பாடம் 3.2 பாஞ்சை வளம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 3.2 – ” பாஞ்சை வளம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- சூரன் – வீரன்
- வாரணம் – யானை
- பொக்கிஷம் – செல்வம்
- பரி – குதிரை
- சாஸ்தி – மிகுதி
- சிங்காரம் – அழகு
- விஸ்தாரம் – பெரும்பரப்பு
- கமுகு – பாக்கு
பாடலின் பொருள்
குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்யும் பாஞ்சாலங்குறிச்சியின் வளங்களைக் கூறுகின்றேன்.
அந்நாட்டின் வளத்தையும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வளத்தையும் கேளுங்கள். அந்நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.
வீடுகள்தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடிவீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும்.
அரண்மனை வாயில் முறைப்படி அழகுபடுத்தப்பட்டு இருக்கும். அழகு மிகுந்த அரசனாகிய கட்டபொம்மன் அரசவையில் வீற்றிருப்பான்.
புதுமையான தெருவீதிகளும் பெரும்பரப்பில் அமைந்த கடைகளும் இருக்கும். பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும்.
யானைக் கூடமும் குதிரைக் கொட்டிலும் ஒருபுறம் இருக்கும். தோரணங்கள் கட்டப்பட்ட மேடையும் தாயம் ஆடுவதற்கான இடமும் ஒருபுறம் இருக்கும்.
சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும் அன்பு வளரும் நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் நிகழும் சில விந்தைகளைச் சொல்கிறேன்.
வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும். பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது.
சக்கமாதேவி பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருவாக்கு அருள்வாள்.
நூல் வெளி
- கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
- நம் பாடப்பகுதி நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஊர்வலத்தின் முன்னால் ………………. அசைந்து வந்தது.
- தோரணம்
- வானரம்
- வாரணம்
- சந்தனம்
விடை : வாரணம்
2. பாஞ்சாலங்குறிச்சியில் ………………. நாயை விரட்டிடும்,
- முயல்
- நரி
- பரி
- புலி
விடை : முயல்
3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ………………..
- மெத்தை விரிக்கப்பட்ட வீடு
- படுக்கையறை உள்ள வீடு
- மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
- மாடி வீடு
விடை : மாடி வீடு
4. பூட்டுங்கதவுகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
- பூட்டு + கதவுகள்
- பூட்டும் + கதவுகள்
- பூட்டின் + கதவுகள்
- பூட்டிய + கதவுகள்
விடை : பூட்டும் + கதவுகள்
5. தோரணமேடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
- தோரணம் + மேடை
- தோரண + மேடை
- தோரணம் + ஒடை
- தோரணம் + ஓடை
விடை : தோரணம் + மேடை
6. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
- வாசல்அலங்காரம்
- வாசலங்காரம்
- வாசலலங்காரம்
- வாசலிங்காரம்
விடை : வாசலலங்காரம்
பொருத்துக.
1. பொக்கிஷம் | அழகு |
2. சாஸ்தி | செல்வம் |
3. விஸ்தாரம் | மிகுதி |
4. சிங்காரம் | பெரும் பரப்பு |
விடை : 1 – அ, 2 – இ, 3 – ஈ, 4 – அ |
குறு வினா
1. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.
பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.
2. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.
சிறு வினா
1. பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள்தோறும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேரத்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தாகவும் இருக்கும்.
2. பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.
- வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னை பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும்.
- பசுவும், புலியும் நீர்நிலையின் ஒரே பக்கம் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
- மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.
சிந்தனை வினா
நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் என்ன?
- மாவீரன் கட்டபொம்மன் வீரம் நிறைந்தவர்.
- அஞ்சா நெஞ்சினர்
- ஆங்கிலேய உயர் அதிகாரிகளை நேருக்கு நேராக தன் நாட்டு உரிமைக்கா எதிர்த்தவர். ஆகிய காரணத்தினாலும் மக்கள் மனதில் வீரம் நிறைந்தவராக இடம் பிடித்திருப்பதாலும் நாட்டுப் புறக்கதைப் புறக்கதைப் பாடல்களில கட்டபொம்மன் பெரிதும் புகழப்படுகின்றார்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடலை தொகுத்து நூலாக வெளியிட்டவர்
- க. சண்முக சுந்தரம்
- அன்னகாமு
- சண்முகசுந்தரம்
- நா.வானமாமலை
விடை : நா.வானமாமலை
2. குறையில்லா வீரன் ______
- ஆங்கிலேயன்
- மருதுசகோதரர்கள்
- கட்டபொம்மன்
- அன்னகாமு
விடை : கட்டபொம்மன்
3. கட்டபொம்மனின் நாடு ______
- பாஞ்சாலங்குறிச்சி
- மதுரை
- செஞ்சி
- பாளையங்கோட்டை
விடை : பாஞ்சாலங்குறிச்சி
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. வீடுகள்தோறும் மணிகளால் அழகு செய்யப்பட்ட ______ இருக்கும்.
விடை : மேடைகள்
2. ______, ______ நீர்நிலையின் ஒரே பக்கம் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
விடை : பசுவும், புலியும்
3. பாஞ்சை என்ற அழைக்கப்படும் நாடு ______
விடை : பாஞ்சாலங்குறிச்சி
II. பிரித்து எழுதுக
- மதிலோடை = மதில் + ஓடை
- முனையுள்ள = முனை + உள்ள
- வரந்தருவாளே = வரம் + தருவாளே
- வாக்கருள் = வாக்கு + அருள்
- வளர்ந்தேறும் = வளர்ந்து + ஏறும்
III. எதிர்ச்சொல்
- வீரன் x கோழை
- மிகுதி x குறைவு
- புதுமை x பழமை
- குறை x நிறை
IV. வினாக்கள்
1. குயில்கள் எங்கு கூவும்? மயில்கள் எதைக் கூறி விளையாடும்?
- சோலைகளில் குயில்கள் கூவும்.
- மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.
2. பாஞ்சாலக்குறிச்சிக்கு அழகு சேரப்பன எது?
பூஞ்சோலைகளும், சந்தன மரச் சோலைகளும், ஆறுகளும், நெல் வயல்களும், பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலக்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.
3. பசு மற்றும் புலியின் செயல் யாது?
பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால் போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
4. எவ்வெற்றுக்கெல்லாம் பாஞ்சாலக்குறிச்சியில் இடங்கள் இருந்தன?
- யானைக்கூடம்
- தோரணங்கள் கட்டப்பட்ட மேடை
- குதிரைக் கொட்டில்
- தாயம் ஆடுவதற்கான இடம்