Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 5.1 – இன்பத்தமிழ்க் கல்வி

 பாடம் 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 5.1 – “இன்பத்தமிழ்க் கல்வி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • எத்தனிக்கும் – முயலும்
  • பரிதி – கதிரவன்
  • வெற்பு – மலை
  • அன்னதோர் – அப்படி ஒரு
  • கழனி – வயல்
  • கார்முகில் – மழைமேகம்
  • நிகர – சமம்
  • துயின்றிருந்தோர் – உறங்கியிருந்தார்

பாடலின் பொருள்

கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன். என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை மலர்களும் “எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக” என்றன. காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம்பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள் “அன்பினைக் கவிதையாக எழுதுக” என்றனர்.

சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்னம் வந்தது. மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்றகதிரவனும் வந்தான். வேல் ஏந்திய வீரர்கள், “மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள்” என்றனர். இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின.

ஆனால், துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி, என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். வீரம் வரும்.

நூல் வெளி

  • கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
  • இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.
  • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
  • பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

மதீப்பிடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது________.

  1. மயில்
  2. குயில்
  3. கிளி
  4. அன்னம்

விடை : மயில்

2. பின்வருவனவற்றுள் மலையைக் குறிக்கும் சொல்

  1. வெற்பு
  2. காடு
  3. கழனி
  4. புவி

விடை : வெற்பு

3. ஏடெடுத்தேன் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. ஏடெடு + தேன்
  2. ஏட்டு + எடுத்தேன்
  3. ஏடு + எடுத்தேன்
  4. ஏ + டெடுத்தேன்

விடை : ஏடு + எடுத்தேன்

4. ‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. துயின்று + இருந்தார்
  2. துயில் + இருந்தார்
  3. துயின்றி + இருந்தார்
  4. துயின் + இருந்தார்

விடை : துயின்று + இருந்தார்

5. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.

  1. என்றுஉரைக்கும்
  2. என்றிரைக்கும்
  3. என்றரைக்கும்
  4. என்றுரைக்கும்

விடை : என்றுரைக்கும்

பொருத்துக

1. கழனிகதிரவன்
2. நிகர்மேகம்
3. பரிதிசமம்
4. முகில்வயல்
விடை : 1 – ஈ, 2 -இ , 3 – அ, 4 – ஆ

குறு வினா

1. பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?

வானம், நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம், தென்றல், மயில், அன்னம், கதிரவன்

2. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?

தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள்

  • தமிழ்நாட்டு மக்கள் அறியாமை தூக்கம் களையும்
  • வாழ்வின் துன்பங்கள் நீங்கும்
  • நெஞ்சில் தூய்மை உண்டாகும்.
  • வீரம் வரும்

சிறு வினா

’இன்பத்தமிழ்க் கல்வி’ – பாடலின் மையக்கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.

  • பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது.
  • நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.
  • மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர்.
  • தென்றல், மயில், அன்னம், கதிரவன், வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின.
  • ஆனால் துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கொண்டு  இருக்கின்றார்கள்.
  • அதனை நீங்க இன்பத்தமிழ் கல்வி கற்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பம் நீங்கும்.
  • மனதில் தூய்மை உண்டாகும், வீரம் வரும்.

சிந்தனை வினா

தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

  • எளிதில் பொருள் விளங்கி நன்கு பாடப்புரிதல் ஏற்படும்.
  • பழந்தமிழ் கலை, பண்பாடு, மரபு ஆகியன காக்கப்படும்.
  • தொன்மையும், வரலாற்றையும் நன்கு உணரலாம்.
  • விழுமிய தமிழ்ச் சிந்தனைகளை அறியலாம்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும்

  • கவி – கவிதை, பாடல்
  • சித்திரம் – ஓவியம்
  • நிகர் – சமம், போல
  • இன்னல் – துன்பம்
  • ஆவி – உயிர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பாரதிதாசன் “சாகித்ய அகாடமி” விருது பெற்ற நூல் ………………..

  1. பாண்டியன்பரிசு
  2. பிசிராந்தையார்
  3. அழகின் சிரிப்பு
  4. குடும்பவிளக்கு

விடை : பிசிராந்தையார்

2. கதிரவனைக் குறிக்கும் சொல் ………………..

  1. பரிதி
  2. நிகர்
  3. முகில்
  4. கழனி

விடை : பரிதி

3. மேகத்தினைக் குறிக்கும் சொல் ………………..

  1. பரிதி
  2. நிகர்
  3. கழனி
  4. முகில்

விடை : முகில்

4. வீரர்களின் தோள்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ________________

  1. பரிதி
  2. மலை
  3. கழனி
  4. முகில்

விடை : மலை

5. பசுமையான தோகைகளை உடையது ……………..

  1. தாமரை
  2. சோலை
  3. பெண்கள்
  4. மயில்

விடை : மயில்

சேர்த்தெழுதுக

  1. எழுது + என்று = எழுதென்று
  2. என்று+ உரைக்கும் = என்றுரைக்கும்
  3. பெண்கள் + எல்லாம் = பெண்களெல்லாம்
  4. மேற்கு + திசை = மேற்றிசை
  5. வெற்பு + என்று = வெற்பென்று
  6. என்று+ உரைக்கும் = என்றுரைக்கும்

குறு வினா

1. என்னை கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது எது?

வானம் தன்னைக் கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது.

2. பாரதிதாசனிடம் கவி ஓவியமாகத் தங்களைத் தீட்டுமாறு கூறியவை எவை?

நீரோடை, தாமரை மலர்கள்

3. பாரதிதாசன் வேல் ஏந்திய வீரர்கள் எதனை எழுதுமாறு வேண்டினர்?

பாரதிதாசன் வேல் ஏந்திய வீரர்கள் மலை போன்ற தங்களின் தோள்களின் அழகை எழுதுமாறு வேண்டினர்

4. பாரதிதாசன் இயற்றியுள்ள நூல்கள் யாவை?

பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம்

5. பெண்கள் எதனைக் கவிதையாக எழுதச் சொன்னார்?

பெண்கள் அன்பினைக் கவிதையாக எழுதச் சொன்னார்.

சிறு வினா

பாரதிதாசன் குறிப்பு வரைக

  • பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்
  • கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர்
  • கதை, கவிதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்
  • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்பட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment