பாடம் 7.1 சிறுபஞ்சமூலம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 7.1 – “சிறுபஞ்சமூலம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல் பொருள்
- வனப்பு – அழகு
- வேந்தன் – அரசன்
- கண்ணோட்டம் – இரக்கம்
- வாட்டான் – வருத்தமாட்டான்
- இத்துணை – இவ்வளவு
- பண் – இசை
பாடல் பொருள்
- கண்ணுக்கு அழகு, இரக்கம் கொள்ளுதல்;
- காலுக்கு அழகு, பிறரிடம் பொருள் வேண்டிச் செல்லாமை;
- ஆராய்ச்சிக்கு அழகு, இது இவ்வாறு முடியும் என்று உறுதி செய்து கூறுதல்;
- இசைக்கு அழகு, அதனைக் கேட்போர் நன்று எனச் சொல்லுதல் அரசனுக்கு அழகு, தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல்.
நூல் குறிப்பு
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- சிறுபஞ்சமூலம். கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்கள் உடல் நோயைத் தீர்க்கின்றன.
- அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகள், மக்கள் மனநோயைத் உள்ளன. ஆகையால், இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
- இந்நூலை இயற்றியவர், காரியாசான்.
மதிப்பீடு
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக
1. “வனப்பு” – இச்சொல்லின் பொருள் ____________
- அறிவு
- பொறுமை
- அழகு
- சினம்
விடை : அழகு
2. “நன்றென்றல்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………………………..
- நன் + றென்றல்
- நன்று + என்றல்
- நன்றே + என்றல்
- நன்றெ + என்றல்
விடை : நன்று + என்றல்
3. “என்று + உரைத்தல்” – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………………….
- என்றுஉரைத்தல்
- என்றுயுரைத்தல்
- என்றஉரைத்தல்
- என்றுரைத்தல்
விடை : என்றுரைத்தல்
4. கண்ணுக்கு அழகு ……………………………………………
- வெறுப்பு
- பொறுமை
- இரக்கம்
- பொறாமை
விடை : இரக்கம்
ஆ. பொருத்துக
1. கண்ணுக்கு அழகு | கேட்பவர் நன்று என்று சொல்லுதல் |
2. காலுக்கு அழகு | இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல் |
3. ஆராய்ச்சிக்கு அழகு | நாட்டு மக்களை வருத்தாமை |
4. இசைக்கு அழகு | பிறரிடம் சென்று கேட்காமை |
5. அரசனுக்கு அழகு | இரக்கம் காட்டல் |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ |
இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
கண்வனப்பு – கண்ணோட்டம் | கால்வனப்பு – செல்லாமை |
கேட்டார் – வாட்டான் | தன்னோடு – என்றுரைத்தல் |
ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. கண்ணுக்கு எது அழகு?
கண்ணுக்கு அழகு, இரக்கம் கொள்ளுதல்
2. காலுக்கு எது அழகைத் தருகிறது?
காலுக்கு அழகு, பிறரிடம் பொருள் வேண்டிச் செல்லாமை
3. இசைக்கு அழகாக எது கூறப்படுகிறது?
இசைக்கு அழகு, அதனைக் கேட்போர் நன்று எனச் சொல்லுதல்
4. அரசனுக்கு அழகைத் தருவது எது?
அரசனுக்கு அழகு, தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல்.
உ. சிந்தனை வினா
நம்மைப் பிறர் பாராட்ட வேண்டுமெனில், நம்மிடம் எத்தகைய பண்புகள் இருக்க வேண்டும்?
- உண்மை, நேர்மை, நீதி ஆகிய பண்புகள் இருக்க வேண்டும்.
- காலம் தவறாமை, கடின உழைப்பு, விடா முயற்சி இருக்க வேண்டும்.
- அன்பு, இரக்கம், தன்னடக்கம் ஆகிய பண்புகள் இருக்க வேண்டும்.
- கீழ்படிதல், பிறருக்கு உதவுதல், கடமையைச் செய்தல் ஆகிய உயர்குணங்கள் நம்மிடம் இருத்தல் வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக
1. சிறுபஞ்சமூலம் ____________ நூல்களுள் ஒன்று
- காப்பிய
- சிற்றிலக்கிய
- பதினெண்கீழ்கணக்கு
- பதினெண்மேல்கணக்கு
விடை : பதினெண்கீழ்கணக்கு
2. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் …………………………………
- விளம்பிநாகனார்
- ஒளவையார்
- நல்லந்துவனார்
- காரியாசான்
விடை : காரியாசான்
3. “கண் + ஓட்டம்” – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ………………………
- கண்ஓட்டம்
- கண்ணோட்டம்
- கண்ணொட்டம்
- கண்ணுட்டம்
விடை : கண்ணோட்டம்
ஆ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. ஆராய்ச்சிக்கு எது அழகு?
ஆராய்ச்சிக்கு அழகு, இது இவ்வாறு முடியும் என்று உறுதி செய்து கூறுதல்;
2. சிறுபஞ்சமூலம் பெயர்க்காரணம் கூறுக
சிறுபஞ்சமூலம். கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்கள் உடல் நோயைத் தீர்க்கின்றன.
அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகள், மக்கள் மனநோயைத் உள்ளன. ஆகையால், இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
3. சிறுபஞ்சமூலம் குறிப்பு வரைக
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- சிறுபஞ்சமூலம். கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்கள் உடல் நோயைத் தீர்க்கின்றன.
- அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகள், மக்கள் மனநோயைத் உள்ளன. ஆகையால், இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
- இந்நூலை இயற்றியவர், காரியாசான்.