பாடம் 5.4 இணைப்புச்சொற்கள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 5.4 – “இணைப்புச்சொற்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
இணைப்புச்சொற்கள்
தொடர்களை இணைப்பதற்கு இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. இவற்றை இணைப்பிடைச் சொற்கள் எனவும் கூறுவர். |
தொடர்களில் பயன்படும் சில இணைப்புச்சொற்கள் பின்வருமாறு:
அதனால் | அப்படியானால் |
அவ்வாறெனில் | ஆனால் |
அல்லது | ஆகையால் |
ஆகவே | ஆதலால் |
ஆயினும் | இருந்தபோதும் |
உம் | எனவே |
எனில் | ஏனெனில் |
எவ்வாறெனில் |
மதிப்பீடு
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக
1. ‘அதனால்‘ என்பது __________
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- உரிச்சொல்
- இணைப்புச்சொல்
விடை : இணைப்புச்சொல்
2. கருமேகங்கள் வானில் திரண்டன __________________ மழை பெய்யவில்லை. இத்தொடருக்குப் பொருத்தமான இணைப்புச்சொல்
- எனவே
- ஆகையால்
- ஏனெனில்
- ஆயினும்
விடை : ஆயினும்
3. கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான் ___________ அவன் நண்பன் மிதிவண்டியே போதும் என்றான்
- அதனால்
- ஆதலால்
- இருந்தபோதிலும்
- ஆனால்
விடை : இருந்தபோதிலும்
ஆ. கீழ்க்காணும் தொடர்களை இணைத்து எழுதுக.
1. நான் விளையாடச் சென்றேன். கண்ணன் விளையாடச் சென்றான். (உம்)
விடை : நானும் கண்ணனும் விளையாடச் சென்றோம்.
2. வள்ளி எழுதி முடித்துவிட்டாள். எழிலி எழுதவில்லை. (ஆனால்)
விடை : வள்ளி எழுதி முடித்துவிட்டாள். ஆனால் எழிலி எழுதவில்லை.
3. பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. (அதனால்)
விடை : பெருமழை பெய்தது. அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின
4. முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனுக்கு உடல்நலமில்லை. (ஏனெனில்)
விடை : முகில் பள்ளிக்குச் செல்லவில்லை ஏனெனில் அவனுக்கு உடல் நலமில்லை.
5. அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும். (ஆகவே)
விடை : அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும்.
இ. கீழ்க்காணும் உரைப்பகுதியில் பொருத்தமான இணைப்புச் சொற்களை இணைத்து எழுதுக
(ஆனால், அதனால், ஏனெனில், ஆகையால், எனவே, பிற)
அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. ஆனால், சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. ஏனெனில், அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. அதனால், அதனைக் கண்டு பிற விலங்குகள் அஞ்சின. ஆகையால் அது தனியாகக் குகையில் வசித்தது. அதனால், அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. எனவே, குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் பிற விலங்குகள் அஞ்சியோடின. ஏனெனில், அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா!
ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. இணைப்புச் சொற்கள் எதற்குப் பயன்படுகின்றன?
தொடர்களை இணைப்பதற்கு இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. இவற்றை இணைப்பிடைச் சொற்கள் எனவும் கூறுவர்.
2. இணைப்புச்சொற்களுள் நான்கு எழுதுக.
அதனால், அப்படியானால், அவ்வாறெனில், ஆனால், அல்லது, ஆகையால்
3. இணைப்புச்சொற்களைப் பயன்படுத்தி, எவையேனும் இரண்டு தொடர்களை எழுதுக
- குமார் படித்து விட்டான். ஆனால் அவன் எழுதவில்லை.
- மேகத்தினுள் சூரிய ஒளி புக முடியாது. ஆகவே மேகங்கள் கருமையாக தெரிகின்றன.
மொழியை ஆள்வோம்
1. சொல்லக் கேட்டு எழுதுக.
- பண்பு உடையவராக வாழ்தல் நல்வழியாகும்.
- திருக்குறள் “உலகப்பொதுமறை” என்றழைக்கப்படுகிறது.
- கங்கை கொண்ட சோழபுரம் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.
2. தொடரில் அமைத்து எழுதுக.
1. வெற்றி
விடை : ராமு கபாடி விளையாட்டில் வெற்றி பெற்றான்.
2. நாகரிகம்
விடை : ஆற்றாங்கரை நாகரிகம் வளர காரணம்
3. உழவுத்தொழில்
விடை : உழவுத்தொழில் கிராமங்களில் மக்கள் அதிகமாக செய்யப்படும் தொழில்
4. கலையழகு
விடை : நடனக்கலை கலையழகு உள்ளது.
3. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
அரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை. படைத்திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான். புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப் பெற்றான். நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது யானைப்படை. போர்க்களத்தில் வீறுகொண்டு செம்போர் விளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப்படையே ஆகும். வலிமை சான்ற அழகிய யானை, பட்டத்து யானை என்று பெயர் பெற்றது. உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும் உடைய யானையே அப்பதவிக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1. நால்வகைப்படைகள் யாவை?
தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை
2. நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது எது?
நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது யானைப்படை
3. மாற்றார் என்னும் சொல்லின் பொருள் யாது?
மாற்றார் என்னும் சொல்லின் பொருள் பகைவர் ஆகும்.
4. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.
உட்பகையை அழிப்பான் | புறப்பகையை ஒழிப்பான் |
ஏற்றமும் தேற்றமும் | அழகிய யானை |
பட்டத்து யானை | உயர்ந்த மேனியும் |
ஓங்கிய நடையும் | சிறந்த கொம்பும் |
பரந்த அடியும் | சிறிய கண்ணும் |
செந்நிற வாயும் |
5. “காலாட்படை” – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
காலாட்படை = கால் + ஆள் + படை
காலாட்படை = காலாள் + படை
4. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. மக்களுக்கு உரிய பண்பில்லாதவர் ____________________ போன்றவர் என வள்ளுவர் கூறுகிறார்.
விடை : மரம்
2. கங்கை கொண்ட சோழபுரம் ____________________ என்று புலவர்களால் போற்றப்பட்டது.
விடை : கங்காபுரி, கங்காபுரம்
3. கம்பைக் குறிக்கும் வீரக்கலை ____________________ ஆகும்.
விடை : சிலம்பாட்டம்
5. பிறமொழிச் சொற்களையும் பேச்சுத்தமிழையும் நீக்கிச் சரியாக எழுதுக.
1. டுமாரோ ஈவினிங் என் ஸிஸ்டர் ஊருக்குப் போவா.
விடை : நாளை மாலை என் தங்கை ஊருக்குச் செல்வாள்.
2. ஷேர் ஆட்டோவில் பைவ் பாசஞ்சர்ஸ் இருக்காங்க.
விடை : பகிர் தானியங்கியில் ஐந்து பயணிகள் உள்ளனர்.
3. என் வீட்டில் வாசிங் மிஷின் ரிப்பேராக இருக்கு.
விடை : என் வீட்டில் துணி துவைக்கும் இயந்திரம் பழுதாக உள்ளது.
6. பொருத்துக.
தொடர்வண்டி | |
மிதிவண்டி | |
தானியங்கி | |
இருசக்கர வண்டி | |
மகிழ்ந்து | |
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ |
7. பாடலை நிறைவு செய்க
திருவிழாவாம் திருவிழா
எங்கள் ஊர்த் திருவிழா
ஊர் கூடும் திருவிழா
உறியடிக்கும் திருவிழா
பாடி ஆடும் திருவிழா
பண்பை வளர்க்கும் திருவிழா
பாசம் மிகும் திருவிழா
உறவு இணையும் திருவிழா
7. கீழ்க்காணும் குறட்பாக்களிலுள்ள சொற்களைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்துக.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு.
உயிர் எழுத்து இடம் பெறாத சொற்கள் | மெய் எழுத்து இடம் பெறாத சொற்கள் |
நயனொடு, நன்றி, புரிந்த, பயனுடையார், பண்பு, பாராட்டும், குடிப்பிறத்தல், வழக்கு | நயனொடு, உலகு |
நிறுத்தக்குறிகளை அறிந்துகொள்வோம்
காற்புள்ளி ( , ) | ஒரு தொடரில் பல பொருள்கள் அடுக்கி வரும்போது குறிக்கப்படுவது. மா, பலா, வாழை ஆகியவற்றை முக்கனி என்பர். |
அரைப்புள்ளி ( ; ) | ஓர் எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வரும்போது, ஒவ்வொரு பயனிலையின் இறுதியிலும் குறிக்கப்படுவது. (எ.கா.) காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை. |
முற்றுப்புள்ளி ( . ) | ஒரு தொடர் முடிவு பெற்றதனை உணர்த்துவதற்காகக் குறிக்கப்படுவது. (எ.கா.) எனக்கு மட்டைப்பந்து விளையாடப் பிடிக்கும். |
வினாக்குறி ( ? ) | ஒரு தொடர் வினாப்பொருளைத் தரும்போது, குறிக்கப்படுவது. (எ.கா.) அப்பா என்னால் பறக்க முடியாதா? |
உணர்ச்சிக்குறி ( ! ) | ஒரு தொடர் உணர்ச்சியை குறிக்கப்படுவது. (எ.கா.) என்னே! கங்கை கொண்ட சோழபுரக் கோவிலின் அழகு! |
ஒற்றை மேற்கோள் குறி( ’ ) | ஒரு தொடரில் நூல் பெயர், கட்டுரை பெயர், பழமொழி முதலியன வந்தால் குறிக்கப்படுவது. (எ.கா.) பிரபஞ்சனின் படைப்புகளுள் ‘வானம் வசப்படும்‘ என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. |
இரட்டை மேற்கோள் குறி ( ” ) | ஒரு தொடரில் ஒருவர் கூறியதை நேர்கூற்றாகக் கூறும்போதும், ஒரு தொடரை மேற்கோளாகப் பயன்படுத்தும் போதும் குறிக்கப்படுவது. (எ.கா.) “கண்வனப்பு கண்ணோட்டம்“ என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது. |
மொழியோடு விளையாடு
I. சுழலட்டையைப் பயன்படுத்திக் குறிப்புகளுக்கு விடை எழுதுக.
1. உடலுறுப்புகளுள் ஒன்று
விடை : கண்
2. உப்பு நீர் அதிகம் உள்ள இடம்
விடை : கடல்
3. அழியாத செல்வம்
விடை : கல்வி
4. பொருள்கள் வாங்கும் இடம்
விடை : கடை
5. சமையலுக்குப் பயன்படுவது
விடை : கடுகு
6. வீடு கட்டப் பயன்படுவது
விடை : கல்
7. ஓவியம் என்பது
விடை : கலை
8. பாரதியார் இயற்றியவை
விடை : கவிதை
2. நீக்குவோம்! சேர்ப்போம்!
விதையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க. விதை, கதை = விடுகதை |
சபையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க. கரம், சபை = கரம்பை |
விலையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க. தலை, விலை = தலைவி |
ஆசையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க. ஆசை, மரம் = ஆலமரம் |
கடையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க. காரம், கடை = காரவடை |
நிற்க அதற்குத் தக
• பிற உயிரினங்களின் மீது அன்பு காட்டுவேன்.
• விளையாட்டு, உடலுக்கும் மனத்திற்கும் நல்லது என அறிந்துகொண்டேன்.
• நீர்த்தேக்கங்கள், வேளாண்மைக்கு உயிர் என்பதைப் புரிந்துகொண்டேன
அறிந்து கொள்வோம்
பண்பு |
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |