பாடம் 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 1.5 – “குற்றியலுகரம், குற்றியலிகரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
கற்றவை கற்றபின்
ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள்; அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.
எண்ணுப்பெயர்கள்
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து
குற்றியலுகரச் சொற்கள்
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து
குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
வன்தொடர் குற்றியலுகரம்
மூன்று, எட்டு, பத்து
மென்தொடர் குற்றியலுகரம்
ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஒன்பது
உயிர்த் தொடர் குற்றியலுகரம்
ஆறு
குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.
எண்ணுப்பெயர்கள் | மாத்திரை அளவு |
ஒன்று | 1 + ½ + ½ = 2 |
இரண்டு | 1 + 1 + ½ + ½ = 3 |
மூன்று | 2 + ½ + ½ = 3 |
நான்கு | 2 + ½ + ½ = 3 |
ஐந்து | 2 + ½ + ½ = 3 |
ஆறு | 2 + ½ = 2½ |
ஏழு | 2 + 1 = 3 |
எட்டு | 1 + ½ + ½ = 2 |
ஒன்பது | 1 + ½ + 1 + ½ = 3 |
பத்து | 1 + ½ + ½ = 2 |
கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.
- கு – பாகு, வாகு
- டு – பாடு, சாடு, ஓடு, விடு
- சு – காசு, வீசு, பேசு
- து – வாது, கேது, சாது, மாது
- று – வறு, சேறு, செறு
மதீப்பீடு
கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து
நெடில் தொடர் |
காசு |
ஆய்தத் தொடர் |
எஃகு |
உயிர்த் தொடர் |
ஆறு, ஏடு, விறகு |
வன் தொடர் |
உழக்கு, எட்டு |
மென் தொடர் |
பந்து, கரும்பு |
இடைத் தொடர் |
கொய்து |
பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.
1. பசு, விடு, ஆறு, கரு
விடை : கரு
2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து
விடை : பஞ்சு
3. ஆறு, மாசு, பாகு, அது
விடை : அது
4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு
விடை : அரசு
5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு
விடை : எஃகு
குறுவினா
1. குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்
குற்றியலுகம் = குறுமை + இயல் + உகரம்
2. குற்றியலிகரம் என்றால் என்ன?
முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.
கூடுதல் வினாக்கள்
சேர்த்து எழுதுக
- கொக்கு + யாது = கொக்கியாது
- தோப்பு + யாது = தோப்பியாது
- நாடு + யாது = நாடியாது
- எனப்படுவது + யாது = எனப்படுவதியாது
- கேள் + மியா = கேண்மியா
- செல் + மியா = சென்மியா
குறுவினா
1. முற்றியலுகரம் என்றால் என்ன?
ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்
(எ.கா) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு
2. குற்றிலியலுகரத்தின் வகைகள் யாவை
குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படும்
- நெடில்தொடர் குற்றியலுகரம்
- ஆயுதத்தொடர் குற்றியலுகரம்
- உயிர்த்தொடர் குற்றியலுகரம்
- வன்த்தொடர் குற்றியலுகரம்
- மென்த்தொடர் குற்றியலுகரம்
- இடைத்தொடர் குற்றியலுகரம்
3. நெடில்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன? எ.கா. தருக
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
(எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு .
4. ஆயுதத்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன? எ.கா. தருக
ஆ ய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா.) எஃகு, அஃது
5. உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன? எ.கா. தருக
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா.) அரசு (ர = ர் + அ), கயிறு (யி = ய் + இ), ஒன்பது ( ப = ப் + அ), வரலாறு (லா = ல் + ஆ)
6. வன்த்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?
வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளை த் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்
‘வன்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று
7. மென்த்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?
மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்த்தொடர் க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
8. இடைத்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன? எ.கா. தருக
இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந் து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு
9. தமிழ் எழுத்துக்களின் வகைகள் யாவை?
தமிழ் எழுத்துக்களை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிக்கலாம்
10. முதலெழுத்துக்கள் என்றால் என்ன?
உயிர் பன்னிரணடு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும்.
11. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.
உயிரமெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
12. எவையெவை குற்றியலுகரச் சொற்கள் இல்லை?
- வ் என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
- மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.
மொழியை ஆள்வோம்
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.
கோதை கவிதையைப் படித்தாள்
வினா | அழுத்தம் தர வேண்டிய சொல் |
கோதை எதைப் படித்தாள்? | எதைப் |
கவிதையைப் படித்தது யார்? | யார் |
கோதை கவிதையை என்ன செய்தாள்? | என்ன |
படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக
உயர்திணை – ஆண்பால் | அஃறிணை – ஒன்றன்பால் | உயர்திணை – பெண்பால் |
கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.
வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்
உயர்திணை
முகிலன், கயல்விழி, தலைவி, ஆசிரியர் சுரதா
அஃறிணை
வயல், குதிரை, கடல், புத்தகம், மரம்
தொகைச் சொற்களை விரித்து எழுதுக.
1. இருதிணை
விடை : உயர்திணை, அஃறிணை
2. முக்கனி
விடை : மா, பலா, வாழை
3. முத்தமிழ்
விடை : இயல், இசை, நாடகம்
4. நாற்றிசை
விடை : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
5. ஐவகைநிலம்
விடை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
6. அறுசுவை
விடை : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு
கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.
இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
1. அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.
2. மழலை பேசும் மொழி அழகு.
இனிமைத் தமிழ் மொழி எமது.
3. அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை நடை பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி நடை.
4. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்
எழுத்துகள் தொடர்ந் து நின்று பொருள் தருவது சொல்
5. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர்.
குழந்தையை மெதுவாக நட என்போம்.
6. நீதி மன்றத்தில் கொடுப்பது வழக்கு.
நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு வழக்கு
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
- ஊடகம் – Media
- பருவ இதழ் – Magazine
- மொழியியல் – Linguistics
- பொம்மலாட்டம் – Puppetry
- ஒலியியல் – Phonology
- எழுத்திலக்கணம் – Orthography
- இதழியல் – Journalism
- உரையாடல் – Dialogue