Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 2.3 – வறுமையிலும் நேர்மை

பாடம் 2.3 வறுமையிலும் நேர்மை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 2.3 – வறுமையிலும் நேர்மை to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

கற்பவை கற்றபின்

1. நாம் என்னென்ன நற்பண்புகளைப் பெற்றிருக்கவேண்டும்? பட்டியலிடுக.

அன்பு, பண்பு, இரக்கம், பொறுமை, சகிப்பபுத்தன்மை, மனிதநேயம், புறங்கூறாமை,  உண்மை பேசுதல், இன்னா செய்யாமை, புறங்கூறாமை, களவாமை, சினம் கொள்ளாமை, தன்னம்பிக்கை, தன்முனைப்பு,, விட்டுக்கொடுத்தல், உயிரிரக்கம் போன்ற நற்பண்புகளை பெற்றிருக்க வேண்டும்.

2. நேர்மையானவர் என்று நீ யாரை நினைக்கிறாய்? அவரைப்பற்றி ஐந்து மணித்துளி பேசுக.

தந்தை பெரியாரை நான் நேர்மையானவராக நினைக்கிறேன். தந்தைப் பெரியார் தனக்கு என்று வாழாமல் தாழ்த்தப்ட்ட மக்களுக்காகவும், சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும் தன் இறுதி மூச்சு வரை பாடுபட்டவர். பணம் பொருளுக்கு ஆசைப்படாதவர். பெரியார் தான் நினைத்திருந்தால் நம் நாட்டின் பிரதமாகவோ, முதலமைச்சராகவோ ஆகியிருக்கலாம். ஆனால் அதை அவர் விரும்பவில்லை. அப்பணியை ஏற்றால் மக்களுக்காக உழைக்க முடியாது என்று கருதி அவற்றிற்கு ஆசைப்டவில்லை. மக்களைப் பகுத்தறிவின் வழி கொண்டு சென்ற அவர் மட்டுமே நேர்மையானவராகக் கருதுவேன்.

மதிப்பீடு

அ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பசியால் வாடிய ஊர்மக்களுக்குப் பணக்காரர் எவ்வாறு உதவினார்?

பஞ்சம் காரணமாக ஊரில் உள்ளவர்கள் நல்ல உள்ளம் படைத்த ஒருவரிடம், பசியால் வாடும் தங்கள் குழந்தைகளுக்கு உதவும் படி வேண்டினர். ஊரில் பசியால் குழந்தைகள் யாரும் வாடக்கூடாது என்பதற்காகப் பணக்காரர். ஆளுக்கு ஒரு கொழுக்கட்டை கிடைக்குமாறு தன் வீட்டிற்கு வெளியே தினமும் கடையில் தேவையான அளவு கொழுக்கட்டைகளை வைத்தார்.

2. சிறுமியின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு யாது?

கொழுக்கட்டைக் கூடையில் இருந்து இறுதியாக என்ன கிடைக்கின்றதோ அதைத்தான் தினமும் சிறுமி இளவேனில் எடுப்பாள். ஆறாம் நாள் வழக்கமான கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள். கொழுக்கட்டையை இரண்டாகப் பிளந்த போது தங்கக்காசு கிழே விழந்தது. அம்மா அவளிடம் கொழுக்கட்டைய கொடுத்தவர்களிடம் கொண்டுபோய் கொடுக்கச் சொன்னார். அவளும் பணக்காரரிடம் சென்று நடந்ததைக் கூறி பொற்காசைக் கொடுத்தாள். உனது பொறுமைக்கும் நற்பண்புக்கும் நான் கொடுக்கும் பரிசு இது, எடுத்துச் செல் என்றார்.

ஆ. சிந்தனை வினாக்கள்

‘வறுமையிலும் நேர்மை‘ என்னும் கதையில், சிறுமியின் இடத்தில் நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய்? 

‘வறுமையிலும் நேர்மை‘ என்னும் கதையில், சிறுமியின் இடத்தில் நான் இருந்தால் சிறுமி இளவேனில் போல் தங்கக்காசை பணக்காரிடமே கொடுப்பேன்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment