பாடம் 8.1 கல்வியே தெய்வம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 8.1 – “கல்வியே தெய்வம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்பொருள்
- விஞ்சும் – மிகும்
- அண்டும் – நெருங்கும்
- கசடற – குற்றம் நீங்க
- ஊறும் – சுரக்கும்
- திண்மை – வலிமை
- செழித்திட – தழைத்திட
பாடல் பொருள்
- இப்பாடல், கல்வி குறித்த விரிசிந்தனையைத் தருகிறது.
- அன்னை, தந்தை இவர்களுடன் நாம் கற்கும் கல்வியும் தெய்வமாகும்.
- பொன்னையும் மண்ணையும்விட மேலானது கல்வி.
- நமக்குப் புகழையும் தந்து நிற்கும்.
- கல்வி கற்றால், நன்மையும் மென்மையும் நல்லருளும் நம்மை நெருங்கிவரும். ஆகையால், கல்வியைக் குற்றம் நீங்க கற்றிட வேண்டும்.
- ஆற்றலையும் நல்ல வளத்தையும் நாம் பெறவேண்டும்.
- நாள்தோறும் கற்றிட, யாவும் மனக்கணக்கைப்போல் நெஞ்சில் பதியும். வெற்றி கிட்டும். புகழ் தோன்றும். விண்ணையும் அளக்கச் செய்யும். நம்மை விடியலாய் எழச் செய்யும். நம்மிட வலிமையையும் சேர்க்கும். மனத்தினில் தெளிந்த நல்லறிவை வளரச்செய்யும்.
மதிப்பீடு
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. “கசடற”– இச்சொல்லின் பொருள் …………………………….
- தவறான
- குற்றம் நீங்க
- குற்றமுடன்
- தெளிவின்றி
விடை : குற்றம் நீங்க
2. “வளமதை”– இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
- வள + மதை
- வளமை + அதை
- வளம் + அதை
- வளம் + மதை
விடை : வளம் + அதை
3. “வெளிச்சம்” – இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………………
- இருட்டு
- வெளிப்படையான
- வெளியில்
- பகல்
விடை : இருட்டு
ஆ. ஒன்றுபோல் வரும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக.
முதலெழுத்து
அன்னையும் – அறிந்திட | வல்லமை – வளமதை |
விண்ணையும் – விடியலாய் | வெற்றிகள் – வெளிச்சமும் |
கசடறக் – கற்றிட | கண்ணெனும் – கல்வியும் |
இரண்டாமெழுத்து
அன்னையும் நன்மையும், | வேண்டும் – கண்ணெனும் |
பொன்னையும் – மென்மையும் | பெற்றிட – கற்றிட |
வெளிச்சமும் – தெளிவினை | இதைக் – அதைக் |
இ. எதிர்ச்சொல் எழுதுக.
1. நன்மை X தீமை
2. புகழ் X இகழ்
3. வெற்றி X தோல்வி
4. வெளிச்சம் X இருட்டு
5. தோன்றும் X மறையும்
ஈ. “உம்“ என முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.
அன்னையும் – தந்தையும் | கல்வியும் – நீயும் |
நன்மையும் – மென்மையும் | சேரும் – கூடும் |
விண்ணையும் – திண்மையும் | விஞ்சும் – கொஞ்சும் |
உ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. பொன்னையும் மண்ணையும் விடச் சிறந்தது எது?
பொன்னையும் மண்ணையும் விடச் சிறந்தது கல்வியே ஆகும்
2. கல்வியை எவ்வாறு கற்க வேண்டும்?
கல்வியை குற்றம் நீங்க கற்க வேண்டும்.
ஊ. சிந்தனை வினா
கல்வியோடு நற்பண்புகளும் அமைவதுதான் சிறப்பு என்று கூறுகிறார்களே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
- கல்வி அறிவில்லாதவர்கள் களர்நிலம் போன்றவர்கள். அந்நிலத்தில் எதுவும் விளைவதில்லை என வள்ளுவர் கூறுகிறார்.
- அதுபோல கல்வியறிவற்றவரால் நன்மை ஏதும் வராது என்பதே இதன் பொருள்.
- “ஏட்டுக்கல்வி கரிக்குதவாது” என்பார்கள். வெறும் கல்வி மட்டும் இருந்தால் போதாது. அத்தோடு நற்பண்புகள் இருந்தால் தான் சிறக்கும்.
- முற்றிய நெல்மணி தலை சாய்ந்து நிற்பது போல கல்வியறிவுடையோர் தாழ்ச்சியுடன் இருத்தலே சிறப்பாகும்.
- “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” அதுபோல கற்றவர்கள் கற்றபடி வாழ்வதே சிறப்பாகும்.
கூடுதல் வினாக்கள்
வினாக்களுக்கு விடையளிக்க.
1. எது தெய்வமாகும்?
அன்னை, தந்தை, இவர்களுடன் நாம் கற்கும் கல்வியும் தெய்வமாகும்.
2. கல்வியின் பயன்கள் யாவை?
- கற்றவையாவும் நெஞ்சில் பதியும்.
- வெற்றி கிட்டும். புகழ் தோன்றும்.
- விண்ணையும் அளக்கச் செய்யும்.
- நம்மை விடியலாய் எழச் செய்யும்.
- நம்மிட வலிமையையும் சேர்க்கும்.
- மனத்தினில் தெளிந்த நல்லறிவை வளரச்செய்யும்.
3. நம்மிடம் எது நெருங்கி வரும்?
கல்வி கற்றால், நன்மையும் மென்மையும் நல்லருளும் நம்மை நெருங்கிவரும்.