Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 8.3 – காணாமல் போன பணப்பை

பாடம் 8.3 காணாமல் போன பணப்பை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 8.3 – “காணாமல் போன பணப்பை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

மதிப்பீடு

அ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பணப்பையைப் பெற்றுக்கொண்ட வணிகன் என்ன கூறினான்?

அவன் பையில் அதிகப் பணம் இருந்ததாகவும், இப்போது பணம் குறைகிறது என்று பணப்பையைப் பெற்றுக்கொண்ட வணிகன் கூறினான்.

2. இக்கதையின் மூலம் நீ அறியும் நீதி என்ன?

“பேராசை பெருநஷ்டம்” – கஞ்சத்தனமுடைய வணிகன் பணத்தை இழந்ததுடன் மற்றவர்களுடைய இகழ்ச்சிக்கும், கேலிப்பேச்சுக்கும் ஆளானான்.

3. இக் கதையில் நீ விரும்பிய கதைமாந்தர் யார்? அவரைப்ப பற்றி ஐந்து வரிகளில் எழுதுக.

இக் கதையில் நான் விரும்பிய கதைமாந்தர் சிற்றரசன் ஆவார்.

  • வணிகனின் தொலைந்த பணத்தை கண்டுபிடிக்க முரசு அறையச் செய்தான்.
  • வணிகன் பொய் கூறுவதைக் தன் புத்தி கூர்மையால் அறிந்து கொண்டான்.
  • வணிகனின் பேராசைக்கு முடிவு கட்ட எண்ணினான்.
  • பணத்தை வைத்திருப்பவன் மட்டும் பணக்காரன் அல்ல; சொன்ன சொல்லை மறவாதவனும் பணக்காரனே என்றான்.
  • மூதாட்டியின் நேர்மையைப் பாராட்டி அப்பணப்பையே அவளிடமே  கொடுத்து விட்டான்.

ஆ. சிந்தனை வினா

நீங்கள் அரசராக இருந்தால், இந்தச் சிக்கலுக்கு என்ன முடிவெடுப்பீர்கள்?

  • நான் அரசராக இருந்திருந்தால் இதே முடிவைத் தான் எடுத்திருப்பேன்.
  • மேலும் பேராசை கொண்ட வணிகனுக்கு இன்னும் கடினமான முறையில் பாடம் கற்றுக் கொடுத்திருப்பேன்.

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. வணிகன் என்ன பொருளை விற்பனை செய்தான்?

வணிகன் தன்னிடமுள்ள ஆடுகளை விற்பனை செய்தான்.

2. வணிகன் என்ன கனவு கண்டான்?

இந்த பணத்தைக் கொண்டு மேலும் ஆடுகள் வாங்கி விற்றால், நிறைய லாபம் கிடைக்கும். தான் பெரும் பணக்காரன் ஆகலாம் என்று கனவு கண்டான்.

3. வணிகனின் பணப்பையை கண்டெடுத்தது யார்?

வணிகனின் பணப்பையை கண்டெடுத்தது மூதாட்டி

பயனுள்ள பக்கங்கள்

1 thought on “Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 8.3 – காணாமல் போன பணப்பை”

Leave a Comment