Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 4.1 – கலங்கரை விளக்கம்

பாடம் 4.1 கலங்கரை விளக்கம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 4.1 – “கலங்கரை விளக்கம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • மதலை – தூண்
  • சென்னி – உச்சி
  • ஞெகிழி – தீச்சுடர்
  • உரவுநீர் – பெருநீர்பரப்பு
  • அழுவம் – கடல்
  • கரையும் – அழைக்கும்
  • வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

பாடலின் பொருள்

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது; ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது; வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது. அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறைமுகம் அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது.

நூல் வெளி

  • கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
  • இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
  • இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
  • இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
  • வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

மதீப்பிடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வேயாமாடம் எனப்படுவது ____________

  1. வைக்கோலால் வேயப்படுவது
  2. சாந்தினால் பூசப்படுவது
  3. இலையால் வேயப்படுவது
  4. துணியால் மூடப்படுவது

விடை : சாந்தினால் பூசப்படுவது

2. உரவுநீர் அழுவம் இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ______.

  1. காற்று
  2. வானம்
  3. கடல்
  4. மலை

விடை : கடல்

3. கடலில் துறை அறியாமல் கலங்குவன ______.

  1. மீன்கள்
  2. மரக்கலங்கள்
  3. தூண்கள்
  4. மாடங்கள்

விடை : மரக்கலங்கள்

4. தூண் என்னும் பொருள் தரும் சொல் ______.

  1. ஞெகிழி
  2. சென்னி
  3. ஏணி
  4. மதலை

விடை : மதலை

குறுவினா

1. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?

மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது – கலங்கரை விளக்கின் ஒளி

2. கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?

கலங்கரை விளக்கில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்

சிறுவினா

கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.

  • கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண்போலத் தோற்றம் அளிக்கும்.
  • அது ஏணி கொண்டு ஏற முடியாத அளவுக்கு உயரத்தை கொண்டு இருக்கின்றது.
  • வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.
  • அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை (எல்லை) அறியாமல் கலங்கும் மரங்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைப்பது.

சிந்தனை வினா

கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

  • கடல் ஆய்வு செய்பவர்கள்
  • மீனவர்கள்
  • கப்பற்படை வீரர்கள்
  • கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் ……………….

  1. தொண்டைமான் இளந்திரையன்
  2. கடியலூர் உருத்திரங்கண்ணார்
  3. முடதாமக்கண்ணியார்
  4. நக்கீரர்

விடை : தொண்டைமான் இளந்திரையன்

2. பெரும்பாணாற்றும்படை மற்றும் பட்டினப்பாலை நூல்களின் ஆசிரியர் …………………..

  1. கடியலூர் உருத்திரங்கண்ணார்
  2. தொண்டைமான் இளந்திரையன்
  3. முடதாமக்கண்ணியார்
  4. நக்கீரர்

விடை : கடியலூர் உருத்திரங்கண்ணனார்

3. உருத்திரங்கண்ணனார் வாழ்ந்த ஊர் ………………….

  1. மதுரை
  2. புகார்
  3. கலங்கரை விளக்கம்
  4. கடியலூர்

விடை : கடியலூர்

4. கடலில் துறை அறியாமல் கலங்கும் …………………. தன்நோக்கி அழைப்பது கலங்கரை விளக்கம்

  1. மரக்கலங்களை
  2. கடற்கரை
  3. கடலலையை
  4. மக்களை

விடை : மரக்கலங்களை

5. கடலில் துறை அறியாமல் கலங்குவது ……………

  1. கடற்கரை
  2. மாடம்
  3. மரக்கலங்கள்
  4. கப்பல்

விடை : மரக்கலங்கள்

6. கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம் ……………

  1. கலங்கரை விளக்கம்
  2. கடற்கரை
  3. மாடம்
  4. கப்பல்

விடை : கலங்கரை விளக்கம்

7. வானம் ஊன்றிய மதலை போன்றது ……………

  1. கடற்கரை
  2. கலங்கரை விளக்கம்
  3. மாடம்
  4. கப்பல்

விடை : கலங்கரை விளக்கம்

பிரித்து எழுது

  1. மரக்கலங்கள் = மரம் + கலங்கள்
  2. பத்துப்பாட்டு = பத்து + பாட்டு
  3. முல்லைப்பாட்டு = முல்லை + பாட்டு
  4. அம்மாடத்தில் = அ + மாடத்தில்
  5. தீச்சுடர் = தீ + சுடர்

குறு வினா

1. கடியலூர் உருத்திரங்கண்ணனார் – குறிப்பு வரைக

  • கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்காலப்புலவர்.
  • இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தார்.
  • இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

2. பெரும்பாணாற்றுப்படை பற்றி நீ அறிந்தவற்றை எழுதுக

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
  • இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணார்.
  • இந்நூல் ஆற்றுப்படை இலக்கியம் சார்ந்தது.
  • தொண்டைமான் இளந்திரையன் இந்நூலின் பாட்டுடைத் தலைவன்

3. ஆற்றுப்படை இலக்கியம் என்றால் என்ன?

வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்

4. வேயா மாடம் பொருள் கூறுக

வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.

சிறு வினா

பத்துப்பாட்டு நூல்கள் யாவை?

திருமுருகாற்றுப்படைமதுரைக்காஞ்சி
பெருநாராற்றுப்படைநெடுநெல்வாடை
பெரும்பாணாற்றுப்படைகுறிஞ்சிப்பாட்டு
சிறுபாணாற்றுப்படைபட்டினப்பாலை
முல்லைப்பாட்டுமலைபடுகடாம்

 

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment