Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 2.3 – விலங்குகள் உலகம்

பாடம் 2.3 விலங்குகள் உலகம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 2.3 – “விலங்குகள் உலகம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ____.

 1. காது
 2. தந்தம்
 3. கண்
 4. கால்நகம்

விடை : தந்தம்

2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.

 1. வேடந்தாங்கல்
 2. கோடியக்கரை
 3. முண்டந்துறை
 4. கூந்தன்குளம்

விடை : முண்டந்துறை

3. காட்டாறு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

 1. காடு + ஆறு
 2. காட்டு + ஆறு
 3. காட் + ஆறு
 4. காட் + டாறு

விடை : காடு + ஆறு

4. அனைத்துண்ணி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

 1. அனைத்து + துண்ணி
 2. அனை + உண்ணி
 3. அனைத் + துண்ணி
 4. அனைத்து + உண்ணி

விடை : அனைத்து + உண்ணி

5. நேரம் + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

 1. நேரமாகி
 2. நேராகி
 3. நேரம்ஆகி
 4. நேர்ஆகி

விடை : நேரமாகி

6. வேட்டை + ஆடிய என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

 1. வேட்டைஆடிய
 2. வேட்டையாடிய
 3. வேட்டாடிய
 4. வேடாடிய

விடை : வேட்டையாடிய

கோடிட்ட இடத்தை நிரப்புக

1.  காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு _________________

விடை : புலி

2. யானைக் கூட்டத்திற்கு ஒரு _________________ யானைதான் தலைமை தாங்கும்.

விடை : பெண்

3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் _________________

விடை : உடலைப் போர்த்தியிருக்கும் அடர்ந்த முடிகள்

குறு வினா

1. காடு – வரையறுக்க.

 • மனித முயற்சியின்றி வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள், புல், புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் தான் இக்காடாகும்.
 • இடை இடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.
 • மனிதனின் முதல் இருப்பிடம் காடு.

2. யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?

யானைகள் பொதுவாக மனிதர்க்ளைத் தாக்குவது இல்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன. மேலும் யானைக்குக் கண்பார்வை குறைவு; கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.

3. கரடி ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுவது ஏன்?

கரடி பழங்கள், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான்கள் என ஆகியவற்றை உண்பதால் ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகிறது

4. மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக

புள்ளிமான், சருகுமான், மிளாமான், வெளிமான்

சிறு வினா

புலிகள் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.

 • புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை.
 • ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழு ம் . மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.
 • கருவுற்ற புலியானது தொண்ணூறு நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும்.
 • குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும். அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும்.

சிந்தனை வினா

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.

 • மண் வளம் குறையும்.
 • மண் தரிசு நிலமாக மாறிவிடும்.
 • காட்டுயிரிகள் வாழ்விடம் அழியும்.
 • குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
 • உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
 • மண் வளம் சேர்க்கும் நுண்ணியிரிகள் அழியும்.
 • மண்ணரிப்பு ஏற்படும்.
 • நோய் தீர்க்கும் மூலிகைகள் அழியும்.
 • பருவநிலை மாறும்.
 • புவி வெப்பமயமாகும்.
 • நிலத்தடி நீர் குறையும்.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழ் நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம் ………………………..

விடை : மேட்டுப்பாளையம்

2. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ………………………..

விடை : கோவை

3. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் ……………………….. ஆகும்

விடை : முண்டந்துறை

4. உலகில் உள்ள யானை வகைகள் ………………………..

விடை : இரண்டு

5. கேட்கும் ஆற்றலும், மோப்ப ஆற்லும் மிகுதியாக உள்ள விலங்கு ………………………..

விடை :  யானை

6. நன்கு வளர்ந்த கரடியின் எடை …………………….. கிலோ

விடை : 160

7. ……………………….. என்றழைக்கப்படும் விலங்கு புலி

விடை : பண்புள்ள விலங்கு

8. அழகில் சிந்த மான் வகை ………………………..

விடை : புள்ளிமான்

9. இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசனாக குறிப்பிடும் விலங்கு ………………………..

விடை : புலி

10. காட்டு விலங்குகளுக்கு ……………………….. தருவது சட்டப்படி குற்றமாகும்

விடை : துன்பம்

11. மனிதனின் முதல் இருப்பிடம் ………………………..

விடை : காடு

குறு வினா

1. முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றி எழுதுக

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் ஆகும். 895 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு போன்ற அரியவகை விலங்கள் வாழ்கின்றன.

2. முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வாழும் அரிய விலங்குகள் யாவை?

யானை, புலி, சிறுத்தை, மான, கரடி, காட்டுமாடு

3. உலகில் யானை வகைகள் எத்தனை? அவை யாவை?

உலகில் இரணடு வகையான யானைகள் உள்ளன.

 • ஆசிய யானை
 • ஆப்பிரிக்க யானை

4. ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை வேறுபடுத்துக

ஆசிய யானை

ஆசிய ஆண் யானைக்கு தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை

ஆப்பிரிக்க யானை

ஆண், பெண் யானைகள் இரண்டுக்குமே தந்தம் உண்டு.

4. காட்டின் வளத்தை குறிக்கும் குறியீடு எது?

காட்டின் வளத்தை குறிக்கும் குறியீடு புலி

5. புலியினை பண்புள்ள விலங்கு எனக் கூறக்காரணம் யாது?

புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவது இல்லை. எனவே , அதனைப் பண்புள்ள விலங்கு என்று நாங்கள் கூறுவோம்.

6. வனவியல் சார்ந்த படிப்புகள் யாவை? அவை எங்குள்ளன?

 • வனவியல் சார்ந்த படிப்புகள் இளநிலை வனவியல், முதுநிலை வனவியல் ஆகும்.
 • கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அவை கற்பிக்கப்படுகின்றன.

7. புலியை காட்டிற்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறக் காரணம்யாது?

 • நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது.
 • எனவே புலியை காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சிறு வினா

யானை குணநலன்கள் பற்றி கூறுக

 • யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.
 • யானைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு ஆகியவற்றிற்காக இடம் பெயர்நது கொண்டே இருக்கும்.
 • ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவாக உட்கொள்ளும். அதற்குக் குடிக்க 65 லிட்டர் தண்ணீர தேவைப்படும்.
 • யானை மிகுந்த நினைவாறறல் கொண்ட விலங்கு. அது பாசம் நிறைந்த விலங்கும் கூட.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment