Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 9.1 – அறநெறிச்சாரம்

பாடம் 9.1 அறநெறிச்சாரம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 9.1 – “அறநெறிச்சாரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

சொல் பொருள்

  • காய்விடத்து – வெறுப்பவரிடத்து
  • சாற்றுங்கால் – கூறுமிடத்து
  • சால – மிகவும்
  • தலை – முதன்மை

பாடல் பொருள்

குற்றம் ஏற்படாமல் பேசுதல், துன்பங்கள் உண்டான போதும் மனம் தளராமலிருத்தல், தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலை ஆகிய இவை மூன்றும் மிக உயர்ந்த பண்புகளாகும்.

நூல் குறிப்பு

அறநெறிக் கருத்துகளைக் கொண்டு, வெண்பா வடிவில் இயற்றப்பெற்ற நூல், அறநெறிச்சாரம். இப்பாடல்கள் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகளைப் பெற்று விளங்குகின்றன. இந்நூலை எழுதியவர், முனைப்பாடியார்.

மதிப்பீடு

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘சொல்லாடல்‘ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. சொல் + லாடல்
  2. சொல + ஆடல்
  3. சொல் + ஆடல்
  4. சொல்லா + ஆடல்

விடை : சொல் + ஆடல்

2. ‘பொழுதாற்றும்’– இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. பொழு + தாற்றும்
  2. பொழுது + ஆற்றும்
  3. பொழு + ஆற்றும்
  4. பொழுது + தூற்றும்

விடை : பொழுது + ஆற்றும்

3. வேற்றுமை” இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ______________

  1. பிரிவு
  2. வேறுபாடு
  3. பாகுபாடு
  4. ஒற்றுமை

விடை : அலை

ஆ. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

தூ – ஆன்மையும் – துன்பங்கள்
ற்றலும் – வேற்றுமைகாய்விடத்து – மெய்ம்மையும்
வேற்றுமை – சாற்றுங்கால்

இ. எதிர்ச்சொல் எழுதுக.

  1. துன்பம் X இன்பம்
  2. வேற்றுமை X ஒற்றுமை
  3. மெய்ம்மை X பொய்மை

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. நாம் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு யாது?

நாம் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு குற்றம் ஏற்படாமல் பேசுதல் ஆகும்.

2. மிக உயர்ந்த பண்புகளாக அறநெறிச்சாரம் குறிப்பிடுவதை எழுதுக.

  • குற்றம் ஏற்படாமல் பேசுதல்.
  • துன்பங்கள் உண்டான போதும் மனம் தளராமலிருத்தல்.
  • தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலை.

ஆகிய இவை மூன்றும் மிக உயர்ந்த பண்புகளாக அறநெறிச்சாரம் குறிப்பிடுகிறது.

உ. சிந்தனை வினா

உன் நண்பர் உன்னை விட்டுப் புதிய நண்பர்களுடன் பழகுவதாகக் கருதுகிறாய். இந்நிலையில், அவருக்குச் சிறு துன்பம் ஏற்படுகிறது. இப்போது உன் நிலை என்ன?

1) அவர் என் நண்பர் இல்லை, அவருக்குத் துன்பம் வந்தால் நான் ஏன் கவலைப்படவேண்டும்?

2) அவருக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஏன் உதவ வேண்டும்?

3) அவர் என்னை வெறுத்தாலும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

விடை:-

3) அவர் என்னை வெறுத்தாலும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

1. அறநெறிச்சாரம் என்ற நூலை எழுதியவர் யார்?

அறநெறிச்சாரம் என்ற நூலை எழுதியவர் முனைப்பாடியார்

2. அறநெறிச்சாரம் -குறிப்பு வரைக

  • அறநெறிக் கருத்துகளைக் கொண்டு, வெண்பா வடிவில் இயற்றப்பெற்ற நூல், அறநெறிச்சாரம்.
  • இப்பாடல்கள் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகளைப் பெற்று விளங்குகின்றன.
  • இந்நூலை எழுதியவர், முனைப்பாடியார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment