பாடம் 9.1 ஆசியஜோதி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 9.1- ” ஆசியஜோதி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- அஞ்சினார் – பயந்தனர்
- கருணை – இரக்கம்
- வீழும் – விழும்
- ஆகாது – முடியாது
- பார் – உலகம்
- நீள்நிலம் – பரந்த உலகம்
- முற்றும் – முழுவதும்
- மாரி – மழை
- கும்பி – வயிறு
- பூதலம் – பூமி
பாடலின் பொருள்
யாகசாலையில் நின்றவர் அனைவரும் புத்தர்பிரானைக் கண்டு நடுங்கினர். அவர் முன்னால் நிற்கவும் அஞ்சினர். கூடி இருந்த மக்களின் முன்னால் இரக்கமே உருவான புத்தர்பிரான் கூறிய உரையைக் கேளுங்கள்.
வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல். எல்லாரும் தம் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாக்கின்றனர். எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுவதை அறியாதவர் உண்டோ?
நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும். உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைவதை அறியாதவர் உண்டோ?
எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர்.
காடுமலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்குத் தருகிறது. இதனைத் தீயசெயல் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள் அன்றோ? நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும்வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா?
ஆயிரம் பாவங்கள் செய்துவிட்டு, ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் நீங்கி விடுமா? ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது. ஆகையால், தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.
நூல் வெளி
- தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
- முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
- ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
- இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. புத்தரின் வரலாற்றை கூறும் நூல் _______________
- ஜீவஜோதி
- ஆசியஜோதி
- நவஜோதி
- ஜீவன்ஜோதி
விடை : ஆசியஜோதி
2. நேர்மையான வாழ்வு வாழ்பவர் _______________
- எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர்
- உயிர்களைத் துன்புறுத்துவர்
- தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
- தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்
விடை : எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர்
3. ஒருவர் செய்யக் கூடாதது _______________
- நல்வினை
- தீவினை
- பிறவினை
- தன்வினை
விடை : தீவினை
4. எளிதாகும் என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- எளிது + தாகும்
- எளி + தாகும்
- எளிது + ஆகும்
- எளிதா + ஆகும்
விடை : எளிது + ஆகும்
5. பாலையெல்லாம் என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- பாலை+யெல்லாம்
- பாலை+எல்லாம்
- பாலை+எலாம்
- பா+எல்லாம்
விடை : பாலை+எல்லாம்
6. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
- இன்உயிர்
- இனியஉயிர்
- இன்னுயிர்
- இனிமைஉயிர்
விடை : இன்னுயிர்
7. மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________
- மலைஎலாம்
- மலையெலாம்
- மலையெல்லாம்
- மலைஎல்லாம்
விடை : மலையெலாம்
குறு வினா
1. அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?
வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லோர்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிரைக் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.
2. எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?
எல்லா உயிர்களும் தம் உயிரைப் பெரிதாக மதித்து பாதுகாப்பது போல எறும்பும் தன் உயிரைக் காக்கப் பாடுபடுகிறது.
3. ஒரு நாளும் விட்டுச் செல்லாதது எது?
ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.
4. உலகம் முழுமையையும் எப்போது ஆள முடியும்?
நல்ல மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையும் இரக்கத்தால் ஆட்சி செய்ய முடியும்.
சிறு வினா
எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் யாவை?
- வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லோர்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிரைக் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.
- எல்லா உயிர்களும் தம் உயிரைப் பெரிதாக மதித்து பாதுகாப்பது போல எறும்பும் தன் உயிரைக் காக்கப் பாடுபடுகிறது.
- நல்ல மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையும் இரக்கத்தால் ஆட்சி செய்ய முடியும்.
- உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைகிறது. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவார்.
- காடு, மலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்கு தருகிறது. அது தீய செயல் அன்று.
- இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள். நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும் வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைப்பதில்லை.
- ஆயிரம் பாவங்கள் செய்து ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் அகன்ற போகாது. ஒருவர் செய்த நன்மையும், தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.
- ஆகையால் தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்த பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிவிடும் எண்ணத்தை உங்களை விட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.
சிந்தனை வினா
பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் அவைகளை வீடுகளில் வளர்ப்பதை தடை செய்ய வேண்டும். அவைகளை சுதந்திரமாக வாழ விட வேண்டும். வீடுகளில் வளர்ப்பதால், அவைகளைக்கு கட்டுப்பாட்டை உருவாக்கி கூண்டுகளிலும், கூடுகளிலம் அடைக்கின்றோம். விலங்குகளைக் கட்டு போடுகின்றோம். எந்த உயிரினங்களும் அடிமையாகவும், அடைக்கப்படும் இருப்பதை விரும்புவதில்லை.
அதனல், அவைகளை அவைகளுக்குள்ள வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும். இறைவன் படைப்பில் அனைத்துமே சமம் என்று எண்ண வேண்டும். இதறகாக மாணவர்களாகிய நாம் போராட வேண்டும். சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை என்று சொல்லுவது போல, சுதந்திரம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பிறப்புரிமை என்பதை மனிதன் உணர வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
பிரித்து எழுதுக
- இன்னுயிர் = இனிமை + உயிர்
- நாடெங்கும் = நாடு + எங்கும்
- எளிதாகும் = எளிது + ஆகும்
- பக்குவமாவது = பக்குவம் + ஆவது
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தேசிய விநாயகனார் ________________ என்னும் பட்டம் பெற்றவர்
- கவிமணி
- குழந்தை கவிஞர்
- கவிஞாயிறு
- பாட்டுக் கவிஞர்
விடை : கவிமணி
2. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே __________________ வாழ்பவர்
- நேர்மையற்ற வாழ்வு
- நேர்மையான வாழ்வு
- நட்புடன்
- பகைமையுடன்
விடை : நேர்மையான வாழ்வு
வினாக்கள்
1. தேசிய விநாயகனார் பற்றி குறிப்பு வரைக
- தேசிய விநாயகனார் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்
- 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்
- கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்
2. ஆசியஜோதி குறிப்பு வரைக
ஆசியஜோதி ஆங்கில மொழியல் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றை கூறுகிறது