Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 2.1 – காடு

பாடம் 2.1 காடு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 2.1 – “காடு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

 

சொல்லும் பொருளும்

  • ஈன்று – தந்து
  • களித்திட – மகிழ்ந்திட
  • கொம்பு – கிளை
  • நச்சரவம் – விடமுள்ள பாம்பு
  • அதிமதுரம் – மிகுந்த சுவை
  • விடுதி – தங்கும் இடம்
  • தீபம் – ஒளி

பாடலின் பொருள்

கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களைத் தரும். காய்கனிகளையும் தரும். எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழல் தரும். அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும்.

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். நரிக் கூட்டம் ஊளையிடும். மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும். பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.

நூல் வெளி

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் . பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர். அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இப்பாடல் தேன்மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

தெரிந்து தெளிவோம்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

காகால்கான்
அடவிஅரண்ஆரணி
பொற்றைபொழில்தில்லம்
அழுவம்பழவம்முளரி
வியல்வனம்முதை
இறும்புசுரம்பொச்சை
பதுக்கைமுளிகணையம்
அரில்கானகம்இயவு
மிளைபுரவுவல்லை
பொதிஅறல்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வாழை, கன்றை ________.

  1. ஈன்றது
  2. வழங்கியது
  3. கொடுத்தது
  4. தந்தது

விடை : ஈன்றது

2. காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. காடு + டெல்லாம்
  2. காடு + எல்லாம்
  3. கா + டெல்லாம்
  4. கான் + எல்லாம்

விடை : காடு + எல்லாம்

3. கிழங்கு + எடுக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

  1. கிழங்குஎடுக்கும்
  2. கிழங்கெடுக்கும்
  3. கிழங்குடுக்கும்
  4. கிழங்கொடுக்கும்

விடை : கிழங்கெடுக்கும்

நயம் அறிக

பாடலிலுள்ள மோனை , எதுகை , இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனைச் சொற்கள்

கார்த்திகை – காடெல்லாம்பார்த்திட – பார்வை
காடு – காய்கனிகுரங்கு – குடியிருக்கும்
ச்சை – ன்றிசிங்கம் – சிறுத்தை

எதுகைச் சொற்கள்

குங்கு – மங்கள்சிங்கம் – எங்கும்
கார்த்திகை – பார்த்திடபார்த்திட – பார்வை
ளித்திடவே – குளிர்ந்திடவே

இயைபுச் சொற்கள்

குடியிருக்கும்ஈன்றெடுக்கும்
நிழல் கொடுக்கும்தடையிருக்கும்
பொருள்கொடுக்கும்

குறு வினா

1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?

காட்டுப்பூக்களுக்கு கார்த்திகை விளக்கை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்

2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

  • காட்டில் உள்ள மலர்களைக் காணும் போது கண்கள் குளிர்ச்சி பெறும்.
  • காடு பலவகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும்.
  • எல்லோரும் சேர்ந்து மகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
  • காட்டு விலங்குகளுக்கு உணவாக கனி தரும்.

சிறு வினா

‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.

  • பன்றிகள் காட்டிலுள்ள கிழங்கை தோண்டி உண்ணும்.
  • நரிக்கூட்டம் ஊளையிடும்.
  • மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
  • இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.

சிறு வினா

காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?

பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத் தேவையான உறையுள் (தங்குமிடம்) – உணவு ஆகியன காட்டில் இயற்கையாகவே உள்ளன.

மரங்கள், செடி கொடிகள் ஆகியன பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்குத் தங்குமிடம் உணவை இயற்கை அன்னையே வழங்குவதால் காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. இராசகோபாலன் என்ற இயற்பெயர் கவிஞர் __________________

  1. பாரதியார்
  2. உடுமலை நாராயணகவி
  3. சுரதா
  4. கவிமணி

விடை : சுரதா

2. உவமைக்கவிஞர் என்றழைக்கப்படக் கூடிய கவிஞர் __________________

  1. பாரதியார்
  2. சுரதா
  3. உடுமலை நாராயணகவி
  4. கவிமணி

விடை : சுரதா

3. தேன்மழை, துறைமுகம், அமுதும் தேனும் முதலிய நூல்களைப் படைத்த கவிஞர் ___________

  1. சுரதா
  2. பாரதியார்
  3. உடுமலை நாராயணகவி
  4. கவிமணி

விடை : சுரதா

4. கார்த்திகை விளக்குள் போன்று இருந்தவை _________

  1. காடு
  2. கானகம்
  3. மலர்கள்
  4. மயில்

விடை : மலர்கள்

5. _________ குயில் கூவுமடி! பாடலடியில் இடம் பெறும் தகுந்த சொல்லால் நிரப்புக

  1. கருங்
  2. மணிக்
  3. சிறு
  4. பூங்

விடை : பூங்

6. புது நடைபோட்டது எது?

  1. யானை
  2. பன்றி
  3. பாம்பு
  4. குரங்கு

விடை : யானை

பொருத்துக

1. அதிமதுரம்மகிழ்ந்திட
2. களித்திடமிகுந்த சுவை
3. கொம்புதந்து
4. ஈன்றுகிளை
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1. மயில்கள்கிழங்குகளைத் தோண்டி உண்ணும்
2. பன்றிகள்கலக்கமடையும்
3. பாம்புகள்புதிய நடை போடும்
4. யானைகள்நடனமாடும்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _________ , _________ நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தரும்

விடை : காடும், கடலும்

2. உவமைகளைப் பயன்படுத்தி கவிதை எழுதுவதில் வல்லவர் _________

விடை : சுரதா

3. காடு என்னும் கவிதை அமைந்துள்ள நூல் _________

விடை : சுரதாவின் கவிதைகள்

4. சுரதாவின் கவிதைகள் என்ற நூலில் காடு என்னும் கவிதை அமைந்த பகுதி _________

விடை : இயற்கை எழில்

5. காடு என்ற கவிதை அமைந்த பாவகை _________

விடை : கிளிக்கண்ணி

6. நரிக்கூட்டம் _________

விடை : ஊளையிடும்

குறு வினா

1. கிளிக்கண்ணி என்னும் பாவகை குறித்து எழுதுக.

கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

2. காட்டின் வளேம நாட்டின் வளம் எனக் கவிஞர் கூறக் காரணம் யாது?

ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால் தான் “காட்டின் வளமே நாட்டின் வளம்” என அறிஞர்கள் கூறுகின்றனர்.

3. சுரதா என்பதன் பெயர்க்காரணம் கூறுக?

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதாசனின் மீது பற்று கொண்டவர். பாரதிதாசனின இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்காெண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

4. உவமைக் கவிஞர் என சுரதாவை அழைக்க காரணம் கூறுக.

உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் எனறும் அழைப்பர்.

5. சுரதாவின் படைப்புகள் யாவை?

  • தேன் மழை
  • துறைமுகம்
  • அமுதும் தேனும்

6. பறவைகளின் செயல்களாக கவிஞர் காடு பாடலில் கூறுவனவற்றை எழுதுக.

  • பச்சை நிறமுடைய மயில்கள் நடனமாடும்
  • பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும்.

7. இயற்கைத் தங்குமிடம் எது?

இயற்கைத் தங்குமிடம் காடு

8. எங்கும் திரியுமடீ! இதில் திரிந்தவை எவை?

சிங்கம், புலி, கரடி, சிறுத்தை

சிறு வினா

1. கவிஞர் சுரதா பற்றி குறிப்பு எழுதுக

  • சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
  • இவர் பாரதிதாசனின் மீது பற்று கொண்டவர்.
  • பாரதிதாசனின இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்காெண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.
  • உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் எனறும் அழைப்பர்.
  • அமுதும் தேனும், தேன் மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

2. கவிஞர் சுரதா தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?

தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது தமிழ் எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment