Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 3.2 – படம் இங்கே! பழமொழி எங்கே?

பாடம் 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 3.2 – படம் இங்கே! பழமொழி எங்கே? to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

கற்பவை கற்றபின்

1. உன் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி பேசும்போது பயன்படுத்தும் பழமொழிகளைத் தொகுத்து வருக. அவைபற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.

  • ஒற்றுமையே பலம்
  • சிறுதுளிப் பெருவெள்ளம்
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
  • தனிமரம் தோப்பாகாது.
  • இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே
  • உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகுமா?
  • அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது.

ஆகியன என் தாத்தா, பாட்டி பேசும்போது பயன்படுத்தும் பழமொழிகள் ஆகும்.

2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பழமொழிகளையும், அவற்றின் பொருள்களையும் உம் சொந்த நடையில் கூறுக.

1. யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!

பொருள் : முன்னெச்சரிக்கை அறிந்து செயல்படுதல்.

2. இக்கரைக்கு அக்கரை பச்சை

பொருள் : இதற்கு அதுவே பரவாயில்லை

3. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.

பொருள் : ஆடி மாதக் காற்றில் அம்மி கூடப் பறந்து விடும்.

4. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

பொருள் : திருக்குறளும், நாலடியாரும் வாழ்க்கைக்கு பயன்படும்

5. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

பொருள் : வாய்ப்பு கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

6. அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

பொருள் : செலை ஆழ்ந்து செய்ய வேண்டும்.

3. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள புதிர்களையும் அவற்றிற்கான விடைகளையும் உம் சொந்த நடையில் கூறுக.

Class 5 Tamil Solution - Lesson 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?Class 5 Tamil Solution - Lesson 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?
யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே! காற்றுள்ள போதே தூற்றிக்கொள் 
Class 5 Tamil Solution - Lesson 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?Class 5 Tamil Solution - Lesson 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.இக்கரைக்கு அக்கரை பச்சை
Class 5 Tamil Solution - Lesson 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?Class 5 Tamil Solution - Lesson 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

4. பள்ளி நூலகத்தில் உள்ள ‘பழமொழிக்கதைகள்’ புத்தகத்தைப் படித்து பழமொழிக்கான விளக்கத்தை வகுப்பறையில் கதையுடன் பகிர்ந்து கொள்க.

ஒரு குளத்தின் அருகே வசித்து வந்த எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒரு நாள் அந்தக் குளத்தில் கோடைகாலம் என்பதால் நீர் வறண்டு விட்டுது. எலி அலைந்து, திரிந்து எப்படியோ ஒரு நீருள்ள பெரிய குளத்தை கண்டுபிடித்தது. தனது நணபன் தவளையை அழைத்துக் கொண்டு சென்றது. வழியில் காணாமல் போய்விடுவோம் அதனால் எலியும் தவளையும் கயிற்றால் இருவரின் காலையும் இணைத்துக் கட்டிக் கொண்டன. நீண்ட பயணத்திற்குப் பிறகு குளம் வந்தது. குளத்தைக் கண்டதும் கயற்றில் கட்டியுள் எலியை நினைக்காமல், நன்றி மறந்து குளத்துக்குள் குதித்து விளையாடியது. கயிற்றால் கட்டப்பட்ட எலி பரிதாபமாக செத்தது. பருந்து ஒன்று எலியை தின்பதற்காகத் தூக்கிய போது எலியுடன் கட்டப்பட்ட தவளையும் மாட்டிக் கொண்டு மாண்டு போனது.

கதை உணரத்தம் பழமொழிகள்

  • முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும்.
  • கூடா நட்பு கேடாய் முடியும்.

மதிப்பிடு

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. “மரப்பொந்து” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. மரம் + பொந்து
  2. மர + பொந்து
  3. மரப் + பொந்து
  4. மரப்பு + பொந்து

விடை : மரம் + பொந்து

2. “அக்கரை” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. அக் + கரை
  2. அந்த + கரை
  3. அ + கரை
  4. அ + அரை

விடை : அ + கரை

3. “சூறை + காற்று” – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. சூறைகாற்று
  2. சூற்காற்று
  3. சூறக்காற்று
  4. சூறைக்காற்று

விடை : சூறைக்காற்று

4. “கண் + இமைக்கும்” – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. கண்ணிமைக்கும்
  2. கண்இமைக்கும்
  3. கண்மைக்கும்
  4. கண்ணமைக்கும்

விடை : கண்ணிமைக்கும்

5. “அமர்ந்து + இருந்த” – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. அமர்ந்திருந்த
  2. அமர்ந்துஇருந்த
  3. அமர்திருந்த
  4. அமர்ந்துதிருந்த

விடை : அமர்ந்திருந்த

ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

  1. மணியோசை = மணி + ஓசை
  2. தேனிசை = தேன் + ஓசை

இ.பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க:

புத்திஅடிகாலை
பயிர்வளையாதது

1. யானைக்கும் _______________ சறுக்கும்

விடை : அடி

2. விளையும் _______________ முளையிலே தெரியும்

விடை : பயிர்

3. ஐந்தில் _______________ ஐம்பதில் வளையாது

விடை : வளையாதது

4. ஆத்திரக்காரனுக்குப் _______________ மட்டு

விடை : புத்தி

5. ஆழம் தெரியாமல் _______________ விடாதே

விடை : புத்தி

ஈ. சொல்லை இடம் மாற்றிப் பழமொழியைக் கண்டுபிடிக்க.

1. உழுவதை அகல விட உழு ஆழ

விடை : அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

2. வளையாதது வளையாது ஐம்பதில் ஐந்தில்

விடை : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

3. மிஞ்சினால் அளவுக்கு நஞ்சு அமிழ்தமும்

விடை : அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு

4. குற்றம் சுற்றம் பார்க்கின் இல்லை

விடை : குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

5. வருத்தம் சோம்பல் முதுமையில் இளமையில்

விடை : இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பழமொழி என்பது யாது?

நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழிகள் பழமொழிகள் ஆகும்.

2. கிளி, யாருக்கு மாம்பழம் தருவதாகக் கூறியது?

தான் காட்டும் படத்திற்குரிய பழமொழியைக் கூறுபவர்களுக்கு கிளி, மாம்பழம் தருவதாகக் கூறியது

3. கிளியைப் ‘பழமொழிக் கிளி’ என அழைக்கக் காரணம் என்ன?

மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை மரப் பொந்திலிருந்து எடுத்துக் காட்டும். அந்தப் படம் உணர்த்தும் பழமொழியைச் சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும். அதனால், அதைப் ‘பழமொழிக் கிளி’ என்றும் ஆசையாக அழைப்பார்கள் .

4. இப்பாடத்தில் நீ அறிந்து கொண்ட பழமொழிகளைப் பட்டியலிடு.

  • யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!
  • இக்கரைக்கு அக்கரை பச்சை
  • ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
  • அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

ஊ. சிந்தனை வினா

கிளியைப்போல், நீ பழமொழி கூறுவதாய் இருந்தால் என்ன பழமொழிக்கு எப்படிப் படம் வரைந்து விளக்குவாய்? வகுப்பறையில் செயல்படுத்து.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

Class 5 Tamil Solution - Lesson 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

 

கூடுதல் வினாக்கள்

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. “சொல்லக்குறுதி” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. சொல்லுக்கு + உறுதி
  2. சொல் + உறுதி
  3. சொல்லு + உறுதி
  4. சொல்லுக்கு + குருதி

விடை : சொல்லுக்கு + உறுதி

2. “மாங்காய்கள்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. மாங் + காய்கள்
  2. மா + காய்கள்
  3. மா + ங்காய்கள்
  4. மாங்கு + காய்கள்

விடை : மா + காய்கள்

3. “பழமை + மொழி” – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. பழமைமொழி
  2. பழையமொழி
  3. பழைமைமொழி
  4. பழமொழி

விடை : பழமொழி

4. “இ + கரை” – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. இகரை
  2. இந்தகரை
  3. இரை
  4. இக்கரை

விடை : இக்கரை

ஆ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. விடுகதை என்றால் என்ன?

ஒன்று அல்லத இரண்டு வரிகளில் ஒரு பொருளை மறைத்து விவரித்துக் கொடுக்கப்படும் ஒரு புதிர் விடுகதை ஆகும்.

2. பழமொழி பற்றிய நீதி நூல் எது?

பழமொழி பற்றிய நீதி நூல் பழமொழி நானூறு

3. கிளி எங்கு இருந்தது? அதன் பெயர் யாது?

கிளி பழையனூர் மாந்தோப்பில் இருந்தது. அதன் பெயர் செல்லம்மா

4. சிறுவர்கள் எதற்காக தோப்பிற்கு வருவார்கள்?

சிறுவர்கள் தோப்பிற்கு மாங்காய் பறிக்க வருவார்கள்.

5. தோப்பில் உள்ள மரத்தில் எவை காய்த்து தொங்கின?

தோப்பில் உள்ள மரத்தில் மாங்காய் காய்த்து தொங்கின

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment