பாடம் 5.3 வாழ்விக்கும் கல்வி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 5.3 – “வாழ்விக்கும் கல்வி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி.
- நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி.
- வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
- உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது.
- இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ______.
- கல்வி
- காலம் அறிதல்
- வினையறிதல்
- மடியின்மை
விடை : காலம் அறிதல்
2. கல்வியில்லாத நாடு ________ வீடு.
- விளக்கில்லாத
- பொருளில்லாத
- கதவில்லாத
- வாசலில்லாத
விடை : விளக்கில்லாத
3. பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர் ________.
- திருக்குறளார்
- திருவள்ளுவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
விடை : பாரதியார்
4. உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- உயர் + வடைவோம்
- உயர் + அடைவோம்
- உயர்வு + வடைவோம்
- உயர்வு + அடைவோம்
விடை : உயர்வு + அடைவோம்
5. இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.
- இவைஎல்லாம்
- இவையெல்லாம்
- இதுயெல்லாம்
- இவயெல்லாம்
விடை : இவையெல்லாம்
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. செல்வம்
விடை : இவ்வுலக வாழ்க்கைக்கு பொருட்செல்வம் முக்கியமானது
2. இளமைப்பருவம்
விடை : இளமைப்பருவம் கல்விக்குரிய பருவம் ஆகும்
3. தேர்ந்தெடுத்து
விடை : நல்ல நூல்களைத் தேர்ந்துதெடுத்து படிக்க வேண்டும்
குறு வினா
1. மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
எதிர்காலத்தில் பிற உயிரினங்கள் என்னவாகும் என்பதைச் சொல்ல முடியும். ஆனால் மனிதப் பிறவியின் எதிர்காலத்தை கூறவே முடியாது.
மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும்.
2. கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
கல்வி அறிவு இல்லாதவர்கள் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகின்றார்
3. நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
படிக்க வேண்டிய நூல்களை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.
சிறு வினா
1. கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
- இந்த உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும்; அழிந்துவிடும்.
- ”இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இங்க[ ஒரு பெரிய ஆலமரம் இருந்த, எங்கே?” என்றால் ”அது புயலில் விழுந்து விட்டது” என்போம்
- இங்கிருந்த பெரிய கட்டடம் எங்கே என்றால் ”அது மழையால் இடிந்து விட்டது” என்பர்.
- பத்து ஆண்டுகளுக்கு முன் 2 இலட்ச ரூபாய் வைத்திருந்தவர். இன்று 2 ரூபாய் கடன் கேட்கிறார்” என்போம்.
- எல்லாம் அழியும், ஆனால் கல்வி அப்படியன்று
- பத்து ஆண்டுகளுக்கு முன்னே பட்டம் பெற்றவர். இன்று பத்தாம் வகுப்பு ஆகி விட்டார்” என்று சொல்ல முடியாது ஏனென்றால் கல்வி அழியாதது
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை” என்று வள்ளுவர் கூறுகிறார்.
2. கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
- கல்வி ஓர் ஒளிவிளக்கு. அதாவது இருக்கும் இடத்தை ஒளிமயமாக ஆக்கும்.
- அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிக் கற்ற கல்வியைப் பலருக்கும் அளிக்க வேண்டும். அப்படிப் பலருக்கும் ஒளி தருவதுதான் கல்வி.
- கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு. விளக்கில்லாத வீட்டில் யார் குடியிருப்பார்கள்?
- வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.
சிந்தனை வினா
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
- உண்மைப் பொருளை விளக்க வேண்டும்.
- நன்னெறிப் பாதை காட்ட வேண்டும்.
- அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இருக்க வேண்டும்.
- எளிமை, தெளிவு ஆகியவை கொண்ட நடையில் இருத்தல் வேண்டும்.
– ஆகியவையே நல்ல நூலின் இயல்புகளாக நான் கருதுவதாகும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. திருக்குறளார் என்று அழைக்கப்படுபவர் …………….
- மு.வ.
- திரு.வி.க.
- வீ.முனிசாமி
- கவிமணி
விடை : வீ.முனிசாமி
2. வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூல்களை எழுதியவர் …………….
- மு.வ.
- வீ.முனிசாமி
- திரு.வி.க.
- கவிமணி
விடை : வீ.முனிசாமி
3. உலகில் மிகவும் அருமையாது ……………….
- காலம்
- கல்வி
- பொருள்
- செல்வம்
விடை : காலம்
4. ____________, _____________ போனால் வராது
- கல்வியும், நேரமும்
- கல்வியும், செல்வமும்
- காலமும், நேரமும்
- கல்வியும், காலமும்
விடை : காலமும், நேரமும்
5. _____________ ஓர் ஒளி விளக்கு
- கல்வி
- செல்வம்
- பொருள்
- காலம்
விடை : காலம்
6. நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்று கூறியவர் …………….
- மு.வ.
- திரு.வி.க.
- திருவள்ளுவர்
- கவிமணி
விடை : திருவள்ளுவர்
குறு வினா
1. திருக்குறளார் வீ.முனிசாமி படைத்த நூல்கள் யாவை?
வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை
2. மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் பொருள் விளங்கும் என்பதற்கு திருக்குறளனார் கூறும் ஒப்புமை யாது?
மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் பொருள் விளங்கும் என்பதற்கு திருக்குறளனார் கூறும் ஒப்புமை கத்திரிக்காய், வாழைக்காய், கீரை இவை எல்லாம் பூமிக்கு மேல் விளையும். சில மண்ணுக்குள்ளே இருக்கும் அதை நாம் தான் தோண்டி எடுக்க வேண்டும் என்பதாகும்
3. திருக்குறளனாரின் புகழ் பெற்ற நூல் எது?
உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்
4. பள்ளி பற்றி பாரதியாரின் கருத்து யாது?
நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார் அதனால் தான் “பள்ளித் தலமனைத்தும் கோயயில் செய்குவோம்” என்றார்.
5. விளக்கில்லாத வீடு எது?
கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு ஆகும்.
6. கல்வி அறிவுல்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் யார்?
திருவள்ளுவரே கல்வி அறிவுல்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் ஆவர்.
7. எவை அழியும் என்பதற்கு திருக்குறளனார் கூறும் உவமைகள் எவை?
ஆலமரம், பெரிய கட்டடம், இரண்டு இலட்ச ரூபாய் பணம்