Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 4.4 – மூவிடப்பெயர்கள்

பாடம் 4.4 மூவிடப்பெயர்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 4.4 – “மூவிடப்பெயர்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

மூவிடப்பெயர்கள்

மான்விழி : அடடே! கலையரசியா? ஆளே அடையாளம் தெரியவில்லையே? இவ்வளவு நாளாக எங்கே இருந்தாய்?

கலையரசி : நானும்கூட உன்னைப் பார்த்து நெடுநாளாகிவிட்டது. எங்கள் குடும்பத்துடன் மும்பையில் அல்லவா இருந்தோம். சென்ற வாரம்தான் என் தந்தைக்குப் பணிமாற்றம் நம்ம ஊரிலேயே கிடைத்தது.

மேற்கண்ட செய்தியைப் படித்தீர்களா? நீங்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டீர்கள் என்று பார்க்கலாமா?

• நீங்கள் படித்த செய்தி, என்ன வடிவத்தில் உள்ளது?

உரையாடல் வடிவம்

• நீங்கள் படித்த பகுதியில் பேசுபவர் யார்? கேட்பவர் யார்?

பேசுபவர் , கேட்பவர் கலையரசி

• இருவரும் என்ன பேசுகிறார்கள்?

இருவரும் நெடுநாள் கழித்து ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது குறித்துப் பேசுகின்றனர்.

சரியாகச் சொல்லிவிட்டீர்கள். ஆகவே, நீங்கள் படித்த உரையாடலில் பேசுவோர், கேட்போர், பேசப்படும் பொருள் ஆகிய மூன்றும் அமைந்துள்ளன. இங்கு பேசுபவர் யார்? அதனால், பேசுவோரைக் குறிக்கும் இடம் தன்மை. அடுத்ததாக, கேட்பவர் யார்? கலையரசி. ஆதலால், கேட்போரைக் குறிக்கும் இடம், முன்னிலை. இருவரும் யாரோ ஒருவரைப்பற்றி அல்லது ஏதோ ஒரு செய்தியைப் பற்றிப் பேசுகின்றனர். ஆதலால், பேசப்படுபவர் அல்லது பேசப்படும் செய்தியைக் குறிக்கும் இடம், படர்க்கை.

t தன்னைக் குறிப்பது, தன்மை.

t முன்னால் இருப்பவரைக் குறிப்பது, முன்னிலை.

t இவ்விருவரையும் தவிர மற்றவற்றை/ மற்றவர்களைக் குறிப்பது, படர்க்கை.

t ஒரு பெயர்ச் சொல்லை வேறொரு பெயர்ச்சொல்லால் குறிப்பது, மாற்றுப் பெயர்ச்சொல்.

t இந்த மாற்றுப் பெயர்ச் சொல் தான் இடம் நோக்கித் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடப்பெயர்களாக அமைகிறது.

தன்மை – நான், நாம், யான், யாம், நாங்கள்
முன்னிலை – நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள்
படர்க்கை – அவன், அவள், அவர், அது, அவை

தற்போதைய வழக்கில், அவர் என்பது, ஒருவரைக் குறிக்கிறது; அவர்கள் என்பது, பலரைக் குறிக்கிறது. எ.கா. அவர் பேசினார்/ அவர்கள் பேசினார்கள்.

ஆனால், அது வந்தது, அவை வந்தன என்று இருப்பதைப்போல், அதுகள் வந்தது, அவைகள் வந்தன என்பன வழக்கில் இல்லை. அவை, வழூஉச்சொற்களாகக் (பிழையானவையாகக்) கூறப்படுகின்றன.

மூவிடப்பெயர்கள் – ஒருமையும் பன்மையும்

தன்மை
ஒருமைபன்மை
நான், யான்நாம், யாம், நாங்கள்
முன்னிலை
ஒருமைபன்மை
நீநீர், நீவிர், நீயிர், நீங்கள்
தன்மை படர்க்கை
ஒருமைபன்மை
அவன், அவள், அதுஅவர், அவை

கூடுதல் வினாக்கள்

1. தன்னிலை என்றால் என்ன?

தன்னைக் குறிப்பது, தன்மையாகும்

2. முன்னிலை என்றால் என்ன?

முன்னால் இருப்பவரைக் குறிப்பது, முன்னிலையாகும்.

3. படர்க்கை என்றால் என்ன?

இவ்விருவரையும் தவிர மற்றவற்றை/ மற்றவர்களைக் குறிப்பது, படர்க்கை ஆகும்.

4. மாற்றுபெயர்ச்சொல் என்றால் என்ன?

ஒரு பெயர்ச் சொல்லை வேறொரு பெயர்ச்சொல்லால் குறிப்பது, மாற்றுப் பெயர்ச்சொல்.

5. மாற்றுபெயர்ச்சொல் எவ்வாறு மூவிடப்பெயர்களாக அமைகிறது?

மாற்றுப் பெயர்ச் சொல் இடம் நோக்கித் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடப்பெயர்களாக அமைகிறது.

6. தன்னிலைப் பெயர்கள் யாவை?

நான், நாம், யான், யாம், நாங்கள்

7. முன்னிலைப் பெயர்கள் யாவை?

நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள்

8. படர்க்கைப் பெயர்கள் யாவை?

அவன், அவள், அவர், அது, அவை

மதிப்பிடு

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. __________ எங்குச் சென்றீர்கள்?

  1. நீ
  2. நாங்கள்
  3. நீங்கள்
  4. அவர்கள்

விடை : நீங்கள்

2. செடியில் பூக்கள் பூத்திருந்தன. ——— அழகாக இருந்தன.

  1. அது
  2. அவை
  3. அவள்
  4. அவர்

விடை : அவை

3. இந்த வேலையை ———- செய்தேன்.

  1. அவன்
  2. அவர்
  3. நான்
  4. அவள்

விடை : நான்

ஆ. பொருத்துக.

1. தன்மைப் பெயர்அவர்கள்
2. முன்னிலைப் பெயர்நாங்கள்
3. படர்க்கைப் பெயர்நீங்கள்
விடை : 1 – ஆ, 2 -இ, 3 – அ

இ. உரைப்பகுதியில் பொருத்தமான இடப்பெயர்களை நிரப்புக.

தென்றலும் அமுதனும் அறிவியல் கண்காட்சிக்குச் சென்றனர். அங்கு மனிதர் போன்ற வடிவத்துடன் ரோபோ சிலை ஒன்று இருந்தது. ——- எல்லாரையும் இரு கைகூப்பி வரவேற்றது. அந்தச் சிலை ——–க்கண்டதும் ———– யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டது. உடனே, இருவரும் ——— அருகிலிருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் என்றனர். அமுதன், அந்தச் சிலையிடம் —– யார்? இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டான்.

விடை :-

தென்றலும் அமுதனும் அறிவியல் கண்காட்சிக்குச் சென்றனர். அங்கு மனிதர்போன்ற வடிவத்துடன் ரோபோ சிலை ஒன்று இருந்தது. அது எல்லாரையும் இரு கைகூப்பி வரவேற்றது. அந்தச் சிலை அவர்களைக்கண்டதும் நீீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டது. உடனே, இருவரும் நாங்கள் அருகிலிருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் என்றனர். அமுதன், அந்தச் சிலையிடம் நீ யார்? இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டான்.

ஈ. தொடர்களிலுள்ள பெயர்ச்சொற்களைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என வகைப்படுத்துக.

1. நீங்கள் எங்குச் சென்றீர்கள்?

விடை : நீங்கள் – முன்னிலை

2. குழலி படம் வரைந்தாள்.

விடை : குழலி – படர்க்கை

3. கதிர் நேற்று வரவில்லை.

விடை : கதிர் – படர்க்கை

4. நான் ஊருக்குச் சென்றேன்.

விடை : நான் – தன்மை

5. மயில் ஆடியது.

விடை : மயில் – படர்க்கை

மொழியை ஆள்வோம்

1. சொல்லக்கேட்டு எழுதுக.

1. பறவைகள் பறக்கின்றன

2. ரோஜாப்பூ சிவப்பு நிறத்தில் உள்ளது.

3. கடலில் அலைகள் தோன்றுகின்றன

2. தொடரில் அமைத்து எழுதுக.

1. பறவை

விடை : வானில் பறவை பறந்து சென்றது.

2. விமானம்

விடை : சென்னைக்கு விமானம் மூலம் பயணம் செய்தோம்.

3. முயற்சி

விடை : முயற்சி இல்லையெனில் முன்னேற்றம் இல்லை.

4. வானவில்

விடை : மழைக்கு முன்னும், பின்னும் வானவில் தோன்றும்.

5. மின்மினி

விடை : மின்மினி பூச்சிகள் இரவில் ஒளிர்கின்றன.

3. பொருத்துக

1. மின்மினிசிறகு
2. இறகின் தொகுப்புஹைட்ரஜன் அணுக்கள்
3. வானவில்பறவையின் இறகு
4. காற்றுப்பைகள்லூசிஃபெரேஸ் என்சைம்
5. விண்மீன்நீர்த்துளி எதிரொளிப்பு
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஆ

4. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் அதிகரிக்கின்றன. தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும், மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்வதாகக் கண்டறிந்துள்ளனர். நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அமிலமழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன.

வினாக்கள்

1. அமில மழை எங்கு அதிகமாகப் பெய்கிறது?

தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும், மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரேதசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்கிறது.

2. அமில மழையின் பாதிப்பு எங்கு அதிகமாக இருக்கும்?

நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

3. மீன்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும் உயிரை இழக்கக் காரணம் என்ன?

அமிலமழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன

4. பொருள் தருக.

அதிகரித்தல் – மிகுதிப்படுத்தல்

பிரதேசம் – நாடு

பாதிப்பு – தாக்கம்

5. வண்ண எழுத்திலுள்ள பிறமொழிச் சொல்லுக்குத் தமிழ்ச்சொல் எழுதுக.

1. நான் தபால் நிலையத்திற்குச் சென்றேன்.

விடை : அஞ்சலகம்

2. ஓய்வு நேரத்தில் ரேடியோ கேட்பேன்.

விடை : வானொலி

3. பஞ்சாயத்துக் கூட்டம் நாளை கூடுகிறது.

விடை : கிராமசபை

4. ஹோட்டலில் உணவு தயாராக உள்ளது.

விடை : உணவகம்

5. அலமாரியில் துணிகள் உள்ளன.

விடை : அடுக்கறை

6. பாடலை நிறைவு செய்க

செடிகள் நாளும் வளருதே
ஏன்? ஏன்? ஏன்?
பனிமலை உருகிப் போகுதே
ஏன்? ஏன்? ஏன்?

பறவைகள் வானில் பறக்குதே
ஏன்? ஏன்? ஏன்?
மீன்கள் நீரல் நீந்துதே
ஏன்? ஏன்? ஏன்?

பறவைகள் வானில் பறக்குதே
ஏன்? ஏன்? ஏன்?
விண்மீன் இரவில் ஒளிர்கிறதே
ஏன்? ஏன்? ஏன்?

 

மொழியோடு விளையாடு

1. ஒரே ஓசையில் முடியும் பெயர்களைக் கொண்ட படங்களை இணைக்க.

Class 5 Tamil Solution - Lesson 4.4 ஒரே ஓசையில் முடியும் பெயர்களைக் கொண்ட படங்களை இணைக்க.

லைவெற்றிலைலை
ரம்ரம்ரம்
பூனையானைபானை

2. சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குவோம்

பட்டுக்கோட்டை

விடை : பட்டு, படு, கோடு, கோடை, படை, கோட்டை, பட்டை

3. குறிப்புகளைப் படித்து, விடை கண்டறிக

Class 5 Tamil Solution - Lesson 4.4 குறிப்புகளைப் படித்து, விடை கண்டறிக

1. பறக்கவிட்டு மகிழ்வோம்.

விடை : பட்டம்

2. நீல நிறத்தில் காட்சியளிக்கும்.

விடை : வானம்

3. கடற்பயணத்திற்கு உதவும்.

விடை : கப்பல்

4. படகு செலுத்த உதவும்.

விடை : துடுப்பு

5. உயிரினங்களுள் ஒன்று.

விடை : குதிரை

6. இதன் உதவியால் வானில் பயணிக்கலாம்.

விடை : விமானம்

7. பறவைகள் இதுபோன்ற உடலமைப்பு கொண்டுள்ளது.

விடை : படகு

8. ஏழு நிறங்கள் கொண்டது.

விடை : வானவில்

9. இராமன் இதன் மூலம் எதிரொளிப்பு விளையாட்டு விளையாடினான்.

விடை : வில்

10. பொழுது விடிவது

விடை : காலை

4. பாடப்பகுதியில்சுற்றும்முற்றும், ஓட்டமும்நடையுமாய் என்று சொற்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கு இணைச்சொற்கள் என்று பெயர். இவைபோன்று நான்கு சொற்கள் எழுதுக.

  • கையும்களவுமாய்
  • கூத்தும்கும்மாளமுமாய்
  • எலியும்பூனையுமாய்
  • குறுக்கமறுக்க

5. ஒரே ஓசையுடைய சொற்களின் பொருள் எழுதுக.

1.  தேநீர்தேயிலையைக் கொண்டு கொதிக்க வைத்த நீர் (டீ)
    தேனீர்தேனும் நீரும் கலந்த நீர்
2. பரவைகடலின் மறுபெயர் பரவை
    பறவைபுறா பறவை இனத்தை சேர்ந்தது
3. கோரல்ஒரு செய்தியை கூறுவதை கோரல் என்பர்
   கோறல்விலங்கினை கொல்லுவதை கோறல் என்பர்
4. வன்னம்எழுத்தை குறிக்கும் வேறொரு பெயர்
   வண்ணம்நிறத்தினை வண்ணம் என்பர்
5. எதிரொலிஎதிரொலி மூலம் கடல் மட்டத்தை கணக்கிடலாம்
    எதிரொளிபளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி

6. ஒரு சொல்லைப் பிரித்து இரு பொருள் எழுதுக.

1.  பலகைமரப்பலகை
    பல + கைபல கைகள்
2. அந்தமான்அந்தமான் தீவு
    அந்த + மான்அந்த மான் அழகாக உள்ளது
3. தாமரைதாமரை மலர்
    தா + மரைதாவுகின்ற மான்
4. பழம்பால்பழமையான பால்
    பழம் + பால்பழமும், பாலும் உடலுக்கு நல்லது
5. மருந்துக்கடைநாட்டு மருந்துக்கடை
    மருந்து + கடைமருந்து கடைகளில் கிடைக்கும்

செயல் திட்டம்

அறிவியல் தமிழ்ச் சொற்களுள் 20 எழுதி வருக.

முன்பதிவு (Booking)திரட்டேடு (Folio)
மின்னழுத்தம் (Volt)மின்னோட்டம் (Ampere)
மின்திறன் (Watt)முத்திரட்சி (3D)
காய்ச்சி (Heater)படச்சட்டம் (Photoframe)
மின்னட்டை (Flash Card)ஒளிர்வு (Brightness)
கோளரங்கம் (plantarum)தொங்கு ஊர்தி (Cable Car)
செயற்கூறு (Function)அழுக்கி (Compression)
இழுவை (Drawer)ஏந்தம் (Tray)
நோக்கு (Motive)வட்டாரம் (Zone)
நழுவை (Slide)மழிதகடு (Blade)

விண்ணப்பம் எழுதுதல்

பிர்லா கோளரங்கத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதி வேண்டி விண்ணப்பித்தல்

திருவள்ளூர்,
07.10. 2019

அனுப்புநர்

செல்வன். அ.சங்கரலிங்கம்,
பள்ளி மாணவர் தலைவர்,
ஞானகுருவித்யா சாலை,
வெங்கடேஸ்வரபும், தென்காசி மாவட்டம்.

பெறுநர்

இயக்குநர்,
பிர்லா கோளரங்கம்,
சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் :

அறிவியல் தொழில்நுட்பக் கூடத்தைச் சுற்றிப் பார்க்க, அனுமதி வேண்டுதல் – சார்பு.

வணக்கம். தலைமையாசிரியரின் இசைவுடன் எங்கள் பள்ளியின் மகிழ் உலா குழு, பிர்லா கோளரங்கத்தை 09.10.2019 அன்று, சுற்றிப்பார்க்க விரும்புகிறது. அக்குழுவில், ஆசிரியர்கள் மூவரும் 40 மாணவர்களும் இருப்பர். ஆகையால், அன்பு கூர்ந்து எங்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டுகிறேன். அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகளை விளக்குவதற்கு அலுவலர் ஒருவரையும் ஏற்பாடு செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

செல்வன். அ.சங்கரலிங்கம்,

ஞானகுருவித்யா சாலை,
வெங்கடேஸ்வரபும், தென்காசி

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: