பாடம் 9.2 புதுவை வளர்த்த தமிழ்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 9.2 – “புதுவை வளர்த்த தமிழ்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீடு
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘குயில்பாட்டு’ நூலை எழுதியவர் யார் ______________
- பாரதியார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- புதுவை சிவம்
விடை : பாரதியார்
2. ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனப் பாடியவர் ______________
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
- பிரபஞ்சன்
விடை : பாரதிதாசன்
3. “பாரதிநாள் இன்றடா, பாட்டிசைத்து ஆடடா“ எனப் பாடியவர் ______________
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
- திருமுருகன்
விடை : வாணிதாசன்
4. “பாட்டிசைத்து” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- பாட்டு + இசைத்து
- பாடல் + இசைத்து
- பா + இசைத்து
- பாட + இசைத்து
விடை : பாட்டு + இசைத்து
5. “மூன்று + தமிழ்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________
- மூன்றுதமிழ்
- முத்துத்தமிழ்
- முதுதமிழ்
- முத்தமிழ்
விடை : முத்தமிழ்
ஆ. பொருத்துக
1. பாரதிதாசன் | கொடி முல்லை |
2. தமிழ்ஒளி | பாஞ்சாலி சபதம் |
3. பாரதியார் | பாவலர் பண்ணை |
4. வாணிதாசன் | மாதவி காவியம் |
5. திருமுருகன் | இருண்ட வீடு |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ, 5 – இ |
ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. பாரதியார் படைத்த முப்பெருங் காவியங்கள் யாவை?
பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு ஆகிய முப்பெருங் காவியங்களைப் பாரதியார் படைத்தளித்தார்.
2. பாரதிதாசன் – பெயர்க் காரணம் தருக.
பாரதியார் மீது அன்பும் பாசமும், பற்றும் உடையவர். அதனால்தான், தன் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக்கொண்டார்.
3. பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் எது?
பிரபஞ்சன் எழுதிய “வானம் வசப்படும்” என்ற நூலுக்குச் “சாகித்திய அகாதெமி” விருது கிடைத்துள்ளளது.
4. பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் யாவர்?
பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் வாணிதாசனும், புதுவை சிவமும் ஆவர்.
5. தமிழ் ஒளியின் படைப்புகளை எழுதுக.
சிற்பியின் கனவு, வீராயி, கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீதியோ வீணையோ, முன்னும்-பின்னும், அணுவின் ஆற்றல், மாதவி காவியம் ஆகியவை தமிழ் ஒளியின் படைப்புகளாகும்.
உ. சிந்தனை வினா
தமிழின் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் எவ்வாறெல்லாம் தொண்டாற்றியுள்ளனர்?
- தமிழில் பல கவிதை நூல்களைப் படைத்துள்ளனர்.
- நாடகங்கள் பல படைத்து நாடகத்தமிழை வளர்த்தனர்.
- மக்களுக்கு விழுமியத்தையும், விழிப்புணர்வையும் தங்கள் கவிதைகள் மூலம் வளர்த்தனர்.
- விடுதலை பேராட்டத்திலும், மக்களைத் தம் பாடல்கள் மூலம் கலந்திட அழைத்தனர்.
இன்றும் சமுதாய மாற்றத்திற்கு பல கவிஞர்கள் தம் பாடல்களால் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
கூடுதல் வினாக்கள்
1. புதுவைக்கு புகழ் சேர்த்த கவிஞர்களைக் குறிப்பிடுக
பாரதிதாசன், வாணிதாசன், புதுவை சிவம், தமிழ் ஒளி, இரா.திருமுருகன், பிரபஞ்சன்
2. பாரதிதாசனுக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தை கொடுத்தது யார்?
பாரதிதாசனுக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தை கொடுத்தவர் தந்தை பெரியார்.
3. பாரதிதாசன் படைப்புகள் யாவை?
அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, தமிழியக்கம், குறிஞ்சித்திட்டு, புரட்சிக்கவி, இசையமுது மற்றும் பிசிராந்தையார் என்ற நூலையும் படைத்துள்ளார்.
4. பாரதியாரைப் பற்றி கவிஞர் தமிழ்ஒளி கூறியது யாது?
“சறி அடித்துச் சுழனற் அலைகளில் சிக்கிய ஒரு படகாய் தடுமாறி இளைத்து மடிந்த மகாகவி தன் சரிதம் உரைப்பேன்” என்று பாரதியாரைப் பற்றி கவிஞர் தமிழ் ஒளி கூறினார்.