Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.22 – ஆனந்தம் விளையும் பூமியடி

பாடம் 22. ஆனந்தம் விளையும் பூமியடி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 22 – ஆனந்தம் விளையும் பூமியடி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 4 Tamil Chapter 22 "ஆனந்தம் விளையும் பூமியடி" solution for CBSE / NCERT Students

Class 4 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

நமது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து உமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்க.

  • நமது நாட்டில் அதிக இயற்கை வளம் நிறைந்துள்ளது.
  • நமது நாடு மூன்று பக்கம் கடலாலும் ஒரு பகுதி மலையாலும் சூழந்து இயற்கை அரணாக விளங்குகிறது (தீபகற்பம்).
  • பலமொழி, இனம், மதம், சாதி போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் இந்திய மக்கள் என்ற பெருமை உண்டு (வேற்றுமையில் ஒற்றுமை)
  • இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும்.

உங்கள் ஊரிலுள்ள சிறப்புவாய்ந்த இடங்களைப் பற்றி, உமது கருத்துகளை எடுத்துக் கூறுக..

  • எமது ஊரில் வற்றாத நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதி பாய்ந்து வளம் சேர்க்கிறது.
  • அதிகமாக இலக்கியவாதிகள் நிறைந்த பூமி எங்கள் ஊர்.
  • பாபநாசம், மாஞ்சோலை, மணிமுத்தாறு போன்ற இயற்கை செழிப்புமிக்க ஊர் எங்கள் ஊர்.
  • மூன்று மதத்தினரும் ஓரே இடத்தில் வாழும் ஊர் என் ஊர்.

சிந்திக்கலாமா!

கண்ணைப்போல காக்கவேண்டும் எவ்வாறு?

  • நம் கண்ணைப்போல் காக்கப்பட வேண்டுவது இந்த மண் ஆகும்.
  • மனிதனுக்கு கண் இல்லை என்றால் முகத்தில் அழகிருக்காது.
  • அதுபோல, பூமியல் வளமான மண் இல்லையென்றால் அதன் அழகே கெட்டுவிடும்.
  • மனிதன் வாழவும் அவனை வாழ வைக்கும் தாயாகவும் விளங்குவது இந்த மண். எனவே, இந்த மண்ணை நம் கண்ணைப்போல் காக்க வேண்டும்.

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘இன்னல் ‘ – இச்சொல்லின் பொருள்?

  1. மகிழ்ச்சி
  2. கன்னல்
  3. துன்பம்
  4. இன்பம்

விடை : துன்பம்

2. “கும்மியடி” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. கும்மி + யடி
  2. கும் + மியடி
  3. கும் + மடி
  4. கும்மி + அடி

விடை : கும்மி + அடி

3. “ஆனந்தம்” – இச்சொல்லின் எதிர்ச்சொல்?

  1. மகிழ்ச்சி
  2. வருத்தம்
  3. அன்பு
  4. கோபம்

விடை : வருத்தம்

4. ஒரே ஓசையில் முடியாத சொற்கள்?

  1. தேசமடி – பூமியடி
  2. போற்றிடடி – காத்திடடி
  3. கும்மியடி – கோடி
  4. போனதடி – போற்றிடவே

விடை : போனதடி – போற்றிடவே

5. கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம் …………………….

A. Class 4 Tamil Solution - Lesson 22 கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம் B. Class 4 Tamil Solution - Lesson 22 கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம்
C.  Class 4 Tamil Solution - Lesson 22 கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம் D.  Class 4 Tamil Solution - Lesson 22 கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம்

விடை : D

மொழியோடு விளையாடு

2. படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க.

Class 4 Tamil Solution - Lesson 22 படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க.

3. பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக.

Class 4 Tamil Solution - Lesson 22 பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக.

தேசமடி பூமியடி
கும்மியடி போனதடி
போற்றிடடி காத்திடடி
வாழ்ந்திடடி

4. பொருத்துக

1. பாரதம், தேசம் இன்னல்
2. ஆனந்தம், சந்தோஷம் அன்னை
3. நெஞ்சம், உள்ளம் மகிழ்ச்சி
4. துன்பம், துயர் நாடு
5. தாய், அம்மா மனம்
விடை:- 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

அறிந்து கொள்வோம்

நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டுப்புற மக்களின் உணர்ச்சி வெளிப்பாடாகும். இந்த உணர்ச்சிகள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகின்றன.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: