Class 6th Tamil Book Solution for CBSE | Lesson 6.2 – கடலோடு விளையாடு

பாடம் 6.2 கடலோடு விளையாடு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 6.2 – “கடலோடு விளையாடு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 6 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி
  • மின்னல்வரி – மின்னல் கோடுகள்
  • அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்

பாடலின் பொருள்

மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள்; விரிந்த கடலே பள்ளிக்கூடம்; கடல் அலையே தோழன்; மேகமே குடை; வண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை; விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து; சீறிவரும் புயலே விளையாடும் ஊஞ்சல்; பனிமூட்டம் தான் உடலைச் சுற்றும் போர்வை; அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை; கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு; மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம்; வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம்; முழு நிலவுதான் கண்ணாடி; மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம்; வானமே அவர்கள் வணங்கும் தலைவன்; இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.

தெரிந்து தெளிவோம்

நெய்தல் திணை

நிலம்கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள்பரதவர், பரத்தியர்
தொழில்மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூதாழம்பூ

நூல் வெளி

  • உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும்.
  • காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.
  • ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. “கதிர்ச்சுடர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. கதிர்ச் + சுடர்
  2. கதிரின் + சுடர்
  3. கதிரவன் + சுடர்
  4. கதிர் + சுடர்

விடை : கதிர் + சுடர்

2. “மூச்சடக்கி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________

  1. மூச்சு + அடக்கி
  2. மூச் + அடக்கி
  3. மூச் + சடக்கி
  4. மூச்சை + அடக்கி

விடை : மூச்சு + அடக்கி

3. “பெருமை + வானம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. பெருமைவானம்
  2. பெருவானம்
  3. பெருமானம்
  4. பேர்வானம்

விடை : பெருவானம்

4. “அடிக்கும் + அலை” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______

  1. அடிக்குமலை
  2. அடிக்கும் அலை
  3. அடிக்கிலை
  4. அடியலை

விடை : அடிக்குமலை

பாடல் வரிகளுக்கு ஏற்ப பொருத்துக

1. விடிவெள்ளிபஞ்சுமெத்தை
2. மணல்ஊஞ்சல்
3. புயல்போர்வை
4. பனிமூட்டம்விளக்கு
விடை:- 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறுவினா

1. அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?

மீனவர்கள் அலையத் தாேழனாகவும் மேகத்தைக் குடையாகவும் கருதுகின்றனர்.

2. கடல் பாடலில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?

கடல் பாடலில் நிலவு கண்ணாடியாகவும் வானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகின்றன.

3. மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை?

மீனவர்கள் கட்டுமரத்தை தமது வீடாகவும், மீன்களை செல்வமாகவும் கருதுகின்றன.

சிந்தனை வினா

1. நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.

எங்கள் பகுதியில் நெசவுத்தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொழிலினால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை பெறுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் பல மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதனால் பொருளாதாரத்தில் எங்கள் ஊரின் நெசவாளர்கள் உயர்ந்து காணப்படுகின்றன. சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் விரும்பும் வண்ணத்திலும், விலையும் நெசவு செய்து தருகின்றன. இதன் காரணமாக பல ஊரிலிருந்து வந்து விருப்பத்துடன் வாங்கி செல்கின்றன. உயர்தரமான நூலிழைகளால் நெய்யப்படுவதால் தரமாகவும், நீண்ட நாள் உழைக்கக் கூடியனவாகவும் இருக்கின்றன. மேலும் விலை குறைவாக உள்ளதால் அதிகமாக விற்பனை ஆகின்றன. ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பதை மாற்றுவது அவர்களின் இலட்சியமாகும்.

2. நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?

நாட்டுப்புற மக்களின் எண்ணங்கள், ஏக்கங்கள், எழுச்சிகள், குறிக்கோள்கள், நம்பிக்கைகள், இன்பதுன்பங்கள் முதலியவற்றை இசையோடு எளிய இனிய நடையில் படம் பிடித்து காட்டுவனவே நாட்டுப்புற இலக்கியம். பாமர மக்களுடைய பட்டறிவின் கருவூலமாக, சிந்தனைச் செல்லாக்குப் பெற்று எழுதா இலக்கியங்களாக வலம் வருகின்றன.

வாய்மொழிப் பாடல்கள் சாதாரண மக்களின் பாடல்கள் படிப்பு இல்லாத கிராமவாசிகள், வயிலில் உழுகிறவர்கள், நாற்று நடுகிறவர்கள், கிணறு ஓடம் விடுகிறவர்கள், வண்டி ஓட்டுபவர்கள் முதலிய மக்கள் பாடுகின்ற பாட்டுதான் நாட்டுப்புற ப்பாடல் எனப்படுகிறது. எழுத்தறிவில்லாத இத்தகைய தொழில் மாந்தரின் இதயத்தில் உணர்ச்சி பொங்கி, அதுவே பாட்டாக பெருகுவதுண்டு. அத்தகைய பாட்டில் உணர்ச்சி இருக்கும். சொல், தொடையழகு இருக்கும். எனினும் இலக்கண வரம்பிற்கு உட்படாமலும் இருக்கும். இந்நாட்டுப் பாடலை ஓலையில் எழுத்தாணி கொண்டோ காகிதத்தில் பேனாவினாலோ எழுதியிருக்க மாட்டார்கள். தலைமுறை தலைமுறையாக நாட்டு மக்கள் இப்பாட்டுகளை பாடியும், ஆடியும் கேட்டுமே வழங்கி வந்துள்ளனர். ஆகவே, நாட்டுப்புற இலக்கியங்ககளை வாழ்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணமாகும்.

கூடுதல் வினாக்கள்

பிரித்து எழுதுக

  1. வெண்மணல் = வெண்மை + மணல்
  2. உடற்போர்வை = உடல் + போர்வை

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. “தாழம்பூ” _______________ திணைக்கு உரியது.

  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்

விடை : நெய்தல்

2. மீனவர்களுக்கு கடல் அலை _______________

  1. மெத்தை
  2. தோழன்
  3. ஊஞ்சல்
  4. போர்வை

விடை : தோழன்

3. “கட்டுமரம்” என்பது மீனவர்களுக்கு _______________

  1. பள்ளிக்கூடம்
  2. கண்ணாடி
  3. வீடு
  4. தவம்

விடை : வீடு

4. “சுடர்” தரும் பொருள் _______________

  1. ஒளி
  2. தீ
  3. துன்பம்
  4. புகழ்

விடை : ஒளி

பொருத்துக

1. மேகம்தோழன்
2. கடல்குடை
3. நீச்சல்வீடு
4. கட்டுமரம்விளக்கு
விடை :- 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. மீனவர்களுக்கு விளக்குகள் எவை?

மீனவர்களுக்கு விண்மீன்களே விளக்காகும்

2. மீனவர்களுக்கு மேற்கூரை எது?

அலை வீசும் கதிரவனின் ஒளிச்சுடர் தான் மீனவர்களுக்கு மேற்கூரையாகும்

3. மீனவர்கள் வாழும் வீடு எது?

கட்டுமரமே மீனவர்கள் வாழும் வீடாகும்

4. மீனவர்கள் செய்யும் குறித்துக் கூறுக

மூச்சடிக்கி செய்யும் நீச்சலே மீனவர்கள் செய்யும் தவமாகும்.

5. மீனவர்களுக்கு பஞ்சு மெத்தையாகவும் கூத்தாகவும் எதனைக் குறிப்பிடுகின்றனர்?

வெண்மையான மணலே மீனவர்கள் படுத்துறங்கும் பஞ்சு மெத்தை என்றும் விண்ணின் இடியையே கூத்தாகவும் குறிப்பிடுகின்றனர்

6. நாட்டுப்புறப்பாடல் வகைகள் சிலவற்றை எழுது

ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில் பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள்

7. வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?

காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டுவரும் நாட்டுப்புறப் பாடல்களை வாய்மொழி இலக்கியம் என்பர்

8. நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் தொகுப்பு நூலை எழுதியவர் யார்?

க.சக்திவேல்

9. நெய்தல் திணையின் முதல், கருப்பொருளைக் கூறுக

நிலம்

கடலும் கடல் சார்ந்த இடம்

சிறுபொழுது

ஏற்பாடு

பெரும்பொழுது

கார் காலம், குளிர் காலம், முன்பனி காலம், பின்பனி காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம்

தெய்வம்

வருணன்

மக்கள்

பரதர், பரத்தியர்

தொழில்

மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

பூ

தாழம்பூ

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment