பாடம் 5.5 ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 5.5 – “ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதீப்பிடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.
- 40
- 42
- 44
- 46
விடை : 42
2. எழுதினான் என்பது _______.
- பெயர்ப் பகுபதம்
- வினைப் பகுபதம்
- பெயர்ப் பகாப்பதம்
- வினைப் பகாப்பதம்
விடை : வினைப் பகுபதம்
3. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.
- நான்கு
- ஐந்து
- ஆறு
- ஏழு
விடை : ஆறு
4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______.
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
விடை : இடைநிலை
பொருத்துக.
1. பெயர்ப் பகுபதம் | அ. வாழ்ந்தான் |
2. வினைப் பகுபதம் | ஆ. மன் |
3. இடைப் பகாப்பதம் | இ. நனி |
4. உரிப் பகாப்பதம் | ஈ. பெரியார் |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
சரியான பகுபத உறுப்பை எழுதுக.
1. போவாள் = போ + வ் + ஆள்
- போ – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி
2. நடக்கின்றான் – நட + க் + கின்று + ஆன்
- நட – பகுதி
- க் – சந்தி
- கின்று – நிகழ்கால இடைநிலை
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக.
1. பார்த்தான் = பார் + த் + த் + ஆன்
- பார் – பகுதி
- த் – சந்தி
- த் – நிகழ்கால இடைநிலை
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
2. பாடுவார் = பாடு + வ் + ஆர்
- பாடு – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஆர் – ஆண்பால் வினைமுற்று விகுதி
குறு வினா
1. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?
ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒரு மொழி என்பர்
2. பதத்தின் இருவகைகள் யாவை?
பகுபதம், பகாப்பதம் என இரு வகைப்படும்
3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
- சாரியை
- விகாரம்
சிறு வினா
1. விகுதி எவற்றைக் காட்டும்?
திணை, பால், முற்று, எச்சம் ஆகியவற்றை காட்டும்
2. விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
(எ.கா.)
வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் + அன் + அன்
- வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
- த் – சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அன் – சாரியை
- அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.
3. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும்
- பொருட் பெயர்ப்பகுபதம்
- இடப் பெயர்ப்பகுபதம்
- காலப் பெயர்ப்பகுபதம்
- சினைப் பெயர்ப்பகுபதம்
- பண்புப் பெயர்ப்பகுபதம்
- தொழில்பெயர்ப்பகுபதம்
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் ________________
- சமண முனிவர்கள்
- பவணந்தி முனிவர்
- தொல்காப்பியர்
- திருவள்ளுவர்
விடை : பவணந்தி முனிவர்
2. நன்னூலின்படி நெடில் ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.
- 39
- 40
- 41
- 42
விடை : 42
3. குறில் ஓரெழுத்து ஒருமொழிகள் __________.
- நொ, து
- கி, கெ
- ரெ, ரி
- செ, வெ
விடை : நொ, து
சிறு வினா
1. பகுபதம் என்றால் என்ன?
சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர்.
2. வினைப்பகுபதம் என்றால் என்ன? சான்று தருக
பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.
(எ.கா.) உண்கின்றான் – உண் + கின்று + ஆன்
3. பகாப்பதம் என்றால் என்ன?
பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.
இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.
4. பகாப்பதம் வகையினைக் கூறுக
பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.
- பெயர்ப் பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று.
- வினைப் பகாப்பதம் – நட, வா, படி, வாழ்.
- இடைப் பகாப்பதம் – மன், கொல், தில், போல்.
- உரிப் பகாப்பதம் – உறு, தவ, நனி, கழ
4. ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும் சிலவற்றை எழுதுக
ஆ- பசு | ஈ- கொடு | ஊ- இறைச்சி |
ஏ- அம்பு | ஐ- தலைவன் | ஓ – மதகுநீர் தாங்கும் பலகை |
கா- சோலை | கூ- பூமி | கை- ஒழுக்கம் |
கோ-அரசன் | சா- இறந்துபோ | சீ- இகழ்ச்சி |
சே- உயர்வு | சோ- மதில் | தா- கொடு |
தீ- நெருப்பு | தூ- தூய்மை | தே- கடவுள் |
தை- தைத்தல் | நா- நாவு | நீ- முன்னிலை ஒருமை |
நே- அன்பு | நை- இழிவு | நோ- வறுமை |
பா- பாடல் | பூ- மலர் | பே – மேகம் |
பை- இளமை | போ- செல் | மா- மாமரம் |
மீ- வான் | மூ – மூப்பு | மே- அன்பு |
மை- அஞ்சனம் | மோ- மோத்தல் | யா- அகலம் |
வா- அழைத்தல் | வீ- மலர் | வை- புல் |
வெள- கவர் | நொ- நோய் | து- உண் |
மொழியை ஆள்வோம்!
கீழ்க்காணும் சொற்களை அறுவகைப் பெயர்களாக வகைப்படுத்துக.
நல்லூர், வடை, கேட்டல், முகம், அன்னம், செம்மை, காலை, வருதல், தோகை, பாரதிதாசன், பள்ளி, இறக்கை, பெரியது, சோலை, ஐந்து மணி, விளையாட்டு, புதன்
பொருள் | இடம் | காலம் |
வடை | நல்லூர் | காலை |
அன்னம் | பள்ளி | புதன் |
பாரதிதாசன் | சோலை | ஐந்து மணி |
சினை | குணம் | தொழில் |
முகம் | செம்மை | கேட்டல் |
தோகை | பெரியது | வருதல் |
இறக்கை | விளையாட்டு |
அறிந்து பயன்படுத்துவோம்
மூவிடம்
இடம் மூன்று வகைப்படும்.
அவை 1. தன்மை 2. முன்னிலை 3. படர்க்கை.
தன்மை
தன்னைக் குறிப்பது தன்மை.
(எ.கா.) நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.
முன்னிலை
முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.
(எ.கா.) நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.
படர்க்கை
தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை.
(எ.கா.) அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இவை.
சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.
(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன்)
1. ________ பெயர் என்ன?
விடை : உன்
2. ________ ஏழாம் வகுப்பு மாணவர்கள்.
விடை : நாம்
3. ________ எப்படி ஓடும்?
விடை : அவை
4. _______ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
விடை : நீ
5. ________ வந்து கொண்டு இருக்கிறார்கள்.
விடை : அவைகள்
பின்வரும் தொடர்களில் மூவிடப் பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.
- எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
- இவர் தான் உங்கள் ஆசிரியர்.
- நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை.
- எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை. நீயே கூறு.
- உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?
தன்மை | முன்னிலை | படர்க்கை |
எங்கள் | நீர் | இவர் |
எனக்கு | உங்கள் | அது |
நானும் | நீ | |
உங்களோடு |
மொழியோடு விளையாடு!
கீழே உள்ள குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டத்தில் எழுத்துகளை நிரப்புக.
1. காலையில் பள்ளி மணி ________________
விடை : ஒலிக்கும்
2. திரைப்படங்களில் விலங்குகள் ________________காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
விடை : நடிக்கும்
3. கதிரவன் காலையில் கிழக்கே ________________
விடை : உதிக்கும்
4. நாள்தோறும் செய்தித்தாள் ________________ வழக்கம் இருக்க வேண்டும்.
விடை : வாசிக்கும்
ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.
1. _____________ புல்லை மேயும்.
விடை : ஆ
2. _____________ சுடும்.
விடை : தீ
3. _____________ பேசும்.
விடை : கை
4. _____________ பறக்கும்.
விடை : ஈ
5. _____________ மணம் வீசும்
விடை : பூ
பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.
- தா – கொடு
- தீ = நெருப்பு
- பா = பாடல்
- தை = தைத்தல்
- வை = புல்
- மை = அஞ்சனம்
பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.
ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி
1. ஆறு
- ஈ ஆறு கால்களை உடையது.
- தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது
2. விளக்கு
- பாடலின் பொருளிளை விளக்கு
- அம்மா வீட்டில் விளக்கு ஏற்றினார்
3. படி
- பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள்
- இளமையில் படித்தல் அவசியம்
4. சொல்
- பெரியோர் சொல் கேள்
- தஞ்சை சொல் (நெல்) வளம் மிகுந்தது
5. கல்
- இளமையில் கல்
- எறும்பு ஊர கல்லும் தேயும்
6. மாலை
- பூவினால் செய்யப்படுவது மாலை
- சூரியன் மறைவது மாலை நேரம்
7. இடி
- மழையின் போது இடி இடித்தது
- மரத்தின் மீது வண்டி இடித்து விட்டது
நிற்க அதற்கு தக…
கலைச்சொல் அறிவோம்.
- கோடை விடுமுறை – Summer Vacation
- நீதி – Moral
- குழந்தைத்தொழிலாளர் – Child Labour
- சீருடை – Uniform
- பட்டம் – Degree
- வழிகாட்டுதல் – Guidance
- கல்வியறிவு – Literacy
- ஒழுக்கம் – Discipline