Class 6th Tamil Book Solution for CBSE | Lesson 5.2 – கண்மணியே கண்ணுறங்கு

பாடம் 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 5.2 – “கண்மணியே கண்ணுறங்கு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 6 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • நந்தவனம் – பூஞ்சோலை
  • பார்  – உலகம்
  • பண் – இசை
  • இழைத்து – செய்து

தொகைச்சொற்களின் விளக்கம்

  • முத்தேன் – கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்
  • முக்கனி – மா, பலா, வாழை
  • முத்தமிழ் – இயல், இசை, நாடகம்

பாடலின் பொருள்

  • தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ!
  • தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ!
  • குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ!  கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக!

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘பாட்டிசைத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. பாட்டி + சைத்து
  2. பாட்டி + இசைத்து
  3. பாட்டு + இசைத்து
  4. பாட்டு+சைத்து

விடை : பாட்டு + இசைத்து

2. ‘கண்ணுறங்கு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. கண் + உறங்கு
  2. கண்ணு + உறங்கு
  3. கண் + றங்கு
  4. கண்ணு + றங்கு

விடை : கண் + உறங்கு

3. “வாழை + இலை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. வாழையிலை
  2. வாழைஇலை
  3. வாழலை
  4. வாழிலை

விடை : வாழையிலை

4. “கை + அமர்த்தி” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. கைமர்த்தி
  2. கைஅமர்த்தி
  3. கையமர்த்தி
  4. கையைமர்த்தி

விடை : கையமர்த்தி

5. “உதித்த” என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்________

  1. மறைந்த
  2. நிறைந்த
  3. குறைந்த
  4. தோன்றிய

விடை : மறைந்த

2. குறுவினா

1. இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?

சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு

2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?

நமது வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரிக்க வேண்டும் என நாட்டுப் புறப்பாடல் கூறுகிறது.

3. “கண்மணியே கண்ணுறங்கு” பாடலில் உள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

ந்தவன் – ற்றமிழ்பாட்டிசைத்து – பார்
ந்தத்திலே – ங்கத்திேலகுளிக்க – குளம்
ண்ணே – ண்ணுறங்கு

3. சிறுவினா

தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறார்?

தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயாே!

தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தாெட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேர நாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவளை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியாே!

குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் பாேக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழாே! கண்வண கண்மணியே கண்மூடி உறங்குவாயாக! என்று, தாய் தன் குழந்தையைப் பாராட்டுகிறாள்.

4. சிந்தனை வினா

1. வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க.

  1. கதைகள்
  2. கதைப்பாடல்கள்
  3. பாடல்கள்
  4. பழமொழிகள்
  5. விடுகதைகள்
  6. புராணக் கதைகள்

2. குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக.

நிலவேமுத்தே
ஓவியமேகளிறே
பெருங்கடலேசூரியனே
கிளியேமயிலே
பொன்னேகண்ணே
மாணிக்கமேவைரமே
இரத்தினமேகண்மணியே
குழலேதேனே
மாதுளையேகரும்பே
அமுதமேபெட்டகமே
அனிச்சமேஆருயிரே
மழையேமுகிலே
கற்பூரமேதெய்வமே
அல்லியேமல்லியே
அரும்பேகனிச்சாறே
மணிப்புறாவேமாடப்புறாவே
சித்திரமேமரகதமே
பிடியேவைடூரியமே
நட்சத்திரமேமாம்பழமே
அன்னமேஅழகே
பூவேதென்றலே
நந்தவனமேரோஜாவே
கனியே, அன்பேதாமரையே

கூடுதல் வினாக்கள் 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. “பார்” என்ற சொல்லின் பொருள் _______________

  1. கலம்
  2. நாடு
  3. ஊர்
  4. உலகம்

விடை : உலகம்

2. _______________ என்ற சொல்லின் பொருள் இசை

  1. கண்
  2. பண்
  3. காண்
  4. பன்

விடை : “பண்”

3. “தால்” என்னும் சொல் தரும் பொருள் ____________

  1. நாக்கு
  2. கண்
  3. வாய்
  4. காது

விடை : நாக்கு

4. தாலாட்டு _____________________ ஒன்று

  1. சங்க இலக்கியங்களுள்
  2. நன்னெறி நூல்களுள்
  3. வாய்மொழி இலக்கியங்களுள்
  4. நீதி நூல்களுள்

விடை : வாய்மொழி இலக்கியங்களுள்

5. குழந்தையின் ____________, குழந்தைகளை ____________ பாடும் பாட்டு தாலாட்டு

  1. அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும்
  2. தூக்கத்தை நிறுத்தவும், அழ வைக்கவும்
  3. தூங்க வைக்கவும், அழ நிறுத்தவும்
  4. உண்ணவும், தூங்க வைக்கவும்

விடை : அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும்

சேர்த்து எழுதுக

  1. மூன்று + தேன் = முத்தேன்
  2. மூன்று + கனி = முக்கனி
  3. மூன்று + தமிழ் = முத்தமிழ்
  4. பூ + சோலை = பூஞ்சோலை
  5. நன்மை + தமிழ் = நற்றமிழ்

“கண்மணியே கண்ணுறங்கு” பாடலில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக

ண் – பண்வெட்டி – கட்டி
தொட்டில் – கட்டிண்ணே – கண்ணுறங்கு
வைக்கும் – முக்கனி

குறு வினா

1. முந்நாடுகளின் சிறப்புகள் எவையென தாய் கூறுகின்றாள்?

  • சேரநாடு – முத்து
  • சோழ நாடு – முக்கனி
  • பாண்டிய நாடு – முத்தமிழ்

2. “பாண்டிய நாட்டு முத்தமிழோ” இதில் முத்தமிழ் எவை?

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்

சிறு வினா

1. தாலாட்டு பற்றிய குறிப்பினை எழுதுக

  • தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
  • தால் என்பதற்கு நாவு (நாக்கு) என்று பொருள். நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) எனப் பெயர் பெற்றது.
  • குழந்தையின் அழுகையை நிறுத்தவும், குழந்தைகளை தூங்க வைக்கவும் பாடும் பாட்டு தாலாட்டு

2. கீழ்கண்ட தொகைச்சொற்களின் விளக்கத்தை கூறு

முத்தேன்

கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்

முக்கனி

மா, பலா, வாழை

முத்தமிழ்

இயல், இசை, நாடகம்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: