பாடம் 1.3 வளர்தமிழ்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 1.3 – “வளர்தமிழ்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தொன்மை என்னும் சொல்லின் பொருள் ________
- புதுமை
- பழமை
- பெருமை
- சீர்மை
விடை : பழமை
2. இடப்புறம் எனற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ________
- இடன் + புறம்
- இடை + புறம்
- இடது + புறம்
- இடப் + புறம்
விடை : இடது + புறம் (or) இடம் + புறம்
3. சீரிளமை என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ________
- சீர் + இளமை
- சீர்மை + இளமை
- சீரி + இளமை
- சீற் + இளமை
விடை : சீர்மை + இளமை
4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
- சிலம்பதிகாரம்
- சிலப்பதிகாரம்
- சிலம்புதிகாரம்
- சிலபதிகாரம்
விடை : சிலப்பதிகாரம்
5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
- கணினிதமிழ்
- கணினித்தமிழ்
- கணிணிதமிழ்
- கனினிதமிழ்
விடை : கணினித்தமிழ்
6. தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர் ________
- கண்ணதாசன்
- பாரதியார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
விடை : பாரதியார்
7. மா என்னும் சொல்லின் பொருள் ________
- மாடம்
- வானம்
- விலங்கு
- அம்மா
விடை : விலங்கு
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ________
விடை : மொழி
2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ________
விடை : தொல்காப்பியம்
3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
விடை : எண்களின்
சொற்களைத் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக
1. தனிச்சிறப்பு
விடை : உலக மொழிகளுள் தனிச்சிறப்பு உடையது தமிழ்
2. நாள் தோறும்
விடை : நாம் நாள்தோறும் திருக்குறள் படிப்பது நல்லது.
குறுவினா
1. தமிழ் மூத்தமொழி எனப்படுவது எதனால்?
- இலக்கியம் தோன்றிய பிறகே இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைமையான நூல்.
- அப்படியென்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் தோன்றியருக்க வேண்டும். ஆகவே இதனைக் கொண்டு தமிழ் மிகவும் தொன்மையான மூத்தமொழியென அழைக்கப்படுகிறது.
2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையபதி, குண்டலகேசி
சிறுவினா
1. அஃறிணை , பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?
- திணையினை உயிர்திணை, அஃறிணை என இரு வகைபடுத்தலாம். உயர்திணை எதிர்ச்சொல் தாழ்திணை என அமைய வேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை – உயர்வு அல்லாத திணை) என பெயரிட்டு அழைக்கிறாேம்.
- பாகற்காய் கசப்பு சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல் இனிப்பு அல்லா காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என அழைக்கிறோம்.
2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.
தமிழ் இலக்கியங்கள் பலவும் செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை ஆகிய இனிமையான ஓசைகளையும், மோனை, எதுகை, இயைபு என்னும் சொல் இனிமையையும், செய்யளில் இடம் பெற்றுள்ள சொல்லுக்கான பொருளும் இனிமை மிகுந்தனவாக அமைந்து உள்ளதால் தமிழை இனியமொழி என்று அழைக்கின்றோம்.
3. தமிழ் மொழியின் சிறப்புக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.
- மூத்த தமிழ் மொழி என்றும் இளமையானது. எளிமையானது. இனிமையானது, வளமையானது காலத்திற்கேற்ப தன்னை தகுதிப்படுத்திக் கொண்டது
- நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது. நம் வாழ்வைச் செழிக்க செய்வது.
- உலக செம்மொழிகளுள் ஒன்றாக விளங்குவது தமிழ் மொழியின் சிறப்பாகும்.
- உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கிய வளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே
- அவற்றை செம்மைமிக்க மொழி என ஏற்றுக் கொள்ப்பட்டவை ஒரு சில மொழிகளே தமிழ் மொழி அத்தகு சிறப்புமிக்க செம்மொழியாகும்
சிந்தனை வினா
1. தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?
தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை
உயிர்மெய் ஒலிகள், உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் உயிர்மெய் எழுத்துக்களை எளிதாக ஒலிக்கலாம்.
எழுத்துக்களை கூட்டி ஒலித்தால் தமிழ்படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.
தமிழ் மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துக்கள் வலஞ்சுழி, இடஞ்சுழி எழுத்துகளாக உள்ளன.
அவற்றுள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
2. தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.
தமிழில் காலந்தோறும் பலவகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிகாக உருவாகி வருகின்றன.
புதுக்கவிதை, கவிதை, செய்யுள் போன்றவை தமிழ்கவிதை வடிவங்கள், கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.
தற்போது அறிவியல் தமிழ், கணிணித்தமிழ என்று மேலும் மேலும் வளரந்து கொண்டு வருகிறது. இதனால் தான் தமிழ்மொழியை வளர்மொழி என்று கூறுகிறோம்.
வளர் தமிழ் – கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று பாடியவர்
- பாரதியார்
- சுரதா
- பெருஞ்சித்திரனார்
- தேசிய விநாயகம்பிள்ளை
விடை : பாரதியார்
2. பல மொழிகள் கற்ற புலவர்
- பாரதிதாசன்
- வள்ளலார்
- பாரதியார்
- திருவள்ளுவர்
விடை : பாரதியார்
3. நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
- திருவாசம்
- தேவாரம்
விடை : தொல்காப்பியம்
4. தமிழ் என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- தேவாரம்
விடை : தொல்காப்பியம்
5. தமிழ்நாடு என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- தேவாரம்
விடை : சிலப்பதிகாரம்
5. தமிழன் என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்
- மணிமேகலை
- தொல்காப்பியம்
- குண்டலகேசி
- அப்பர் தேவாரம்
விடை : அப்பர் தேவாரம்
6. மல்லியின் தாவர இலைப்பெயர்
- தாள்
- தழை
- புல்
- ஓலை
விடை : தழை
7. கமுகு (பாக்கு) தாவர இலைப்பெயர்
- தாள்
- கூந்தல்
- புல்
- ஓலை
விடை : கூந்தல்
8. உழவர் என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்
- நற்றிணை
- குறுந்தொகை
- கலிக்தொகை
- அகநானூறு
விடை : நற்றிணை
9. பாம்பு என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்
- திருவாசம்
- குறுந்தொகை
- புறநானூறு
- அகநானூறு
விடை : குறுந்தொகை
10. அரசு என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்
- நற்றிணை
- குறுந்தொகை
- கலிக்தொகை
- திருக்குறள்
விடை : திருக்குறள்
11. யாமறிந்த மொொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர்
- பாரதிதாசன்
- வள்ளலார்
- பாரதியார்
- திருவள்ளுவர்
விடை : பாரதியார்
12. வலஞ்சுழி எழுத்துக்களில் பொருந்தாதது
- அ
- எ
- ய
- ஞ
விடை : ய
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. உலகில் ________ மேற்பட்ட மொழிகள் உள்ளன.
விடை : ஆயிரத்திற்கும்
2. இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய ________ தோன்றியிருக்க வேண்டும்.
விடை : இலக்கண விதிகள்
3. ________ மிகவும் தொன்மையான மொழி
விடை : தமிழ் மொழி
4. தமிழ் மொழி பெரும்பாலும் ________ எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
விடை : வலஞ்சுழி
5. உயர்திணை எதிர்ச்சொல் ________ என அமைய வேண்டும்.
விடை : தாழ்திணை
6. தாழ்திணை என்று கூறாமல் ________ என அழைக்கிறாேம்.
விடை : அஃறிணை
7. தமிழுக்கு ________ என்ற சிறப்பு பெயரும் உண்டு
விடை : முத்தமிழ்
8. தமிழில் வலஞ்சுழி எழுத்துக்கள் ________
விடை : அ, எ, ஒள, ண, ஞ
9. தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் ________
விடை : ட, ய, ழ
10. ________ , ________ தமிழ் வடிவங்களாகும்
விடை : அறிவியல் தமிழும். கண்ணித்தமிழும்
11. ________ , ________ ஆகிய இரண்டும் சங்க நூல்கள் எனப்படும்
விடை : பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
பொருத்துக
1. அருகு, கோரை | தோகை |
2. நெல், வரகு | ஓலை |
3. கரும்பு, நாணல் | புல் |
4. பனை, தென்னை | தாள் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
பொருத்துக
1. முதலை | பதிற்றுப்பத்து |
2. மருந்து | பெரும்பாணாற்றுப்படை |
3. பார் | குறுந்தொகை |
4. வெள்ளம் | அகநானூறு |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ |
பொருத்துக
1. இலக்கண நூல்கள் | எட்டுத்தொகை, பத்துப்பாட்டு |
2. சங்க இலக்கியங்கள் | தொல்காப்பியம், நன்னூல் |
3. அறநூல்கள் | திருக்குறள், நாலடியார் |
4. காப்பிய நூல்கள் | சிலப்பதிகாரம், மணிமேகலை |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – இ, 4 – ஈ |
5. சேர்த்து எழுதுக
- செம்மை + மொழி – செம்மொழி
- பாகு + அல் + காய் – பாகற்காய்
6. குறுவினா
1. தமிழ் எழுத்துகளில் வலஞ்சுழி எழுத்துகள் யாவை?
அ, எ, ஔ, ண, ஞ
2. தமிழ் எழுத்துகளில் இடஞ்சுழி எழுத்துகள் யாவை?
ட , ய, ழ
3. தமிழ் உரைநடை வடிவங்கள் யாவை?
கட்டுரை, புதினம், சிறுகதை
4. தமிழ் கவிதை வடிவங்கள் யாவை?
துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்
5. தற்போது வளர்ந்து வரும் தமிழ் வடிவங்கள் எவை?
அறிவியல் தமிழ், கணினித்தமிழ்
6. பூவின் ஏழுநிலைத் தமிழ் பெயர்கள் யாவை?
அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
7. சங்க நூல்கள் எவை?
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
7. குறுவினா
1. “மா” என்ற சொல்லின் பல பொருளை எழுதுக.
மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு.
2. முத்தமிழ் – குறித்து எழுதுக
தமிழுக்கு முத்தமிழ் என்ற சிறப்புபெயரும் உண்டு.
- இயல்தமிழ் – எண்ணத்தை வெளிப்படுத்தும்.
- இசைத்தமிழ் – உள்ளத்தை மகிழ்விக்கும்.
- நாடகத்தமிழ் – உணர்வில் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.
3. தமிழில் தோன்றியுள்ள கலைச்சொற்கள் சிலவற்றை எழுதுக.
இணையம், முகநூல், குரல்தேடல், புலனம், தேடுபொறி, செயலி, தொடுதிரை
4. இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் தமிழ்ச்சொற்கள் எவையேனம் மூன்றினை சான்றுடன் எழுதுக
சொல் | இடம் பெற்ற நூல் |
வேளாண்மை | கலித்தொகை-110, திருக்குறள் – 81 |
உழவர் | நற்றிணை – 4 |
பாம்பு | குறுந்தொகை – 239 |