Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 3.3 – தப்பிப் பிழைத்த மான்

பாடம் 3.3 தப்பிப் பிழைத்த மான்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 3.3 – தப்பிப் பிழைத்த மான் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

கற்பவை கற்றபின்

1. ஆபத்தில் உதவுபவர்களே உண்மையான நண்பர்கள் என்னும் தலைப்பில் பேசுக. 

தாயே! தமிழே! வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும். ஆபத்தில் உதவுபவர்களே உண்மையான நண்பர்கள் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகிறேன். நட்பு என்பது சிரித்து பேசி மகிழ்வதற்கு மட்டும் அல்ல. துன்பம் வருகின்ற போதும், ஆபத்து வருகின்ற போதும் உடன் இருப்பது தான் உண்மையான நட்பாகும். எதிர்பாராத விதமாக ஏதாவது சண்டையில் மாட்டிக் கொண்டால் நண்பனை இவன் யார் என்று எனக்கு தெரியாது என்று ஓடி ஒழிபவன் நண்பனா? இல்லை. அருகில் இருந்து காப்பவன் தான் உண்மையான நன்பன். கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையர் நட்பு, அதியமான் – ஒளவையார் நட்பு. இவர்கள் நட்பு உலகம் போற்றும் நட்பு. ஆபத்தில் உதவிய நட்பு. ஆபத்தில் உதவுங்கள் அதுதான் உண்மையான நட்பு. நன்றி

2. தீயோருடன் கொள்ளும் நட்பு, தீமையையே தரும் என்பதற்கு வேறொரு கதையைக் கூறுக.

ஒரு குளத்தல் நிறைய மீன்கள் இருந்தன. அங்க பொல்லாத கொக்கும் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் உள்ள மீன்கள் எல்லாவற்றையும் பிடித்துத் தின்று கொண்டு இருந்தது.

குளத்தில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. மீன்கள் தவிரத்தன. கொக்கு நல்லவன் போல நடித்தது. தொலைவில் உள்ள குளத்தில் நீர் இருப்பதாகவும். ஒவ்வொருவராகக் கொண்டு போய் பத்திரமாக விடுவதாகச் சொன்னது. அதனை நம்பி மீன்களும் கொக்கிடம் நட்பு கொண்டன.

கொக்கு ஒவ்வொரவராய் தினமும் கொண்டு சென்றது. ஒருநாள் இந்தக் குளத்தில் வசித்த நண்டு மீன்களிடம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கொக்கிடம் நட்பு கொண்டன. கொக்கு இந்த முறை என்னை அழைத்த கொண்டு போய்விடு என்று கொக்கிடம் சொல்லி, அதன் மீது ஏறிக் கொண்டது.

ஒரு மலையைத் தாண்டிச் செல்லும்போத கீழே மீன் முள் நிறைய கிடந்தன. மீன்களைக் குளத்தில் விடாமல் கொக்கு தின்றதை அறிந்த நண்டு மீனகளிடம் நடந்ததை சொன்னது.

மீன்களும் தீய நட்பை எண்ணி வருந்தின.

மதிப்பிடு

அ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. நரி, காகத்திடமிருந்து ஏன் மானைப் பிரிக்க எண்ணியது?

காகமும் மானும் இணைபிரியா நண்பர்கள், அவர்களை பிரித்த மானை எப்படியாவது கொன்று தின்றுவிட வேண்டும் என எண்ணி நரி, காகத்திடமிருந்து மானைப் பிரிக்க எண்ணியது

2. நரியை நண்பனாக ஏற்றுக்கொண்ட மானிடம் காகம் கூறியதென்ன?

நரியை நண்பனாக ஏற்றக்கொண்ட மானிடம் “நண்பா, யாரையும் நம்பி விடாதே! அது நமக்கு ஆபத்து.” என்று காகம் கூறியது. மேலும் “கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்றது.

3. நரி, மானை எங்கு அழைத்துச் சென்றது?

நரி, மானை ஒருவரின் விளைச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்றது.

4. வேலியில் மாட்டிக்கொண்ட மானைக் காகம் எவ்வாறு காப்பாற்றியது?

விவசாயி அருகில் வரும் வரை நீ இறந்ததுபோல் அசையாமல் இரு விவசாயி உன்னை வேலியிலிருந்து விடுவித்தவுடன், நான் மரத்திலிருந்து கா கா கா என்று குரல் கொடுக்கிறேன், உடனே தப்பித்து விடு என்றது காகம். அதன் படி மான் நடித்தது. வேடன் விடுவித்தவுனட் காகரம் கரைய மான் ஓடியது.

5. ‘தப்பிப் பிழைத்த மான்‘ கதையிலிருந்து நீங்கள் அறிந்துகொண்ட நீதி யாது?

“ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்”

ஊ. சிந்தனை வினா

நமக்கு நண்பர்களாக இருப்பவர்களிடம் என்னென்ன நற்குணங்கள் இருக்க வேண்டும்? பட்டியலிடுக.

அன்பு, இரக்கம், மனிதநேயம், உண்மை, சினம் கொள்ளாமை, சகிப்புத்தன்மை, நல்லொழுக்கம், ஈகைகுணம் போன்ற நற்குணங்கள் இருக்க வேண்டும்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment