பாடம் 23. கணினி உலகம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 23 – கணினி உலகம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வாங்க பேசலாம்
கணினியின் திரைபோன்று செய்து கணினியைப் பற்றிப்பேசுக. .
- கணக்கிடுவதற்காக முதலில் எளிதாக மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது.
- கணினி உருவாக இதுவே முதல் படிவமாக அமைந்தது.
- பாரிசு நகரைச் சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிவியல் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார்.
- கி.பி. 1833-ல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ\ பாப்பேஜ் கணினியை முதன் முதலில் வடிவமைத்தார்.
- இவரே கணினியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- கணினியுடன் இணையதள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது.
- தொலைத்தொடர்பு துறையில் கணினியின் பங்கு அளப்பறியதாக உள்ளது.
சிந்திக்கலாமா!
அழகன், புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும் என்கிறான். |
அவன் நண்பனோ கணினியிலும் படிக்கலாம் என்கிறான். |
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
- கணினியின் பயன்பாட்டிற்கு முன் பக்கத்தில் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
- ஆனால் இன்று அந்த நிலை மாறி எதை வேண்டுமானாலும் கணினியின் மூலமும் இணையத்தளம் மூலமும் படிக்கலாம் என்பதே கருத்து ஆகும்.
1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி?
- தொலைக்காட்சி
- கணினி
- கைப்பேசி
- மடிக்கணினி
விடை : கணினி
2. “இப்போதெல்லாம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- இப்போது + எல்லாம்
- இப்போ + எல்லாம்
- இப்போதே + எல்லாம்
- இப்போ + வெல்லாம்
விடை : இப்போது + எல்லாம்
3. “நினைவகம்” இச்சொல்லைப் பிரித்து எழுதும் முறை?
- நினை + வகம்
- நினை + அகம்
- நினைவு + வகம்
- நினைவு + அகம்
விடை : நினைவு + அகம்
4. “மின் + அஞ்சல்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
- மின்அஞ்சல்
- மின்னஞ்சல்
- மினஅஞ்சல்
- மினஞ்சல்
விடை : மின்னஞ்சல்
5. “பதிவேற்றம்” இச்சொல்லின் பொருள்?
- தகவல் ஆராய்தல்
- தகவல் வரிசைப்படுத்துதல்
- தகவல் பதிவுசெய்தல்
- தகவல் பெறுதல்
விடை : தகவல் பதிவுசெய்தல்
2. வினாக்களுக்கு விடையளிக்க.
1. சென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் யாவை?
அடுக்குமாடிக் கட்டடங்கள், , மெரினா கடற்கரை, விமான நிலையம், மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம், உயிர்க்காட்சிச் சாலை, பொழுதுபோக்கு மையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஆகியன சென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் ஆகும்.
2. கணினியின் முதன்மைப் பகுதிகளை எழுதுக.
- மையச் செயல்பாட்டுப் பகுதி (CPU)
- கட்டுப்பாட்டகம் (Control unit)
- நினைவகம் (Memory)
- உள்ளீடு மற்றும் வெளியீடு (Input and output)
3. இணையம் என்றால் என்ன?
கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் ஆகும். இதன் மூலம் எந்தவொரு நாட்டு நிகழ்வுகளையும் நாம் நேரடியாகக் காண முடியும்.
4. மின்னஞ்சல் எதற்குப் பயன்படுகிறது?
கணினிகளுக்கு இடையே இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றமே மின்னஞ்சல். இதன்மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
3. குறிப்புகளைப் படித்துச் சொற்களைத் தேர்ந்தெடுப்போமா?
1. காட்சிகளைக் காண்பது | புலனம் |
2. செய்தியை குறிக்கும் வேறு பெயர் | திரை |
3. படங்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது | பதிவேற்றம் |
4. கணினியின் தொடர்ச்சியான வலை அமைப்பு | தரவு |
5. தகவல்களைப் பதிவு செய்தல் | வலைத்தளம் |
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – இ |
மொழி விளையாட்டு
4. கை என்னும் சொல்லை முதலெழுத்தாகக் கொண்டு பல சொற்களை உருவாக்கலாமா?
கைக்குட்டை | கைத்தடி | கையுறை |
விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிக் கடிதத்தை முழுமையாக்குவோம்