Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 6.5 – தொழிற்பெயர்

 பாடம் 6.5 தொழிற்பெயர்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 6.5 – “தொழிற்பெயர்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?

  1. எழுது
  2. பாடு
  3. படித்தல்
  4. நடி

விடை : படித்தல்

2. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?

  1. ஊறு
  2. நடு
  3. விழு
  4. எழுதல்

விடை : ஊறு

பொருத்துக

1. ஒட்டம்முதனிலைத் தொழிற்பெயர்
2. பிடிமுதனிலை திரிந்த தொழிற்பெயர்
3. சூடுவிகுதி பெற்ற தொழிற்பெயர்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

சிறு வினா

1. வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப் பெயர்கள்? விளக்கம் தருக.

வளர்தல், பேசுதல் விகுதி பெற்ற தொழிற்பெயர். தல் என்ற தொழில்பெயர் விகுதி பெற்று வருவதால் இஃது விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆயிற்று

2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.

முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.

சான்று : விடு – வீடு

கூடுதல் வினாக்கள்

1. முதனிலை என்றால் என்ன?

ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர்.

2. முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன?

முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.

(எ.கா.)

செல்லமாக ஓர் அடி அடித்தான்
அறிஞர் அண்ணா தம் பேச்சால் புகழ் பெற்றார்

இவற்றில் அடிக்கோடிட்ட சொற்கள் விகுதி பெறாமல் தம்பொருளை உணர்த்துகின்றன.

3. விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?

வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.

3. தொழிற்பெயர் விகுதிகள் யாவை? சான்றுடன் தருக

தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை ஆகியன தொழில்பெயர் விகுதிகள் ஆகும்.

  • தருதல் – தல்
  • கூறல் – அல்
  • ஆட்டம் – அம்
  • விலை – ஐ
  • வருகை – கை
  • பார்வை – வை
  • போக்கு – கு
  • நட்பு – பு
  • மறைவு – வு
  • மறதி – தி
  • உணர்ச்சி – சி
  • கல்வி – வி
  • செய்யாமை – மை

மொழியை ஆள்வோம்!

கவிதையை நிறைவு செய்க.

வானும் நிலவும் அழகு

வயலும் பயிரும் அழகு

கடலும் அலையும் அழகு

காற்றும் குளிரும் அழகு

படம் உணர்த்தும் கருத்தை ஐந்து வரிகளில் எழுதுக.

Class 7 Tamil Chapter 6.5 படம் உணர்த்தும் கருத்தை ஐந்து வரிகளில் எழுதுக.

ஒன்று கூடுவோம் நாம் ஒன்று கூடுவோம்

பச்சை மரங்களைக் காப்போம்

பசுமையை நேசிப்போம்! சுவாசிப்போம்!

இனியொரு விதி செய்வோம்

இயற்கையைப் போற்றவே!

கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச் சொல்லாகக் கொண்டு சொற்றொடர் உருவாக்குக.

(ஓவியக்கலை, இசை, கட்டடக்கலை, வண்ணங்கள்)

1. ஓவியக்கலை

ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.
நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை.

2. இசை

இசை முத்தமிழுள் ஒன்று
மனதிற்கு இனிமை தருவது இசை

3. கட்டக்கலை

கட்டக்கலையில் தமிழர்கள் சிறந்திருந்தனர்
சிறந்த கலைகளுள் ஒன்று கட்டக்கலை

4. வண்ணங்கள்

வண்ணங்கள் ஓவியத்திற்கு அழகினை அளிக்கிறது
மயில் தோகையில் எண்ணற்ற வண்ணங்கள்

இடைச்சொல் ’ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.

(எ.கா) வீடு கட்டினான் – வீடு + ஐ + கட்டினான் = வீட்டைக் கட்டினான்

1. கடல் பார்த்தாள்

  • கடல் + ஐ + பார்த்தான் = கடலைப் பார்த்தான்

2. புல் தின்றது

  • புல் + ஐ + தின்றது = புல்லைத் தின்றது

3. கதவு தட்டும் ஓசை

  • கதவு + ஐ + தட்டும் + ஓசை = கதவைத் தட்டும் ஓசை

4. பாடல் பாடினாள்

  • பாடல் + ஐ + பாடினாள் = பாடலைப் பாடினாள்

5. அறம் கூறினார்

  • அறம் + ஐ + கூறினார் = அறத்தைக் கூறினார்

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் புதிரைப் படித்து விடையைக் கண்டறிக.

1. நான் இனிமை தரும் இசைக் கருவி. எனது பெயர் ஆறு எழுத்துகளை உடையது. அதில் இறுதி நான்கு எழுத்துகள் விலை உயர்ந்த ஒரு உலோகத்தைக் குறிக்கும். முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் விலங்கின் வேறு பெயர் கிடைக்கும். நான் யார்?

விடை : மிருதங்கம்

2. நான் ஒரு காற்றுக் கருவி. நான் புல் வகையைச் சேர்ந்த தாவரத்திலிருந்து உருவாக்கப்படுகிறேன். எனது பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டது. முதல் இரண்டு எழுத்துகள் ஒரு தாவர வகையைக் குறிக்கும். இறுதி மூன்று எழுத்துகள் எனது வடிவத்தைக் குறிக்கும். நான் யார்?

விடை : புல்லாங்குழல்

பின்வரும் பத்திகளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க

சாலை விபத்துகளைத் தவிர்க்கச் சாலைவிதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்கம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.

ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.

வினாக்கள்

1. சாலையின் எந்தப் பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்?

சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும்

2. விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக் குறிக்கும்?

சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.

3. எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை?

இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.

4. ஒருவழிப் பாதை எனப்படுவது யாது?

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரே சாலையில் இரு கூறாக பிரிக்காமல் வாகனங்கள் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ அமைக்கப்பட்டுள்ளவை ஒரு வழிப்பாதை ஆகும்

5. வாகனங்களைப் பின் தொடர்வதற்கான முறையைக் கூறு.

வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  • படைப்பாளர் – Creator
  • சிற்பம் – Sculpture
  • கலைஞர் – Artist
  • கல்வெட்டு – Inscriptions
  • கையெழுத்துப்படி – Manuscripts
  • அழகியல் – Aesthetics
  • தூரிகை – Brush
  • கருத்துப்படம் – Cartoon
  • குகை ஓவியங்கள் – Cave paintings
  • நவீன ஓவியம் – Modern Art

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment