Class 7th Tamil | Lesson 3.3 – தேசியம் காத்த செம்மல்

தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்)

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 3.3 – “தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்)” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.

  1. தூத்துக்குடி
  2. காரைக்குடி
  3. சாயல்குடி
  4. மன்னார்குடி

விடை : சாயல்குடி

2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் _____.

  1. இராஜாஜி
  2. நேதாஜி
  3. காந்திஜி
  4. நேருஜி

விடை : நேதாஜி

3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் _____.

  1. இராஜாஜி
  2. பெரியார்
  3. திரு.வி.க
  4. நேதாஜி

விடை : திரு.வி.க

குறு வினா

1. முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?

வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர்.

உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி – என்று முத்தராமலிங்கத் தேவரை பெரியார் பாராட்டியுள்ளார்.

2. முத்துராமலிங்கத் தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்படக் காரணம் யாது?

  • முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார்.
  • அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்தனர்
  • இதனால் அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்துள்ளது
  • மேலும், வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்கு தடை விதித்தது.

3. முத்துராமலிங்கத் தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.

முத்துராமலிங்கத் தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்

சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறைகளில் ஆற்றல் உடையவராக விளங்கினார்

சிறு வினா

1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத் தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.

  • நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
  • அவரைத் தமது அரசியல் குருவாக ஏறறுக்கொண்டார்.
  • முத்துராமலிங்கத் தேவரின் அழைப்பை ஏற்றுக் 06.09. 1939 ஆம் ஆண்டு
    நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
  • நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத் தேவரின் முயற்சி ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.
  • விடுதலைக்கு பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்.

2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத் தேவர் செய்த தொண்டுகள் யாவை? 

1938 கால கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழ்ந்தார்.

மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவனாந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.

பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்.

சிந்தனை வினா

சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

  • உரிமைக்காகப் போராடுதல்
  • மக்கள் நலம் காத்தல்
  • பொதுநல வாழ்வு
  • பேச்சாற்றல்
  • சாதி, மதம், இனம், மொழி ஆகியவை பாராமை
  • ஒழுக்கம் காத்தல்
  • பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல்
  • மனிதநேயம்
  • நாட்டுப்பற்று
  • தியாக உணர்வு

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தந்தைப் பெரியாரால் “சுத்தத் தியாகி” என்று பாராட்டப்பட்டவர் ……………..

  1. முத்துராமலிங்கத்தேவர்
  2. நேதாஜி
  3. திரு.வி.க
  4. காந்தி ஜி

விடை : முத்துராமலிங்கத் தேவர்

2. முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஊர் ……………..

  1. மதுரை
  2. கோவை
  3. சென்னை
  4. பசும்பொன்

விடை : பசும்பொன்

3. முத்துராமலிங்கத்தேவர் தொடக்க கல்வி பயின்ற இடம் ……………..

  1. மதுரை
  2. பசும்பொன்
  3. சென்னை
  4. கமுதி

விடை : கமுதி

4. முத்துராமலிங்கத்தேவர் படித்துக் கொண்டிருந்தபோது பரவிய நோய் ……………..

  1. காரா
  2. பிளேக்
  3. மலேரியா
  4. மஞ்சள் காமாலை

விடை : பிளேக்

5. வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட தலைவர் ……………..

  1. பாலகங்காதர திலகர்
  2. நேதாஜி
  3. திரு.வி.க
  4. காந்தி ஜி

விடை : பாலகங்காதர திலகர்

6. வங்கச்சிங்கம் என்று போற்றப்படுவர் ……………..

  1. பாலகங்காதர திலகர்
  2. நேதாஜி
  3. திரு.வி.க
  4. காந்தி ஜி

விடை : நேதாஜி

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. முத்துராமலிங்கத் தேவர் ……………… , ……………… ஆகிய இரு மொழியிலும் சொற்ப்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்

விடை : தமிழ், ஆங்கிலம்

2. நேதாஜி மதுரைக்கு வந்த ஆண்டு ………………

விடை : 1939

3. ஆங்கிலேய ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் ………………

விடை : குற்றப்பரம்பரைச்சட்டம்

4. முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு ………………

விடை : நேதாஜி சுபாஷ் சந்திர போசு

5. ……………… என்று போற்றப்பட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசு

விடை : வங்கச்சிங்கம்

குறு வினா

1. முத்துராமலிங்கத்தேவர் எங்கு பிறந்தார்?

முத்துராமலிங்கத்தேவர் கி.பி.(பொ.ஆ.பி) 1908 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முப்பதாம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில்
பசும்பொன் என்னும் ஊரில் பிறந்தார்.

2. முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் யாவர்?

முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் உக்கிர பாண்டியத்தேவர் – இந்திராணி அம்மையார்.

3. முத்துராமலிங்கத்தேவர் படிப்பு பாதியில் நின்றதற்கு காரணம் யாது?

முத்துராமலிங்கத்தேவர் படித்துக் கொண்டிருந்தபோது அவ்வூரில் பிளேக் நோய் பரவியதால் அவரது படிப்பு பாதியில் நின்றது.

4. முத்துராமலிங்கத்தேவர் மக்கள் தொண்டு செய்தது எப்படி?

முத்துராமலிங்கத் தேவர் தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தார்.

5. முத்துராமலிங்கத்தேவர் பல்துறை ஆற்றல் பற்றி எழுதுக?

முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய  இரு மொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச்சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பலதுறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார். முத்துராமலிங்கத்தேவர் இளமையிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார்

6. முத்துராமலிங்கத்தேவர் பெற்றுள்ள ஆற்றல் யாவை?

சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறைகளில் ஆற்றல் உடையவராக விளங்கினார்

7. முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் உரையாற்றிய தலைப்பு எது?

முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் உரையாற்றிய தலைப்பு விவேகானந்தரின் பெருமை என்பதாகும்

8. முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்ட இடங்கள் எவை?

அலிப்பூர்,  அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர்

9. குற்றப்பரம்பரைச் சட்ட மாநாடு எதிராக முத்துராமலிங்கத்தேவர் செய்த போராட்டம் பற்றி கூறு

  • ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது குற்றப் பரம்பரைச் சட்டம் ஆகும்.
  • பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் அச்சட்டத்தை நீக்குவதற்காக மக்களைத் திரட்டிப் பல்வேறு போராட்டங்களை நடத்தினார் முத்துராமலிங்கத் தேவர்.
  • 1934 ஆம் ஆண்டு மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார் .
  • அவரது தொடர் போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது.

10. முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள் யாவை?

தேசியம் காத்த செம்மல், வித்யா பாஸ்கர், பிரவசன கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்தசமய மேதை.

11. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சினை எவ்வாறு வட இந்திய இதழ்கள் பாராட்டின?

பாராளுமன்றத்தில் இவர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின.

12. முத்துராமலிங்கத்தேவரை மூதறிஞர் இராஜாஜி எவ்வாறு கூறியுள்ளார்?

‘முத்துராமலி ங்கத் தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது; உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம்’ என்று மூதறிஞர் இராஜாஜி பாராட்டியுள்ளார்.

13. முத்துராமலிங்கத்தேவர் விவசாயிகள் தோழர் என கூறக் காரணம் யாது?

ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகள் துயர்துடைக்கப் பாடுபட்டார். உழுபவர்களுக்கே நிலம் என்றார். தமக்குச் சொந்தமாக 31 சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை குத்தகை இல்லாமல் உழுபவர்க்கே பங்கிட்டுக் கொடுத்தார். அவற்றை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அளித்து மகிழ்ந்தார்.

14. முத்துராமலிங்கத்தேவர் எந்தெந்த சிறைகளில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.?

முத்துராமலிங்கத்தேவர் அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா , சென்னை, வேலூர் போன்ற சிறைகளில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment