Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.5 – பண்படுத்தும் பழமொழிகள்

பாடம் 5. பண்படுத்தும் பழமொழிகள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 5 – பண்படுத்தும் பழமொழிகள் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 4 Tamil Chapter 5 "பண்படுத்தும் பழமொழிகள்" solution for CBSE / NCERT Students

Class 4 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

உனக்கு தெரிந்த பழமொழிகளையும் அது உணர்த்தும் பொருளையும் வகுப்பில் மாணவர்கள் பகிர்ந்து கொள்க…

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலமா?

மண் குதிரையில் ஆற்றைக் கடந்தால் உடனே மண் கரைந்து ஆற்றில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

ஐந்து பெண்களைப் பெற்றெடுத்தால், அவர்களுக்குத் திருமண செய்ய சீர் போன்றவற்றைச் செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆகிவிடுவான்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

திருமணமான பின், பதினாறு குழந்தைகளைப் பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசீர்வாதம் செய்வார்கள்.

வீட்டுக்கு வீடு வாசப்படி!

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும்.

விருந்தும் மருந்தும் மூன்று நாள்

விருந்துக்குச் சென்றால் மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக் கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ணக்கூடாது.

சிந்திக்கலாமா?

பழமொழிகளின் பொருள் மாறுபட்டு வழங்கப்படுவதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

பழமொழிகளின் பொருள் மாறுபட்டு வழங்கப்படுவதற்குக் காரணம் பழமொழிகள் என்பது வாய்மொழி இலக்கியம். இது ஏட்டில் எழுதப்படாதே முதன்மையான காரணம் ஆகும். வாய்மொழி வழியாகவே கேட்டு கேட்டுச் செய்வதால் ஓசையும் எழுத்தும் மாறுபட்டு போகிறது. சமுதாய மாற்றமும் ஒரு காரணமாகும். சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும்பொழுது புரிதல்களும் மாறுபடுகிறது. தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்கின்றனர். மொழிவழக்கும் ஒரு காரணம். வட்டாரங்கள் தோறும் வட்டார மொழி மாறுபடுவதால் பழமொழிகள் திரிந்து விடுகின்றன. அர்ததம் மாறுபாடு அடைகிறது. அர்த்தங்களை யாரும் அரசி ஆராயந்து பார்க்காததால் அப்படியே நிலைத்து விடுகின்றன. இன்று பழமொழிகள் அதிக பயன்பாட்டிற்குள் வராததும் ஒரு காரணம் ஆகும்.

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. அமுதவாணன் தன் தாத்தாவுடன் சென்ற இடம் ……………………………

  1. கடைத்தெரு
  2. பக்கத்து ஊர்
  3. வாரச்சந்தை
  4. திருவிழா

விடை : வாரச்சந்தை

2. “யானைக்கொரு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….

  1. யானை + கொரு
  2. யானை + ஒரு
  3. யானைக்கு + ஒரு
  4. யானைக் + கொரு

விடை : யானைக்கு + ஒரு

3. “பழச்சாறு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..

  1. பழம் + சாறு
  2. பழச் + சாறு
  3. பழ + ச்சா று
  4. பழ + சாறு

விடை : பழம் + சாறு

4. நாய் ………………….

  1. குரைக்கும்
  2. குறைக்கும்
  3. குலைக்கும்
  4. கொலைக்கும்

விடை : குரைக்கும்

5. “ஆசி” இச்சொல்லின் பொருள் …………………………

  1. புகழ்ந்து
  2. மகிழ்ந்து
  3. இகழ்ந்து
  4. வாழ்த்து

விடை : வாழ்த்து

6. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக

  1. வாரம் + சந்தை = வாரச்சந்தை 
  2. பழைமை + மொழி = பழமொழி

2. வினாக்களுக்கு விடையளிக்க.

1. அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?

அமுதவாணன் யானையிடம் ஆசி வாங்கினான்

2. ‘ஆநெய்’ ‘பூ நெய்’ ஆகியன எவற்றைக் குறிக்கின்றன? 

ஆநெய்:-

ஆநெய் என்பது பசுவின் நெய்யினை குறிக்கின்றது.

பூ நெய்:-

பூ நெய் என்பது பூவில் ஊறும் தேனை குறிக்கின்றது.

3. “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” – இப் பழமொழியின் பொருளைச் சொந்த நடையில் கூறுக.

அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பது தான் சரியான வாக்கியம். அதாவது புரியாமல் எதையும் மனப்பாடம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது. கற்கும்போதே தெளிவாகப் புரிந்து கற்க வேண்டும்.

3. பழமொழியை நிறைவு செய்க

Class 4 Tamil Solution - Lesson 5 பழமொழியை நிறைவு செய்க
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
Class 4 Tamil Solution - Lesson 5 பழமொழியை நிறைவு செய்க
குரைக்கின்ற நாய் கடிக்காது
Class 4 Tamil Solution - Lesson 5 பழமொழியை நிறைவு செய்க
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
Class 4 Tamil Solution - Lesson 5 பழமொழியை நிறைவு செய்க
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
Class 4 Tamil Solution - Lesson 5 பழமொழியை நிறைவு செய்க
ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்

படித்தும், பாடியும் மகிழ்க!

அச்சம் இல்லாதவன் தானே!
அம்பலம் ஏறுவான் தேனே!ஆவும் தென்னையும் தானே!
ஐந்தே வருடம் பலன் தரும் மானே!

எஃகு போல தானே!
உறுதியாய் இரு தேனே!

மூத்தோர் சொல் தானே!
பழமொழிகள் ஆகும் மானே!

4. படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்வு செய்க.

Class 4 Tamil Solution - Lesson 5 படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்வு செய்க.

சிறுதுளி பெருவெள்ளம்.
யானைக்கும் அடி சறுக்கும்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

5. முதலெழுத்து மாற்றினால் வேறுசொல்

1.

 படிக்க நீயும்விரும்பு
பாறையை உடைப்பதுரும்பு
சுவைத்தால் இனிக்கும்ரும்பு
பூ மலரும் முன்புரும்பு

2.

கையின் மறுபெயர்விரம்
வயலுக்கு இடுவதுரம்
பூக்களைத் தொடுத்தால்ரம்
புன்னை என்பதுரம்

3.

நீர் இறைத்திடுவதுற்றம்
புயலோ இயற்கைசீற்றம்
தவறு இழைப்பதுகுற்றம்
வீட்டின் உள்ளேதேற்றம்

அறிந்து கொள்வோம்

முன்னோர்கள் தங்கள் அனுபவத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கக் கூறிய மொழிகளே முதுமொழிகள் அல்லது பழமொழிகள் ஆகும்.

செயல்திட்டம்

ஐந்து பழமொழிகளை எழுதி, அவை இன்று உணர்த்தும் பொருளையும் அதன் உண்மையான பொருளையும் எழுதி வருக

1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

பொருள்

மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் பிள்ளை தானே வளரந்து விடும்.

உண்மையான பொருள்

ஊரான் வீட்டுப் பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியைப் பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயிற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாகத் தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.

2. கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை?

பொருள்

கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.

உண்மையான பொருள்

கழுதைக்கு தெரியுமாம் “கற்பூர வாசனை” கழு என்பது ஒரு வைக கோரைப்புல். அதில் பாய் தைத்துப் படுத்தால் கற்பூர வாசனை தெரியுமாம் என்பதே சரியான விளக்கம்.

3. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்

பொருள்

ஆயிரம் மக்களைக் கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள்

ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன் ஆவான். நோயைப் போக்க ஆயிரம் வேரைக் கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

4. களவும் கற்று மற

பொருள்

தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்றுக்கொண்டு, மறந்து விட வேண்டும்.

உண்மையான பொருள்

களவும் கத்தும் மற

களவு திருடதல்; கத்து – பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டம் என்பதே உண்மையான பொருளாகும்.

5. பந்திக்கு முந்து! படைக்குப் பிந்து

பொருள்

பந்திக்கு முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் பலகாரம் நமக்கு முழுமையாக கிடைக்காது. போருக்கு செல்பவன் படைக்கு பின்னால் நின்று கொள்ள வேண்டும். அப்படி செய்தால் உயிருக்கு ஆபத்து வராது.

உண்மையான பொருள்

பந்திக்கு முந்துவது என்பது சாப்பிடபோகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கி செல்கிறதாே, அது போல, போரில் எவ்வளவு தூரம் வலது கை வில்லின் நாணைப் பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய்ப் பாயும். இது போருக்கு போகும் வில் வீரருக்காகச் சொல்லியது.

இணைத்து மகிழ்வோம்

Class 4 Tamil Solution - Lesson 5 இணைத்து மகிழ்வோம் 

1. Talk less work moreநல்ல அறிவுரை விலை மதிப்பற்றது
2. No pain no gainமின்னுவதெல்லாம் பொன்னல்ல
3. Good council has no priceகுறைவாகப் பேசு அதிகம் வேலை செய்
4. Haste makes wasteஉழைப்பின்றி ஊதியமில்லை
5. All that glitters is not goldபதறாத காரியம் சிதறாது
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – ஆ

கூடுதல் வினாக்கள்

1. பழமொழிகள் என்றால் என்ன?

முன்னோர்கள் தங்கள் அனுபவத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கக் கூறிய மொழிகளே பழமொழிகள் ஆகும்.

2. அமுதவாணன் எதற்காகக் கல்லைத் தேடினான்?

அமுதவாணன் தன் தாத்தாவுடன் வாரச் சந்தைக்குச் சென்றான். செல்லும் வழியில் நாய்கள் குரைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அமுதவாணன் நாய்களை விரட்ட கல்லைத் தேடினான்.

3. “நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்ற பழமொழியின் பொருள் யாது?

கல்லால் செதுக்கிய சிலை தானே கோவில்களில் இருக்கிறது. அந்தச் சிலைகளைக் கல்லாகப் பார்த்தால், இறைவன் என்ற நாயகன் தெரியமாட்டார். சிலையை நாயகனாகப் பார்த்தால், கல் தெரியாது. இதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.

4. “குரைக்கின்ற நாய் கடிக்காது” என்ற பழமொழியின் பொருள் யாது?

குரைக்கின்ற நாய் என்பது தவறு. குழைகின்ற நாய் கடிக்காது என்பதே சரியானது. குழைகின்ற என்றால் நம்மோடு பழகிய நாய் நம்மைப் பார்த்து வாலை ஆட்டிக் குழைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துமே தவிர கடிக்காது என்பதே பொருள்.

5. “யானை க்கொரு காலம் வந்தால் பூனை க்கொரு காலம் வரும்” என்ற பழமொழியின் பொருள் யாது?

யானை கிடையாது அது ஆனை அதை பிரித்து எழுதினால் ஆ + நெய் அதாவது பசுவின் நெய். பூனை கிடையாது. அது பூநெய் அதைப் பிரித்து எழுதினால் பூ + நெய் அதாவது பூவில் ஊறும் தேன். நாம் இளமையில் பசுநெய்யை விரும்பி உண்போம். வயதான முதுமையில் தேனோடு மருந்து கலந்து உண்போம் என்பதே பழமொழியின் பொருள்.

6. “ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்”  என்ற பழமொழியின் பொருள் யாது?

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்பது தவறு. அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பது தான் சரி. அதாவது புரியாமல் எதையும் மனனம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது. கற்கும்போதே தெளிவாகப் புரிந்த பிறகுதான் நினைவில் கொள்ள வேண்டும்.

7. தமிழ்க்குடியின் சிறப்பினைக் கூறும் பழமொழி எது?

“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி” என்பதே தமிழ் குடியின் சிறப்பைக் கூறும் பழமொழி ஆகும்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment