பாடம் 26. உறவுமுறைக்கடிதம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 26 – உறவுமுறைக்கடிதம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வாங்க பேசலாம்
உறவுமுறைக் கடிதத்தில் உள்ள செய்திகளை சொந்த நடையில் கூறுக.
- குறள்செல்வி தன் பள்ளியில் நடைபெற்ற “பாரம்பரிய விளையாட்டு விழா” பற்றி கூறினாள். பாண்டி ஆட்டம், கபடி போன்ற வெளிவிளையாட்டுகளும், தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல் போனற உள்விளையாட்டுகளும் நடைபெற்றன.
- உடலுக்கும் அறிவுக்கும் ஆற்றல் தரும் தமிழக விளையாட்டுகளை ஒருவர் விளையாடுதன் மூலம் நாம் இன்பமும் ஆற்றலும் பெறலாம். நம் பாரம்பரிய விளையாட்டுகள் பெருமையின் அடையாளர் மட்டுமன்று. அது நன்மையின் விளைநிலமாகவும் இருக்கும்.
சிந்திக்கலாமா!
நவீன் தான் நினைப்பதையெல்லாம் தன் மாமாவிடம் சொல்ல நினைப்பான். ஆனால், அலைபேசியில் பேசும்போது அத்தனையும் மறந்து விடுவான். |
குழலி, தான் பேச நினைப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கடிதத்தில் எழுதித் தன் அக்காவுக்கு அனுப்புவாள். |
மேற்கண்ட சூழல்கள் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? எது சிறந்தது என நீ கருதுகிறாய்?
- நாம் பிறரிடம் பேசும் பொழுது நேரடியான தெடர்பில் இருப்பதால் சொல்ல வேண்டியதைக் கூட சில நேரங்களில் சொல்லாமல் விட்டு விடுகிறோம். எதிரே பேசுபவரின் மீதுள்ள பாசமோ, பயமோ நாம் சொல்ல நினைப்பதைத் தடுக்கிறது.
- ஆனால், கடிதம் மூலம் நாம் மறைமுகமான தொடர்பில் இருப்பதாலும் உடனே பதில் வர முடியாத காரணத்தாலும் நாம் நேரடியாகக் கூற முடியாத பல செய்திகளைக் கடிதத்தின் மூலம் மற்றவருக்குத் தெரியப்படுத்தலாம்.
- எனவே, கடிதம் மூலம் பேசுவதே சிறந்தது என் நான் கருதுகிறேன்.
1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “நற்பண்பு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- நல்ல + பண்பு
- நற் + பண்பு
- நல் + பண்பு
- நன்மை + பண்பு
விடை : நன்மை + பண்பு
2. பின்வருவனவற்றுள் எது உள்ளரங்க விளையாட்டு இல்லை?
- தாயம்
- ஐந்தாங்கல்
- பல்லாங்குழி
- கபடி
விடை : கபடி
3. “பாரம்பரியம்” இச்சொல்லுக்குரிய பொருளைத் தராத சொல்?
- அண்மைக்காலம்
- தொன்றுதொட்டு
- தலை முறை
- பரம்பரை
விடை : அண்மைக்காலம்
2. வினாக்களுக்கு விடையளி
1. தமிழகப் பாரம்பரிய விளையாட்டுகள் எவை?
பா்ணடிஆட்டம், கபடி, பல்லாங்குழி, ஐந்தாங்கல், கிட்டிப்புள், பம்பரம், தாயம் போன்றவை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகும்.
2. உள்ளரங்க விளையாட்டுகளின் பெயர்களை எழுதுக.
பல்லாங்குழி, ஐந்தாங்கல் போன்றவை உள்ளரங்க விளையாட்டுகள் ஆகும்
3. கடிதத்தில் இடம்பெற்றுள்ள பழமொழியின் பொருள் யாது?
கரும்பு தின்னக் கூலியா?’ என்ற பழமொழியின் பொருள் தனக்கு
விருப்பமானதைச் செய்ய யாரும் வெகுமதியை எதிர்பார்ப்பதில்லை.
மொழியோடு விளையாடு
3. உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைக் கட்டத்தில் கண்டறிந்து எழுதுக.
கிளித்தட்டு | பம்பரம் |
பல்லாங்குழி | அம்மானை |
தாயம் | சடுகுடு |
ஆடுபுலி | ஐந்தாங்கல் |
கிட்டிப்புள் | காயா பழமா |
4. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுவன. சங்க காலத்தில் இளையரும் முதியவரும் பலவகையான விளையாட்டுகளிலும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டனர். அவற்றுள் ஒன்று, ஏறு தழுவுதல். முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், கூரிய கொம்புகளை உடைய காளைகளை அடக்குவதனை வீர விளையாட்டாகக் கருதினர்.
1. ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன யாவை?
விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன
2. ஏறு தழுவுதல் என்றால் என்ன?
காளைகளை அடக்குதல் வீர விளையாட்டு ஏறு தழுவுதல் எனப்படும்
3. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள எதிர்ச்சொற்களை எழுதுக.
இளையரும் x முதியவரும்
4. ஏறு தழுவுதல் எந்த நிலத்துடன் தொடர்புடையது?
ஏறு தழுவுதல் முல்லை நிலத்துடன் தொடர்புடையது
5. நிரப்புக.
ஏறு தழுவுதல் என்பது, ———— விளையாட்டு. (உள்ளரங்க/ வெளியரங்க)
விடை : வெளியரங்க
அறிந்து கொள்வோம்
கடிதத்தில் அனுப்புநர், பெறுநர் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இல்லையெனில் அனுப்பியவர்க்கே திரும்பி வந்துவிடும். |
செயல் திட்டம்
5. எவையேனும் பத்து விளையாட்டுகளின் பெயர்களையும் அவற்றிற்குரிய படங்களையும் திரட்டிப் படத்தொகுப்பை உருவாக்குக.
பம்பரம் | பல்லாங்குழி |
கோலிக்குண்டு | கிட்டிப்புள் |
கிளித்தட்டு | கண்ணாம்பூச்சி |
கபடி | ஐந்தாங்கல் |
பாண்டியாட்டம் | தாயம் |
கூடுதல் வினாக்கள்
1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. குறள்செல்வி பள்ளியில் நடைபெற்ற விழா ………………..
- பாரம்பரிய விளையாட்டு விழா
- இலக்கிய மன்ற விழா
- பொங்கல் விழா
- ஆண்டு விழா
விடை : பாரம்பரிய விளையாட்டு விழா
2. பின்வருவனவற்றுள் ………………… வெளி விளையாட்டு ஆகும்.
- தாயம்
- ஐந்தாங்கல்
- பல்லாங்குழி
- கபடி
விடை : கபடி
3. “பாடலோடு ஆடல்” என அழைக்கப்படும் விளையாட்டு ……………….
- தாயம்
- கபடி
- ஐந்தாங்கல்
- பல்லாங்குழி
விடை : கபடி
2. வினாக்களுக்கு விடையளி
1. வெளி விளையாட்டுகள் யாவை?
பாண்டி ஆட்டம், கபடி
2. தாயம் விளையாட்டின் மூலம் குறள்செல்வி அறிந்து கொண்டது யாது?
ஏற்றத்திற்கான நல்ல வழிகளையும், இறக்கத்திற்கான தீய வழிகளையும் அறிந்து வாழ்வின் அவசியமான ஒழுக்கத்தை அறியலாம்.
3. பாண்டி ஆட்டத்தின் மூலம் பெறப்படுவது யாது?
பாண்டி ஆட்டத்தின் மூலம் ஒருமுகத்திறன், கூர்மைப்பண்பு, குதிதிறன் ஆகியவற்றை தருகிறது.
4. ஐந்தாங்கல், கல்லாட்டம் போன்ற விளையாட்டுகள் வேறு எந்தெந்த நாடுகளில் விளையாடப்படுகின்றன?
சீனா, பர்மா, இலங்கை