Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 1.2 – கவிதைப் பட்டிமன்றம்

பாடம் 1.2 கவிதைப் பட்டிமன்றம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 1.2 – கவிதைப் பட்டிமன்றம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

கற்பவை கற்றபின்

1. அறிவு, பண்பு – இவற்றில் எது சிறந்தது என நீ கருதுகிறாய்? 

அறிவு, பண்பு – இவற்றில் அறிவே சிறந்தாக கருதுகிறேன்.

2. அறிவுதான் முன்னேற்றத்தின் ஆணிவேர்’ – இது பற்றி உன் கருத்து என்ன?

அறிவுதான் முன்னேற்றத்தின் ஆணிவேர் என்பது உண்மை. மனிதனின் அறிவு தான் அவனைச் சிந்திக்க வைத்து, இன்று நாகரீகமான மனிதனாக உருவாக்கியது. ஆதிகால மனிதன் படிப்படியான அறிவு வளர்ச்சியால் தான் இன்று மாற்றம் கொண்டு உலகம் ஆள்கின்றான்.

3. நாட்டின் [ஊரின், வீட்டின்] வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா? வகுப்பறையில் சொற்போர் நிகழ்த்துக.

நாட்டின் [ஊரின், வீட்டின்] வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா?

நல்லவர்கள்வணக்கம். காந்தியடிகள், தந்தை பெரியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் தங்கள் நற்பண்புகளால் சிறந்தது. தன்னலம் இல்லாமல்  நாட்டுமக்கள் நலனுக்காகவே பாடுபட்டவர்கள். நாடு விடுதலை பெறவும். தீய வழிகளில் மக்களைச் செல்லவிடாமல் நல்வழி காட்டி உழைத்தவர்களால் தான் நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளளது. எனவே, நாட்டின் வளர்சியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் நல்லவர்களே!
வல்லவர்கள்வணக்கம். சர்.சி.வி. இராமன், கணித மேதை இராமானுஜம். டாக்டர் அப்துல் கலாம் ஆகியோர் வல்லவர்கள். தங்கள் கண்டுபிடிப்பால் உலகமே போற்றும் வண்ணம் நம் நாட்டை அறிவியல் துறையில் உயரத்தி இருக்கிறார்கள். எனவே, நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பவர்கள். வல்லவர்களே!

படித்து அறிக 

இலக்கிய மன்றத் தொடக்க விழா

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரைக.காவியா, ஐந்தாம் வகுப்பு
தலைமை உரைதலைமையாசிரியர்

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அரியலூர்.

சிறப்பு உரைசிறப்பு விருந்தினர்

முனைவர். இரா. அன்பழகன்

மாவட்ட இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.

நன்றி உரைசெ. முத்து நிலவன், நான்காம் வகுப்பு
நாட்டுப் பண்

மதிப்பீடு

அ. சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. “நற்றமிழ்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________

  1. நல் + தமிழ்
  2. நற் + றமிழ்
  3. நன்மை + தமிழ்
  4. நல்ல + தமிழ்

விடை : நன்மை + தமிழ்

2. ‘உலகம்‘ என்னும் பொருளைக் குறிக்காதல் __________________

  1. வானம்
  2. அண்டம்
  3. செகம்
  4. அகிலம்

விடை : வானம்

3. “அறிவு + ஆயுதம்” என்பதை சேர்த்து எழுதக் கிடைக் கும் சொல் ____________

  1. அறவாயுதம்
  2. அறிவாயுதம்
  3. அறிவு ஆயுதம்
  4. அறிவாய்தம்

விடை : அறிவாயுதம்

4. “புகழ்” இச்சொல்லின் எதிர்ச்சொல் __________________

  1. இகழ்
  2. மகிழ்
  3. திகழ்
  4. சிமிழ்

விடை : இகழ்

5. “வெளிச்சம்” – இச்சொல்லைக் குறிக்காத சொல் __________________

  1. ஒளி
  2. தெளிவு
  3. விளக்கு
  4. இருள்

விடை : இருள்

ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

  1. செந்தமிழ் = செம்மை + தமிழ்
  2. கவியரங்கம் = கவி + அரங்கம்

இ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. அறிவால் உயர்ந்தவர்களாக இன்சுவை யார் யாரைக் குறிப்பிடுகிறார்?

அப்துல்கலாம், தாமஸ் ஆல்வா எடிசன்

2. பண்பால் சிறந்தவர்களாக மதியொளி எவரைெயல்லாம் குறிப்பிடுகிறார்?

புத்தர், திருவள்ளுவர்

3. உயிர் காக்கும் நெல்லிக்கனியை யார், யாருக்குக் கொடுத்தார்?

உயிர் காக்கும் நெல்லிக்கனியை அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்தார்.

4. நடுவர் கூறிய தீர்ப்பை உன் சொந்த நடையில் கூறுக.

அறிவும் பண்பும் கண்ணின் இரு விழிகள் போன்றவை. ஐம்பொறிகள் பண்பாகவும், உலகம் முழுவதும் அறிவாகவும் கொண்டு சுற்றி வரும் எனவே இவை இரண்டுமே சிற்பு என்று நடுவர் தீர்ப்பு கூறினார்.

5. ஐம்பொறிகளுள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கையும் எழுதுக.

கண், ————, ————, ————, ———-.

கண், காது, வாய், மூக்கு, மெய் (உடல்)

6. தமிழைச் சிறப்பிக்கும் பெயர்களைப் பாடப்பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.

செந்தமிழ்நறுந்தேன்
முத்தமிழ்நற்றமிழ்
செகம் போற்றும் செந்தமிழ்

ஈ. சிந்தனை வினாக்கள்

1. கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் எது சிறந்தது என நீ கருதுகிறாய்? ஏன்?

கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் கல்வியே சிறந்தது என நான் கருதுகிறேன். ஏனென்றால், செல்வம் அழிந்து விடும். வீரம் வயதானால் குறைந்து விடும். அழியாமல் குறையாமல் இருப்பது கல்வி மட்டுமே! எனவே கல்வியே சிறந்தது என்பேன்.

2. “வெறும் பண்பை வைத்துக்கொண்டு பெரும் பந்தல் போடலாமா?” இத்தொடருக்கான பொருளை உம் சொந்தநடையில் வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.

வெறும் பண்பை வைத்துக் கொண்டு பெரும் பந்தல் போடலாமா? இத்தொடருக்கான பொருள் வெற்றுப் பண்பை வைத்து பெரிய பந்தல் போட முடியுமா? என்பதே! வெறம் பண்பை வைத்துக் கொண்டு கீற்று பந்தல் போட முடியாமல் போகலாம். ஆனால் வாழ்க்கைப்ப பந்தல் போடலாம்.

கூடுதல் வினாக்கள்

அ. சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. “சொல்லழகி” என்று நடுவரால் குறிப்பிடப்படுபவர் …………..

  1. சலிமா
  2. இன்சுவை
  3. அருளப்பன்
  4. மதியொளி

விடை: சலிமா

2. தனித்துவமிக்க என்று நடுவரால் குறிப்பிடப்படுவர்……………..

  1. அருளப்பன்
  2. மதியொளி
  3. சலிமா
  4. இன்சுவை

விடை : இன்சுவை

3. அக்னி தந்தவர் …………………..

  1. தாமஸ்ஆல்லா எடிசன்
  2. அப்துல்கலாம்
  3. புத்தர்
  4. வள்ளுவர்

விடை : அப்துல்கலாம்

ஆ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பட்டிமன்றத் தலைப்பு யாது?

பட்டிமன்றத் தலைப்பு : அறிவா? பண்பா?

2. பட்டிமனற்த்தில் பங்கேற்ற மாணாக்கர் யாவர்?

சலிமா, இன்சுவை, அருளப்பன், மதியொளி

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment