Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 7.5 – அணி இலக்கணம்

 பாடம் 7.5 அணி இலக்கணம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 7.5 – “அணி இலக்கணம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

மதிப்பீடு

குறு வினா

1. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.

ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை உவமை அல்லது உவமாகம் என்பர்.

உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். “போல” “போன்ற” என்பவை உவம உருபுகளாகும்.

2. உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி

உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி

கூடுதல் வினாக்கள்

1. அணி என்பதன் பொருள் யாது?

அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.

2. அணி என்றால் என்ன?

ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்

2. இல்பொருள் உவமை அணி என்றால் என்ன?

உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்று பெயர்

3. எடுத்துக்காட்டு உவமை அணி என்றால் என்ன?

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

4. உவமை அணி என்றால் என்ன?

உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.

5. உவம உருபுகளாக வருவது எவை?

போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாக வரும்

கற்பவை  கற்றபின்

பின்வரும் தொடர்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக.

தொடர்கள்உவமைஉவமேயம்உவம உருபு
மலரன்ன பாதம்மலர்பாதம்அன்ன
தேன் போன்ற தமிழ்தேன்தமிழ்போன்ற
புலி போலப் பாய்ந்தான் சோழன்புலிபாய்ந்தான் சோழன்போலப்
மயிலொப்ப ஆடினாள் மாதவிமயில்ஆடினாள் மாதவிஒப்ப

மொழியை  ஆள்வோம்!

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

பனை மரமே பனை மரமே
ஏன் வளந்தே இத் தூரம்?
குடிக்கப் பதனியானேன்!
கொண்டு விற்க நுங்கானேன்!
தூரத்து மக்களுக்குத்
தூதோலை நானானேன்!
அழுகிற பிள்ளைகட்குக்
கிலுகிலுப்பை நானானேன்!
கைதிரிக்கும் கயிறுமானேன்!
கன்றுகட்டத் தும்புமானேன்!

– நாட்டுப்புறப்பாடல்

வினாக்கள்

1. பனை மரம் தரும் உணவுப் பொருள்கள் யாவை?

பதனி, நுங்கு

2. பனை மரம் யாருக்குக் கிலுகிலுப்பையைத் தரும்?

பனைமரம் அழகின்ற பிள்ளைகளுக்கு கிலுகிலுப்பையைத் தரும்

3. ‘தூதோலை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

தூது + ஓலை

4. பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.

பதனி, நுங்கு, ஓலை, கிலுகிலுப்பை, கயிறு, தும்பு

5. பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.

பனைமரம்

மொழியோடு  விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்.

தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களையும் அவற்றின் சிறப்பையும் அறிவோம்.

Class 7 Tamil Chapter 7.5 தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களையும் அவற்றின் சிறப்பையும் அறிவோம்.

இடமிருந்து வலம்

1. பின்னலாடை நகரம்

  • திருப்பூர்

2. மலைகளின் அரசி

  • ஊட்டி

6. தமிழகத்தின் தலைநகரம்

  • சென்னை

13. நெற்களஞ்சியம்

  • தஞ்சாவூர்

வலமிருந்து இடம்

3. மலைக்கோட்டை நகரம்

  • திருச்சி

5. ஏழைகளின் ஊட்டி

  • ஏற்காடு

8. மாங்கனித் திருவிழா

  • காரைக்கால்

11. மஞ்சள் மாநகரம்

  • ஈரோடு

மேலிருந்து கீழ்

1. பூட்டு நகரம்

  • திண்டுக்கல்

3. தேர் அழகு நகரம்

  • திருவாரூர்

4. தெற்கு எல்லை

  • கன்னியாகுமரி

7. புலிகள் காப்பகம்

  • முண்டந்துறை

கீழிருந்து மேல்

9. பட்டாசு நகரம்

  • சிவகாசி

10. தூங்கா நகரம்

  • மதுரை

12. மலைகளின் இளவரசி

  • கொடைக்கானல்

14. கர்மவீரர் நகரம்

  • விருதுநகர்

தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.

1. என் தாயார் என்னை _____________ காத்து வளர்த்தார். (கண்ணை இமை காப்பது போல / தாயைக் கண்ட சேயைப் போல)

விடை : கண்ணை இமை காப்பது போல

2. நானும் என் தோழியும் ______________ இணைந்து இருப்போம். (இஞ்சி தின்ற குரங்கு போல / நகமும் சதையும் போல)

விடை : நகமும் சதையும் போல

3. திருவள்ளுவரின் புகழை ______________ உலகமே அறிந்துள்ளது. (எலியும் பூனையும் போல / உள்ளங்கை நெல்லிக்கனி போல)

விடை : உள்ளங்கை நெல்லிக்கனி போல

4. அப்துல் கலாமின் புகழ் ______________________ உலகெங்கும் பரவியது. (குன்றின்மேலிட்ட விளக்கு போல / குடத்துள் இட்ட விளக்கு போல)

விடை : குன்றின்மேலிட்ட விளக்கு போல

5. சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் _______________ என் மனத்தில் பதிந்தன. (கிணற்றுத்தவளை போல / பசுமரத்தாணி போல)

விடை : பசுமரத்தாணி போல

கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.

1. திருநெல்வேலி

விடை : திரு, நெல், வேலி, வேல்

2. நாகப்பட்டினம்

விடை : நாகம், பட்டினம். பட்டி நாடி. கட்டி, கடி, படி

3. கன்னியாகுமரி

விடை : கன்னி, கனி, குமரி, மரி, கரி, மன்னி

4. செங்கல்பட்டு

விடை : செங்கல், கல், பட்டு, படு, செல், பல்

5. உதகமண்டலம்

விடை : மண்டலம், மண், கண், கலம், உலகம், உண்

6. பட்டுக்கோட்டை

விடை : பட்டு, கோட்டை, கோடை, படை, கோடு, படு

நிற்க  அதற்குத்  தக…

கலைச்சொல் அறிவோம்.

  • நாகரிகம் – Civilization
  • நாட்டுப்புறவியல் – Folklore
  • அறுவடை – Harvest
  • நெற்பயிர் – Paddy
  • பயிரிடுதல் – Cultivation
  • வேளாண்மை – Agriculture
  • கவிஞர் – Poet
  • அயல்நாட்டினர் – Foreigner
  • நீர்ப்பாசனம் – Irrigation
  • உழவியல் – Agronomy

 

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment