Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 2.2 – அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

பாடம் 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 2.2 – “அப்படியே நிற்கட்டும் அந்த மரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

 • பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
 • துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்

நூல் வெளி

 • ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.
 • கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
 • “ராஜமார்த்தாண்டன் கவிதைகள்” என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.
 • சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து “கொங்கு தேர்வாழ்க்கை” என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
 • இவரது அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.

 1. பச்சை இலை
 2. கோலிக்குண்டு
 3. பச்சைக்காய்
 4. செங்காய்

விடை : கோலிக்குண்டு

2. சுட்ட பழங்கள் என்று குறிப்பிடப்படுபவை _____.

 1. மண் ஒட்டிய பழங்கள்
 2. சூடான பழங்கள்
 3. வேகவைத்த பழங்கள்
 4. சுடப்பட்ட பழங்கள்

விடை : மண் ஒட்டிய பழங்கள்

3. பெயரறியா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

 1. பெயர + றியா
 2. பெயர் + ரறியா
 3. பெயர் + அறியா
 4. பெயர + அறியா

விடை : பெயர் + அறியா

4. மனமில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

 1. மன + மில்லை
 2. மனமி + இல்லை
 3.  மனம் + மில்லை
 4. மனம் + இல்லை

விடை : மனம் + இல்லை

5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

 1. நேற்றுஇரவு
 2. நேற்றிரவு
 3. நேற்றுரவு
 4. நேற்இரவு

விடை : நேற்றிரவு

குறு வினா

1. நாவல் மரம் எத்தனை தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது?

நாவல் மரம் இரண்டு தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது

2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், அணில், காற்று

சிறு வினா

நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

 • ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்போது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கிறது.
 • அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
 • பளபளக்கும் பச்சை இலைகளுடன் கருநீலக்கோலிக்குண்டுகள் போல் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.
 • காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், அணில், காற்று அகியன உதிர்த்து விடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
 • தங்கைகள் தங்கள் அக்காளுக்க்காக கையில் பெட்டியுடன் நாவல் பழம் பொறுக்குகின்றனர்.
 • இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வெளவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.
 • அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில் தான்.

சிந்தனை வினா

நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

 • பெருங்காற்றினால் நாவல்மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர் மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.
 • குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை.
 • அந்த மரம் கவிஞர் நினைவில் வாழ்கின்றது.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சிறந்த கவிதைகளைத் தொகுத்த கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்த கவிஞர் ______________

 1. கவிமணி
 2. சுரதா
 3. ராஜமார்த்தாண்டன்
 4. உடுமலை நாராயணகவி

விடை : ராஜமார்த்தாண்டன்

2. ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றவர் ______________

 1. உடுமலை நாராயணகவி
 2. ராஜமார்த்தாண்டன்
 3. கவிமணி
 4. சுரதா

விடை : ராஜமார்த்தாண்டன்

3. ஊரின் வடகோடியில் இருந்த மரம் ______________

 1. புளியமரம்
 2. நாவல்மரம்
 3. அரசமரம்
 4. மாமரம்

விடை : நாவல்மரம்

4. தாத்தா நட்டு வைத்த மரம் ______________

 1. புளியமரம்
 2. அரசமரம்
 3. மாமரம்
 4. நாவல்மரம்

விடை : நாவல்மரம்

5. “கொல்லிப்பாவை” என்னும் சிற்றிதழை நடத்தியவர் ______________

 1. உடுமலை நாராயணகவி
 2. கவிமணி
 3. ராஜமார்த்தாண்டன்
 4. சுரதா

விடை : ராஜமார்த்தாண்டன்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே ____________

விடை : மரங்கள்

2. ஊரின் வடகோடியில் இருந்த மரம் ____________

விடை : நாவல் மரம்

3. இரவில் படையெடுத்து வரும் பழந்தின்னி ____________

விடை : வெளவால் கூட்டம்

4. அப்படிேய நிற்கட்டும் அந்த மரம் –  என்ற நூலை இயற்றியவர் ____________

விடை : ராஜமார்த்தாண்டன்

பொருத்துக

1. பரவசம்துக்கம் விசாரித்தல்
2. துஷ்டி கேட்டல்விரவி
3. பரவிஎல்லை
4. கோடிமகிழ்ச்சிப்பெருக்கு
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

பிரித்து எழுதுக

 1. தானிருந்து = தான் + இருந்து
 2. கருநீலம் = கருமை + நீலம்
 3. பெயரறியா = பெயர் + அறியா
 4. நிலவொளி = நிலவு + ஒளி
 5. பழந்தின்னி = பழம் + தின்னி
 6. நேற்றிரவு = நேற்று + இரவு
 7. மனமில்லை = மனம் + இல்லை

குறு வினா

1. நாவல்மரம் தோற்றம் குறித்துக் கவிஞர் கூறுவன யாவை

ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்போது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கிறது.

2. சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்க காரணம் யாது?

அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

3. எப்போது நாவில் நீர் ஊறும்?

பளபளக்கும் பச்சை இலைகளுடன் கருநீலக் கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.

4. சிறுவர் கூட்டம் அலைமோதக் காரணம் யாது?

காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், அணில், காற்று ஆகிய உதிர்த்துவிடும் நாவல் பழங்களை பொறுக்கு சிறுவர் கூட்டம் அலைமோதும்.

5. தங்கைகள் யாருக்காக நாவல் பழங்களை பொறுக்குகின்றனர்?

தங்கைககள் தங்கள் அக்காளுக்காகக் கையில் பெட்டியுடன் நாவற்பழங்களை பொறுக்குகின்றன.

6. இரவில் நேரத்தில் நாவல் மரத்தை நோக்கிப் படையெடுத்தது எது? ஏன்?

இரவில் நேரத்தில் நாவல் மரத்தை நோக்கிப் படையெடுத்தது வெளவால் கூட்டங்கள். அவை நாவல்பழத்திலுள்ள பழங்களை தின்ன படை எடுத்தன.

குறு வினா

கவிஞர் ராஜமார்த்தாண்டன் – குறிப்பு வரைக

 • ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.
 • கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
 • ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.
 • சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்கு தேர்வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment