Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 6.1 – ஒரு வேண்டுகோள்

 பாடம் 6.1 ஒரு வேண்டுகோள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 6.1 – “ஒரு வேண்டுகோள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
  • வனப்பு – அழகு
  • நெடி – நாற்றம்
  • பூரிப்பு – மகிழ்ச்சி
  • மழலை – குழந்தை
  • மேனி – உடல்

பாடலின் பொருள்

கலையுலகப் படைப்பாளர்களே! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே உங்களுக்கு ஒரு மனித சமுதாயத்தின் வேண்டுகோள்!

நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீசவேண்டும். உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும். சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

நூல் வெளி

  • தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
  • இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
  • இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
  • மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
  • பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

மதீப்பிடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன.

  1. களைப்பு
  2. வனப்பு
  3. மலைப்பு
  4. உழைப்பு

விடை : வனப்பு

2. மிளகாய் வற்றலின் _________ தும்மலை வரவழைக்கும்.

  1. நெடி
  2. காட்சி
  3. மணம்
  4. ஓசை

விடை : நெடி

3. அன்னை தான் பெற்ற ______ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.

  1. தங்கையின்
  2. தம்பியின்
  3. மழலையின்
  4. கணவனின்

விடை : மழலையின்

4. வனப்பில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

  1. வனம் + இல்லை
  2. வனப்பு + இல்லை
  3. வனப்பு + யில்லை
  4. வனப் + பில்லை

விடை : வனப்பு + இல்லை

5. வார்ப்பு + எனில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. வார்ப்எனில்
  2. வார்ப்பினில்
  3. வார்ப்பெனில்
  4. வார்ப்பு எனில்

விடை : வார்ப்பெனில்

நயம் அறிக

ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச் சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.

  1. பிரும்மாக்களே – சேர்ப்பவர்களே
  2. உடைப்பவனின் – உழவனின்
  3. சிகரங்களா – அலைகளா – காடுகளா
  4. பள்ளத்தாக்குகளா – தோட்டங்களா
  5. வனப்பில்லை – உயிர்ப்பில்லை

குறு வினா

1. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?

தாய்மையின் ஓவியத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.

2. ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?

இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயம் இருக்க வேண்டும்.

மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

சிறு வினா

1. சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

  • நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையை செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.
  • உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈர மண்ணின் மணம் வீச வேண்டும்.
  • தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும், பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.
  • சிறு குழந்தையின் சித்திரத்தை தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.
  • ஆல்பஸ் மலைச் சிகரஙகள் உள்ளிட்ட இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயம் இருக்க வேண்டும்.
  • மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

சிந்தனை வினா

நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?

நான் ஒரு ஓவியக்கலைஞராக இருந்தால் உயிரோட்டமுள்ள ஓவியங்களையும் மனிதநேயச் சிந்தனைய வெளிப்படுத்தும் வகையில் மக்கள் விழிப்படைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஓவியங்களையும் உருவாக்குவேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஒரு வேண்டுகோள் என்னும் கவிதையை எழுதியவர் …………….

  1. காளமேகப்புலவர்
  2. தேனரசன்
  3. சுரதா
  4. முடியரசன்

விடை : தேனரசன்

2. நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையை செதுக்கினால், அதில் …………………… நாற்றம் வீச வேண்டும்.

  1. ஈரமண்
  2. அன்பு
  3. பால்மணம்
  4. வியர்வை

விடை : வியர்வை

3. உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால் ………………… அதில் மணம் வீச வேண்டும்.

  1. அன்பு
  2. பால்மணம்
  3. ஈரமண்
  4. வியர்வை

விடை : ஈரமண்

4. தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் …………….. நிறைந்திருக்க வேண்டும்.

  1. அன்பு பாசம்
  2. ஈரமண்
  3. வியர்வை
  4. பால்மணம்

விடை : அன்பு பாசம்

5. சிறுகுழந்தையின் சித்திரத்தை தீட்டினால் அதில் ………………. கமழ வேண்டும்.

  1. பால்மணம்
  2. அன்பு பாசம்
  3. ஈரமண்
  4. வியர்வை

விடை : பால்மணம்

சேர்த்து எழுதுக

  1. கலை+ உலகம் = கலையுலகம்
  2. ஈரம் + மண் = ஈரமண்
  3. சித்திரம் + ஆக்கினால் = சித்திரமாக்கினால்
  4. வழித்து + எடுக்குமாறு = வழித்தெடுக்குமாறு
  5. முகம் + பொலிவு = முகப்பொலிவு
  6. உயிர்ப்பு + இல்லை = உயிர்ப்பில்லை

சேர்த்து எழுதுக

1. பிரும்மாக்கள்அ. அழகு
2. நெடிஆ. மகிழ்ச்சி
3. வனப்புஇ. படைப்பாளர்கள்
4. பூரிப்புஈ. நாற்றம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

குறு வினா

1. பாறை உடைப்பவரின் சிலையை செதுக்கினால், அதில் என்ன வீச வேண்டும்?

பாறை உடைப்பவரின் சிலையை செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.

2. எதில் ஈர மண்ணின் மணம் வீச வேண்டும்?

உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈர மண்ணின் மணம் வீச வேண்டும்.

3. தேனரசன் எழுதியுள்ள கவிதை நூல்கள் எவை?

மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

4. தேனரசன் எந்தெந்த இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்?

வானம்பாடி, குயில், தென்றல்

5. இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் என்று கவிஞர் தேனரசன் குறிப்பிடுவன எவை?

ஆல்ப்ஸ் மலைச்சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல், அலைகள், அமேசான் களாடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் ஆகியன இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் என்று கவிஞர் தேனரசன் குறிப்பிடுகிறார்.

சிறு வினா

தேனரசன் – குறிப்பு வரைக 

  • தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
  • இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
  • இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையாேடு வெளிப்படும்.
  • மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment