Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 3.4 – கப்பலோட்டிய தமிழர்

பாடம் 3.4 கப்பலோட்டிய தமிழர்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 3.4 – “கப்பலோட்டிய தமிழர்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

நூல் வெளி

  • இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்  பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
  • இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
  • செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.
  • இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.
  • ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
  • வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

மதீப்பிடு

வ.உ. சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.

முன்னுரை

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார். ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியர் வ.உ.சிதம்பரனார். அவரின் உரை வழி, அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக காண்போம்.

சுதேசக் கப்பல்

தூத்துக்குடியில் கொற்கை துறைமுகத்தில் முத்து வாணிகத்தில் நம்மவர் சிறந்திருந்தனர். கப்பல் வணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆதிக்கத்துப் பின்னர் கப்பல்களில் ஆங்கிலேயக் கொடி பறந்தது. நம்மவர் கூலிகளாக அக்கப்பலில் வேலை செய்தனர். இந்நிலையை மாற்ற பாண்டித்துரைத் தலைவராக கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார். இக்கப்பல் முதல் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது.

ஆங்கிலேயரின் அடக்குமுறை

சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத் தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரது நண்பர்களையும் பயமுறுத்தினர். அதற்கெல்லாம் கவலைப்படாமல் “வந்தேமாதரம்” என்ற முழக்கத்தை எழுப்பினார். இதனைக் கேட்ட மக்கள் விடுதலைக்கு ஆதரவாக ஊக்கம் அடைந்தனர். ஆங்கில அரசு வ.உ.சிதம்பரனாரைச் சிறையில் அடைத்தது.

வ.உ.சிதம்பரனாரின் தியாகம்

வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார். அவர் உடல் சலித்தது. உள்ளம் தளரவில்லை. சிறையதிகாரி வ.உ.சிதம்பரனாரிடம் அறிவரை கூற “உனக்கும் உன் கவர்னருக்கும் மன்னனுக்கும் புத்தி சொல்வேன்” என்றார். சிறையில் செக்கிழுத்தார். சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார். செந்தமிழும் கன்னித்தமிழும் கண்ணீரைப் போக்கியது.

தமிழ்ப்பற்றும் ஏக்கமும்

வ.உ.சிதம்பரனார் தொல்காப்பியம், இன்னிலை கற்றுத் தன் துன்பங்களை மறந்தார். ஆங்கிலத்தில் ஆலன் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை “மனம் போல் வாழ்வு” என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் முதலிய சிறு நூல்களைப் படைத்தார். சிறை வாழ்வு முடிந்து வ.உ.சிதம்பரனார் வெளியில் வந்தபோது தன் குழந்தைகளை கண்டு மகிழந்தார். ஆனால் கடற்கரையில் தன் ஆசைக்குழந்தை சுதேசக் கப்பலைக் காணாமல் வருத்தம் அடைந்தார் என்று நற்காலம் வருமே என்று ஏங்கினார்.

முடிவுரை

“பாயக் காண்பது சுந்திர வெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்

என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?” என்று உருக்கமாகப் பேசி கடற்கரையை விட்டு அகன்றார் வ.உ.சிதம்பரனார்.

கூடுதல் வினாக்கள்

1. சொல்லின் செல்வர் என்று போற்றப்படுபவர் ………………………..

  1. இராஜாஜி
  2. இரா.பி.சேது
  3. வ.உ.சி
  4. பாண்டித்துரையார்

விடை : இரா.பி.சேது

2. தமிழின்பன் என்னும் நூலை எழுதியவர் ……….

  1. வ.உ.சி
  2. இராஜாஜி
  3. இரா.பி.சேது
  4. பாண்டித்துரையார்

விடை : இரா.பி.சேது

3. இரா.பி.சேதுவின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ………………..

  1. ஆற்றங்கரையினிலே
  2. கடற்கரையினிலே
  3. தமிழ்விருந்து
  4. தமிழின்பம்

விடை : தமிழின்பம்

4. வ.உ.சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம்பாடப்பகுதி இரா.பி.சேதுவின் நூல் ………………..

  1. ஆற்றங்கரையினிலே
  2. கடற்கரையினிலே
  3. தமிழ்விருந்து
  4. தமிழின்பம்

விடை : கடற்கரையினிலே

5. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ………………..

  1. தமிழின்பம்
  2. ஆற்றங்கரையினிலே
  3. கடற்கரையினிலே
  4. தமிழ்விருந்து

விடை : தமிழின்பம்

5. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ………………..

  1. தமிழின்பம்
  2. ஆற்றங்கரையினிலே
  3. கடற்கரையினிலே
  4. தமிழ்விருந்து

விடை : தமிழின்பம்

6. “வசையொழிய வாழ்வாரே வாழ்வார்” என்ற வாய்மொழியை கூறியவர்?

  1. வ.உ.சி.
  2. பாண்டித்துரையார்
  3. வள்ளுவர்
  4. பாரதியார்

விடை : வள்ளுவர்

7. “சுதேசக் கப்பல் கம்பெனி தலைவர் …………….

  1. பாலகங்காதர திலகர
  2. பாரதியார்
  3. வ.உ.சி.
  4. பாண்டித்துரையார்

விடை : பாண்டித்துரையார்

8. “வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்று பாடியவர்?

  1. வ.உ.சி.
  2. சுரதா
  3. வள்ளுவர்
  4. பாரதியார்

விடை : பாரதியார்

9. “வந்தே மாதரம்” என்ற சுதேச மந்திரம் பிறந்த இடம் ………..

  1. வங்க நாடு
  2. தமிழ்நாடு
  3. மராட்டிய நாடு
  4. டெல்லி

விடை : வங்க நாடு

10. சுதந்தரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன் என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றவர் ……………

  1. பாலகங்காதர திலகர்
  2. பகத்சிங்
  3. நேதாஜி
  4. காந்தியடிகள்

விடை : பாலகங்காதர திலகர்

11. வ.உ.சி. …………….. என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் தமிழில் மொழிபெயர்த்தார்.

  1. சாலமோன்
  2. வாகன்
  3. ஆலன்
  4. வில்லியம்

விடை : ஆலன்

12. வ.உ.சி. நூலின் மொழிபெயர்த்த நூல் ………

  1. மனம் போல் வாழ்வு
  2. கால் போன பாதை
  3. வாழ்க்கை போராட்டம்
  4. கதையின் கதை

விடை : மனம் போல் வாழ்வு

13. “மெய்யறிவு, மெய்யறம்” என்ற சிறு நூல்களை இயற்றியவர்?

  1. சுரதா
  2. வள்ளுவர்
  3. வ.உ.சி.
  4. பாரதியார்

விடை : வ.உ.சி.

14. சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்ற கூற்றினை கூறியவர்

  1. ஆலன்
  2. பின்ஹேவ்
  3. சார்லஸ்
  4. மார்ஸ்

விடை : பின்ஹேவ்

15. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி

  1. சந்திரமோன்
  2. ஆலன்
  3. மார்க்முல்லர்
  4. பின்ஹேவ்

விடை : பின்ஹேவ்

குறு வினா

1. இரா.பி.சேது-வின் பெற்றுள்ள பன்முகத் திறன் யாவை?.

  • தமிழறிஞர்
  • எழுத்தாளர்
  • வழக்குரைஞர்
  • மேடைப்  பேச்சாளர்

2.  இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் எது?

சொல்லின் செல்வர் இரா.பி.சேது எழுதிய தமிழின்பம் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.

3. இரா.பி.சேது எழுதிய நூல்கள் யாவை?

  • ஆற்றங்கரையினிலே,
  • கடற்கரையினிலே
  • தமிழ் விருந்து
  • தமிழகம்- ஊரும் பேரும்
  • மேடைப்பேச்சு
  • தமிழின்பம்

சிறு வினா

இரா.பி.சேது – குறிப்பு வரைக

  • இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்  பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
  • இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
  • செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.
  • இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.
  • ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment