Class 6th Tamil Book Solution for CBSE | Lesson 7.2 – தமிழ்நாட்டில் காந்தி

பாடம் 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 7.2 – “பாரதம் அன்றைய நாற்றங்கால்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 6 Tamil Text Books – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

  1. கோவை
  2. மதுரை
  3. தஞ்சாவூர்
  4. சிதம்பரம்

விடை : மதுரை

2. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும் என்று விரும்பினார்?

  1. நாமக்கல் கவிஞர்
  2. திரு.வி.க
  3. உ.வே.சா
  4. பாரதியார்

விடை : உ.வே.சா

பொருத்துக

1. இலக்கிய மாநாடுபாரதியார்
2. தமிழ்நாட்டுக் கவிஞர்சென்னை
3. குற்றாலம்ஜி.யு.போப்
4. தமிழ்க்கையேடுஅருவி
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

சாெற்றொடரில் அமைத்து எழுதுக

1. ஆலாேசனை

விடை : பெரியோர்கள் ஆலோசனை வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது

2. பாதுகாக்க

விடை : காடுகளை அழிவின்றி பாதுகாக்க வேண்டும்

3. மாற்றம்

விடை : தனி மனிதனின் மாற்றமே தேசத்தின் மாற்றமாக அமையும்

4. ஆடம்பரம்

விடை : ஆடம்பரம் அழிவின் ஆரம்பம்

குறுவினா

1. காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி இல்லாததால், காந்தியடிகள் நுழையவில்லை

2. காந்தியடிகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்டுத்திய நிகழ்வைக் கூறுக?

காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தகாலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கியுள்ளதாகத் கூறியுள்ளார்.

ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும் இவை அனைத்தும் காந்தியடிகள் தமிழ் கற்கும் நிகழ்வுகள் ஆகும்.

சிறுவினா

1. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அ்மைந்த நிகழ்வினை எழுதுக.

1921 ஆம் ஆணடு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.

அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகைள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார்.

அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தாெடங்கினார். அவரது தாேற்த்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்டுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உணடு. அந்தக் கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார். உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும்.

2. காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தாெடர்பை எழுதுக.

காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரக்காவில் வாழ்ந்தகாலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கியுள்ளதாகத் கூறியுள்ளார்.

ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும்.

1937 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார்.

உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். ”இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள். இந்நிகழ்வுகள் மூலம் ஏற்த்தாழ்வு அற்ற சமுதாயம் மலர வேணடும் என்னும் காந்தியடிகளின் உள்ள உறுதியை அறிந்து கொள்ளலாம்.

மேலும் அவரே தமிழ் மாெழியின் மீது கொண்ட பற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது.

சிந்தனை வினா

காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?

அகிம்சை, எளிமை, எளியவரிடம் அன்பு காட்டல், தன்னல மறுப்பு, பகைவரை மன்னிக்கும் பரந்த உள்ளம், சுதேசி பொருள் மீது பற்று, உண்மையைப் பேசுதல், தாழ்ச்சி, காலந்தவறாமை, புலால் உண்ணாமை

 

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சென்னையில் __________________ எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

  1. கிறித்துவ திருமண
  2. குண்டர் தடுப்பு
  3. மோட்டார் வாக
  4. ரெளலட்

விடை : ரெளலட்

2. காந்தியடிகளிடம் சென்னை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டியவர் __________________

  1. பாரதியார்
  2. இராஜாஜி
  3. பாரதிதாசன்
  4. வள்ளுவர்

விடை : பாரதியார்

3. காந்தியடிகளைக் கவர்ந்த நூல் __________________ 

  1. கம்பராமாயாணம்
  2. சிலப்பதிகாரம்
  3. திருக்குறள்
  4. மகாபாரதம்

விடை : திருக்குறள்

4. தமிழ்க்கையேட்டை இயற்றியவர் __________________ 

  1. இராஜாஜி
  2. ஜி.யு.போப்
  3. வீரமாமுனிவர்
  4. கால்டுவெல்

விடை : ஜி.யு.போப்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment