பாடம் 6. முயல் அரசன்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 6 – முயல் அரசன் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வாங்க பேசலாம்
இந்தக் கதையை உனது சொந்த நடையில் கூறுக
ஒரு காட்டில் நிறைய மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்தக் காட்டிற்கு ஒரு புலி அரசனாக இருந்தது. அந்தப்புலி எல்லா மிருகங்களை அடித்துக் கொன்று சாப்பிட்டு வந்தது. ஒரு நாள், விவசாயின் தோட்டத்தில் விளைந்திருந்த கனிகளையும், காய்களையும், கிழங்குகளையும் வயிராத் தின்றது ஒரு முயல். ஆனாலும் முயலுக்கு ஒரே கவலை இருந்தது. புலிக்கு கிடைக்கும் மரியாதை தனக்கும் கிடைக்க வேண்டும் என்றும் புலியை விட தானே சிறந்தவன் என்றும் புலிக்கும் காட்டில் உள்ள விலங்குகளுக்கும் நிருபிக்க வேண்டுமென முயலுக்கு ஆசை தோன்றியது. உடனே முயில் சிந்தித்து செயல்படத் தொடங்கியது.
அதற்காக ஒரு திட்டத் தீட்டியது. புலி வரும் பாதையில கால்மேல் கால்போட்டு அமர்ந்து இருந்தது. அந்த வழியாக வந்த புலி முயலைப் பாரத்து “உனக்கு எவ்வளவு தைரியம்…. இவ்வளவு காலம் என்னைக் கண்டாலே ஓட்டம் எடுப்பாய். இப்பொழுது கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து இருக்கிறாயா உன்னை….” என்று புலி கூறியது. அதனைக் கேட்ட முயல், “ஓடினேனா.. நானா. உன்னைக் கண்டா…? உன்ககுச் செய்தியே தெரியாதா? உனங்கு எங்கே தெரிப்போகிறது இங்கு கூட்டம் நடந்தபோது நீதான் அப்பாவி விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தாயே… அந்தக் கூட்டத்தில், நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக் கூடாதா? அப்படினால் வேறு யார் அரசனாக இருக்கப் போகிறது” என்று கேட்டது. அதற்கு முயல் “என்னைத்தான் எல்லா விலங்குகளும் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்தன்” என்று கூறியது. புலி முயலிடம், நீ அரசானா! இப்போதே உன்னைக் கொன்று சாப்பிடுகிறேன் பார்” என்று முயலின் அருகில் சென்றது. முயல் நீ நம்பவில்லையென்றால் என்னை என் முதுகில் ஏற்றிக் கொண்டு போ உனக்கு நிருபிக்கிறேன்” என்றது. புலியும் அதற்கு ஒப்புக் கொண்டு முயலைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு காட்டிற்குள் வலம் வந்தது.
இவைகளைக் கண்ட எல்லா மிருகங்களும் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் பார்த்தன. இதனைக் கண்ட புலி, “ஒரு வேளை முயல் சொன்னது சரியாகத்தான் இருக்குமோ” என்று எண்ணியது. பிறகு முயல் அரசே! நான் உங்களை தவறாக பேசியிருந்தா மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கேட்டது புலி. அதற்கு முயல் இப்போது சொல் இந்த காட்டிற்கு அரசன் யார்? என்று புலியிடம் கேட்டது. புலியும் நீங்கள் தான் என்றது. பிறகு உன்னை மன்னித்து விடுகிறேன் நீ இந்தக் காட்டிலே இருக்கக் கூடாது. எங்காவது ஓடிப்போய் விடு” என்று கட்டளையிட்டது. அதனை கேட்ட புலியும் காட்டை விட்டுச் ஓடிச் சென்றது. பிறகு முதல் மகிழ்ச்சியாக அந்தக் காட்டைச் சுற்றி வந்தது. இப்போதெல்லாமல் முயல் வயிராத் தின்றுவிட்டு நிம்மதியாக, சுகமாகப் பகல் வேளைகளில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தது.
காட்டில் அரசனாக நீ எந்த விலங்கை அமர்த்துவாய்? காரணம் என்ன?
காட்டில் அரசனாக நான் யானையை அமர்த்துவேன்.
ஏனென்றால் காட்டிலுள்ள விலங்களில் மிகவும் பலம் வாய்ந்த விலங்கு யானை. ஆனால் யானை தன் வலிமையால் எந்த விலங்குளையும் துன்புத்துவது இல்லை. மிகவும் பாசமான விலங்கு யானை. மிகுவும் சாதுவான நிலையிலேயே இருக்கும். விலங்குகளில் அறிவுமிக்கதும் யானையேயாகும். கூட்டம் கூட்டமாக வாழும் பண்பினை உடையது. குறிப்பு உணர்ந்து செயல்படும். ஆகவே யானைனையே அரசனாக அமர்த்துவேன்.
புலி எதையும் ஆராயமல் முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக் கொண்டது சரியானதா? கலந்துரையாடுக.
பாபு | அமுதா! புலி எதையும் ஆராயாமல் முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக் கொண்டது சரியானதா? |
அமுதா | புலி, முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக் கொண்டது தவறுதான். |
பாபு | தவறு என்றால் ஏன் அப்படி செய்தது? |
அமுதா | சந்தர்ப்பமும் சூழ்நிலையும் முயலுக்கு சாதகமாக அமைந்ததே புலி நம்பியதற்குக் காரணம். |
பாபு | எப்படி சூழ்நிலை சாதகமாக அமைந்தது என்று கூறுகிறாய்? |
அமுதா | முயல், புலியைப் பார்த்து ஓடும் விலங்கு. அப்படியிருக்கும் போது, முயல் புலி வரும் வழியில் கால் மேல் கால்போட்டு அமர்ந்து இருந்தது முதல் காரணம். |
பாபு | அடுத்த காரணம் என்ன? |
அமுதா | முயல் சொன்ன பொய் மெய்போலவே அமைந்தது இரண்டாவது காரணம். |
பாபு | வேறு என்ன காரணம் இருக்கும் என்று நினைக்கிறாய்? |
அமுதா | புலியின் மேல் ஏறி முயல் வலம் வரும்போது மற்ற விலங்குகள் ஆச்சரியமாக பார்த்ததைத் தன்னைக் கண்டுதான் எல்லாரும் பயப்படுகிறார்கள் என்று சூழ்நிலையத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்தி முயல் புலியிடம் கூறியது தான், புலி ஏற்றுக் கொண்டதற்கு முதன்மையான காரணம். |
பாபு | அப்படியென்றால் முயல் செய்தது சரி என்கிறாயா? |
அமுதா | சரியென்று சொல்லவில்லை. முயல் செய்த காரியத்தால் அனைத்து விலங்குகளும் புலியிடம் இருந்து காப்பாற்றப்பட்டனவே அதனால் முயல் செய்தது நல்லது தானே! என்று தான் சொல்கிறேன். இருந்தாலும் புலி முயல் சொன்னதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். |
பாபு | சரி அமுதா உன்னுடன் உரையாடியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி |
அமுதா | உனக்கும் நன்றி. |
சிந்திக்கலாமா?
தவறு செய்பவர்களை என்ன செய்யலாம்? திருத்தலாமா ? அப்படியே விட்டுவிடலாமா ?
இரண்டும் சரியானதுதான்.
தவறு செய்பவர்களுக்குத் தண்டனை சரியே. ஏனென்றால், தவறு செய்து மனித இயல்பு. தவறே செய்யாத மனிதர்கள் இல்லை. ஆனால் தவறு, சிறிய தவறு, பெரிய தவறு என்று இருவகைகளில் அமைகிறது. சிறிய தவறு செய்தால் அவர்களை மன்னித்து விடலாம். ஆனால் பெரிய தவறு செய்தவர்களுக்குக் கட்டாயம் தண்டனை கொடுத்தாக வேண்டம். இல்லையென்றால் மனித சமுதாயத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். தண்டனை கூட திருத்துவதற்கு வாய்ப்பாக அமையும்.
1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “பல்லாண்டு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- பல் + லாண்டு
- பல் + ஆண்டு
- பல + ஆண்டு
- பல + யாண்டு
விடை : பல + ஆண்டு
2. “செயலாக்கம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
- செய + லாக்கம்
- செயல் + ஆக்கம்
- செயலா + ஆக்கம்
- செயல் + லாக்கம்
விடை : செயல் + ஆக்கம்
3. “இப்போது + எல்லாம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
- இப்போதெல்லாம்
- இப்போது எல்லாம்
- இப்போல்லாம்
- இப்போயெல்லாம்
விடை : இப்போதெல்லாம்
4. “பேசி + இருந்தால்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________
- பேசியிருந்தால்
- பேசியிரு
- பேசிஇருந்தால்
- பேசவிருந்தால்
விடை : பேசியிருந்தால்
5. “வந்து + இருந்தது” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக் கும் சொல் __________
- வந்துஇருந்தது
- வந்திஇருந்தது
- வந்திருந்தது
- வந்தியிருந்தது
விடை : வந்திருந்தது
2. வினாக்களுக்கு விடையளி
1. முயலின் கவலைக்குக் காரணம் என்ன?
புலி தம் முன்னோரைத் தன் பசிக்கு இரையாக்கியது போல் என்றாவது ஒரு நாள் நம்மையும் கொன்று தின்று விடுமோ என்பது தான் முயிலின் கவலைக்குக் காரணம் ஆகும்.
2. விலங்குகளின் கூட்டத்தில் என்ன எடுக்கப்பட்டதாக முயல் கூறியது?
முயல் புலியிடம் நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும்
நீடிக்கக் கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீர்மானம் நிறைவேற்றின என்று கூறியது.
3. முயல், தான் அரசன் என்பதை மெய்பிக்க புலியை என்ன செய்யக் கூறியது?
முயல், தான் அரசன் என்பதை மெய்பிக்க புலியிடம் உன் முதுகில் என்னை ஏற்றிக்கொண்டு போகச் சொன்னது
4. புலியை மன்னித்து விட்டுவிட முயல் கூறிய நிபந்தனை என்ன?
புலியை மன்னித்து விட்டுவிட “உன்னை மன்னித்து விடுகிறேன். நீ இந்தக் காட்டிலேயே இருக்கக்கூடாது. எங்காவது ஓடிப்போய்விடு! என்ற நிபந்தனையை போட்டது.
5. விலங்குகள் உண்மையில் எதைக் கண்டு அஞ்சின?
விலங்குகள் உண்மையில் புலியைக் கண்டு அஞ்சின
3. எதிர்ச்சொல்லால் சொற்றொடரை நிறைவுசெய்க
பழைய | கவலை | மெதுவாக |
தொடக்கம் | தாழ்ந்த | பொய் |
1. பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர், பெய்யாவிட்டால் _______________ அடைவர்.
விடை : கவலை
2. எப்பொழுதும் உண்மை பேசவேண்டும், _______________ பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.
விடை : பொய்
3. தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின்
விடை : தொடக்கம்
4. கணினி மூலம் கல்வி கற்பது புதியமுறை . கரும்ப லகை மூலம் கல்விகற்றது _______________ முறை
விடை : பழைய
5. பிறருக்குக் கொடுத்து உதவுவது உயர்ந்த குணம். பிறர் பொருளைத் திருடுவது _______________ குணம்
விடை : தாழ்ந்த
6. மருத்துவமனைகளில் சத்தமாகப் பேசாமல் _______________ பேச வேண்டும்.
விடை : மெதுவாக
4. சரி ✓ தவறு X எனச் சரியான குறியிடுக
1. புலி, முயலின் மூதாதையரைக் கொன்று தின்றுவிட்டது. | ✓ |
2. முயல் புலிக்குக் கரும்பு கொடுத்தது. | X |
3. விலங்குகளின் கூட்டம் நடந்த போது புலி தூங்கிக் கொண்டிருந்தது. | X |
4. முயல் புலியிடம் காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் தன்னைக் கண்டு அஞ்சுவதாகக் கூறியது. | ✓ |
5. முயல் புலியைக் காட்டிலிருந்து ஆட்சி செய்ய. வேண்டும் எனக் கூறியது. | X |
5. சக்கரம் காட்டும் ஈரெழுத்துச் சொற்கள் என்ன என்பதை கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடிக்க.
1. உலகம் என்பதன் வேறு சொல் ……………………………
விடை : பார்
2. திருவிழா என்றாலே இது இருக்கும் ……………………………
விடை : தேர்
3. மக்கள் சேர்ந்து வாழுமிடம் …………………………
விடை : ஊர்
4. இது இல்லாமல் உயிர்கள் இல்லை …………………………..
விடை : நீர்
5. நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால் …………………………..
விடை : மோர்
6. மரம், செடி கொடி மண்ணில் ஊன்றி நிற்க உதவும் …………………………..
விடை : வேர்
7. மன்னர்கள் தம் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த அண்டை நாடுகளோடு செய்வது ……………………………
விடை : போர்
8. பூத்தொடுக்க உதவுவது …………………………..
விடை : நார்
6. எது முன்னே? எது பின்னே? அகர வரிசைப்படுத்துக.
(பௌத்தம், பெட்டி, போர்வை, படை, பூமி, பிண்ணாக்கு பீர்க்கு, புத்தகம், பைந்தமிழ், பொத்தான்.)
விடை : படை, பிண்ணாக்கு, பீர்க்கு, புத்தகம், பூமி, பெட்டி, பைந்தமிழ், பொத்தான். போர்வை, பௌத்தம்
7. காலியிடங்களைக் கூடையில் உள்ள சொற்களைக் கொண்டு நிரப்புக
(நெல், பால், அகழ், பள்ளி, மகிழ்ச்சி, வள்ளி, மல்லி, அகல், வாள், நாள், யாழ்)
1. பல்லினை மெல்லத் தொடு
விடை : பல்லி, மெல்ல, மெலி, பல், சொல், நல்ல
2. நாவினை உள்ளே தள்ளு
விடை : வாள், தோள், தாள், வாள், முள், வெள்ளி
3. நாவினைச் சுழற்றி முழக்கு
விடை : அழகு, ஆழ், தமிழ், புகழ், வினை, சூழ்