Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 6.3 – நேர்மை நிறைந்த தீர்ப்பு

பாடம் 6.3 நேர்மை நிறைந்த தீர்ப்பு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 6.3 – “நேர்மை நிறைந்த தீர்ப்பு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

கற்பவை கற்றபின்

நேர்மையால் உயர்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்க.

காமராசர்

தாய்நாட்டின் பணியில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு தியாகத்தின் ஒளிவிளக்கு காமராசர். நாட்டுப்பற்று, நலமின்மை, கொள்கைகளில் உறுதி, அஞ்சாமை, எளிமை, கடுமையான உழைப்பு, நேர்மை ஆகியவற்றால் அவர் இமயமெல்லாம் உயர்ந்தார்.

காமராசர் 1903, சூலை 15ல் விருநகரில் குமாசாமி – சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரின் இளமையிலே தந்தை இறந்தனால் தன் படிப்பினை பாதியிலே நிறுத்திவிட்டார். செய்தித்தாள்களை படித்தும், தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு அரசியலறிவையும், நாட்டுப் பற்றையும் வளர்த்துக் கொண்டார். அவரை விடுதலைப் போரில் ஈடுபடத் தூண்டின.

1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக விளங்கினார். ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்தார். காமராஜர் கட்டாயக்கல்வி, இலவக் கல்வி, பக்ல உணவுடன் கூடிய கல்வி எனப் பலத் திட்டங்களை உருவாக்கித் தமிழகத்தின் கல்வி வளரச்சிக்கு அடிகோலினார். மேலும் தமிழகத்திற்கு பல அணைகள் கட்டி தந்தார். பல தொழிற்சாலைகளைத் திறந்தாரர்.

அறிஞர் அண்ணா

அண்ணா காட்சிக்கு எளியவர். கடுஞ்சொல் பேசாதவர். மாற்றைரை மதிக்கும் பண்பாளர். ஆற்றல் மிக்கவர். ஆணவம் இல்லாதவர். தன்னம்பிக்கை உடையவர். நடுநிலை தவறாதவர். எதிரிகளிடம் கூட அன்பும், மரியாதையும் செலுத்துவார். எழையின் சிரிப்பின் இறைவனைக் கண்டவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியன கைக் கொண்டவர்.

இவர் நடராஜன் – பங்காரு தம்பதியருக்கு 1909 செப்டம்பர் 15-ல் காஞ்சியில் பிறந்தவர். காஞ்சி பச்சையப்பன் உயர் பள்ளியில் கல்வி கற்றபின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ பட்டம் பயின்றார்.

தந்தை பெயரியாருடன் இணைந்து பகுத்தறிவு கொள்கைய பரப்பியவர். சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஏற்றதாழ்வு அழிப்பு, மொழிப் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டார். 1949-ல் திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்வித்தார். 1967- இவது கட்சி வெற்றி பெற்று முதலமைச்சரானார். சென்னை மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என பெயரிட்டார். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தியவர்.

மதிப்பீடு

அ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு யாது?

“செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர். நால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர்.

ஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனர். அவரவர்க்கும் தங்கள் சாதனையே பெரியது என்று கூறி, பரிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனர். அதனால், தாங்களே இவர்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாரித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சரியான தீர்ப்பளிக்க வேண்டும்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் அந்தப் பஞ்சாயத்து தலைவர்.

2. முருகேசன் தாம் என்ன சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார்?

“நான்  ஒரு வியாபாரி. மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக்கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள். அப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது. நான் பாய்ந்துசென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரைகூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊர்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள். ஓர் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பெரிய சாதனை இல்லையா? அதனால்தா பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன்.”என்று சொன்னார் முருகேசன்.

3. விவசாயியின் சாதனைதான் உயர்ந்தது என்று அரசி கூறக் காரணம் என்ன?

முதிய விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். உண்மையில் இது பெரிய சாதனைதான் எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும்! அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது. விவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது; நோய்நொடி இருக்காது; வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவர் இவர்தாம். இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்’’ என்று நேர்மை நிறைந்த தீர்ப்பை வழங்கினார் மங்கையர்க்கரசி. அவரது தீர்ப்பைக் கேட்டு, மக்கள் எல்லாரும் அவரை வாழ்த்தினர்.

ஆ. சிந்தனை வினா

நண்பர்கள் உன்னை வீட்டில் வந்து சந்திக்கின்றனர். அவர்கள்சென்றபிறகு, பணப்பை ஒன்று நாற்காலியில் இருப்பதைக் காண்கிறாய். இந்நிலையில் நீ செய்யப்போவது என்ன?

  1. பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்
  2. உரியவரே தேடிக்கொண்டு வரட்டும் எனக் காத்திருப்பேன்.
  3. நான் பார்த்ததால், எனக்குத்தான் உரியது என வைத்துக்கொள்வேன்.

விடை : பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment