Class 6th Tamil Book Solution for CBSE | Lesson 5.6 – திருக்குறள்

பாடம் 5.6 திருக்குறள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 5.6 – “திருக்குறள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 6 Tamil Text Books – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?

  1. நம் முகம் மாறினால்
  2. நம் வீடு மாறினால்
  3. நாம் நன்கு வரவேற்றால்
  4. நம் முகவரி மாறினால்

விடை : நம் முகம் மாறினால்

2. நிலையான செல்வம் ______

  1. தங்கம்
  2. பணம்
  3. ஊக்கம்
  4. ஏக்கம்

விடை : ஊக்கம்

3. ஆராயும் அறிவு உடையவர்கள் _______ சொற்களைப் பேச மாட்டார்.

  1. உயர்வான
  2. விலையற்ற
  3. பயன்தராத
  4. பயன்உடைய

விடை : பயன்தராத

4. “பொருளுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. பொருளு+டைமை
  2. பொரு+ளுடைமை
  3. பொருள்+உடைமை
  4. பொருள்+ளுடைமை

விடை : பொருள்+உடைமை

5. “உள்ளுவது + எல்லாம்” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______

  1. உள்ளுவதுஎல்லாம்
  2. உள்ளுவதெல்லாம்
  3. உள்ளுவத்தெல்லாம்
  4. உள்ளுவதுதெல்லாம்

விடை : உள்ளுவதெல்லாம்

6. “பயன் + இலா” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______

  1. பயனிலா
  2. பயன்னில்லா
  3. பயன்இலா
  4. பயன்இல்லா

விடை : பயனிலா

நயம் அறிக

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

இக்குறளில் உள்ள எதுகை. மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனைச் சொற்கள்

  • ள்ளுவது – யர்வுள்ளல்
  • ள்ளினும்-ள்ளாமை

எதுகைச் சொற்கள்

  • ள்ளுவது – உள்ளலும்
  • ள்ளினும் – தள்ளாமை

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

1. பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு
    மற்றுப் பிற அணியல்ல

விடை :

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

2. உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
   தள்ளாமை தள்ளினும் நீர்த்து.

விடை :

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.

“ஊக்கமது கைவிடேல்” என்பது ஒளவையாரின் ஆத்திச்சூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளை தேர்ந்தெடுக்க

1. விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று.

2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

3. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்.

விடை :-

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளை தேர்ந்தெடுக்க

வீட்டிற்குள் வந்த வேலவனைத் தந்தை அழைத்தார். “உங்கள் பள்ளியில்  பேச்சுப்போட்டி நடப்பதாக கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார். “இல்லையப்பா அமுதன் என்னை விட நன்றாகப் பேசுவான். அவனுக்குதான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை” என்றான் வேலன். “போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் விலகக் கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்து கொள்” என்றார் அப்பா. உற்சாகம் அடைந்த வேலன். ” நாளை பெயர் கொடுத்து விடுகிறேன் அப்பா என்றான்

1. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

2. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

3. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்

விடை :-

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

குறு வினா

1. எப்படி உண்பது விரும்பத்தக்கது?

அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்பாேது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று

2. எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகிறார்?

அடுத்தவர் பாெருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூட தீமையானது என்று வள்ளுவர் கூறுகிறார்.

3. ஆக்கம் யாரிடம் வழிதகட்டுச் செல்லும்?

தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக் காெண்டு செல்லும்.

4. நாம் எத்தகைய சாெற்களைப் பேச வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?

பயனுடைய சொற்களை மட்டுமே பேச வேண்டும். பயன் இல்லாத சொற்களைப் பேசாமல் இருக்க வேண்டுமென வள்ளுவர் கூறுகிறார்

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஊக்கம் உடையவனுக்கு கிடைப்பது _______________

  1. அறிவு
  2. செல்வம்
  3. கல்வி
  4. இன்பம்

விடை : செல்வம்

2. முகர்ந்து பார்த்தால் வாடுவது _______________

  1. தாமரை மலர்
  2. மல்லிகை மலர்
  3. அனிச்ச மலர்
  4. ரோஜா மலர்

விடை : அனிச்ச மலர்

3. நிலையான செல்வம் _______________

  1. ஊக்கம்
  2. அறிவு
  3. கல்வி
  4. இன்பம்

விடை : ஊக்கம்

4. ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருப்பது _______________

  1. அறிவு
  2. கல்வி
  3. இன்பம்
  4. உயர்வு

விடை : உயர்வு

பிரித்து எழுதுக

  1. அசைவிலா = அசைவு + இலா
  2. மருந்தெனினும் = மருந்து +  எனினும்
  3. முகந்திரிந்து = முகம் + திரிந்து
  4. அளவிறந்து = அளவு + இறந்து
  5. பயனுடைய = பயன் + உடைய

குறு வினா

1. அழிந்துவிடும் எதனை வள்ளுவர் கூறுகிறார்?

களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும் என வள்ளுவர் கூறுகிறார்.

2. எது நிலையான செல்வம்?

ஊக்கமே நிலையான செல்வம்.

3. ஊக்கத்தினை வள்ளுவர் எவ்வாறு வரையறுக்கிறார்?

தண்ணீரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப்பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்.

4. எண்ணுவதை எவ்வாறு எண்ண வேண்டும்?

எண்ணுவதை உயர்வாகவே எண்ண வேண்டும்.

குறு வினா

1. விருந்தோம்பல் அதிகாரத்தில் விருந்தினர் குறித்து வள்ளுவர் கூறுவது யாது?

  • அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.
  • மோந்து பார்த்தால் அனிச்ச மலர் வாடிவிடும். நம் முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.

2. கள்ளாமை அதிகாரத்தில் களவு குறித்து வள்ளுவர் கூறுவது யாது?

  • அடுத்தவர் பொருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூடத் தீமையானது.
  • களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment