்

கூடுதல் வினாக்கள்

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. வானிலை குறித் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள் உதவுவது ………………..

  1. கோள்கள்
  2. செயற்கைகோள்
  3. விண்மீன்கள்
  4. சந்திரன்

விடை : செயற்கைகோள்

2. ஆழிப்பேரை (சுனாமி) ஒரு …………….

  1. இயற்கை வளம்
  2. சாதரண அலை
  3. பேரழிவு
  4. பூமிப்பிளவு

விடை : பேரழிவு

2. வினாக்களுக்கு விடையளிக்க

1. செயற்கைக்கோள்கள் மனித உயிர்களை எவ்வாறு காக்கிறது?

ஆழிப்பேரை (சுனாமி) போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து, மனித உயிர்களை காக்கிறது.

2. வானிலை குறித்த தகவல்களை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

வானிலை குறித்த தகவல்களை செயற்கைக்கோள்கள் உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.

3. செயற்கைக்கோள்கள் மூலம் வேறு எவற்றையெல்லாம் அறியலாம்?

செயற்கைக்கோள்கள் மூலம் கனிம வளத்தையும் கடல் வளத்தையும் அறியலாம்.

4. வானிலுள்ள கோள்களை எவ்வாறு நாம் அறியலாம்?

வானிலுள்ள கோள்களை செயற்கைக்கோள்கள் நிழற்படம் எடுத்து நமக்கு அனுப்புவதால் அவற்றை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment